Devan Varum Naalathilae - தேவன் வரும் நாளதிலே
தேவன் வரும் நாளதிலே
1. தேவன் வரும் நாளதிலே – என் நண்பா
பூமியிலுள்ள மனுஷரெல்லாம்
ஏகமாகக் கூடுவார்கள் – என் நண்பா
இயேசு முன்னே சேருவார்கள்
2. புத்திகெட்ட மானிடர்கள் – கத்திக் கத்தி அலறுவார்கள்
சுத்தமுள்ள மானிடர்கள் – என் நண்பா
கர்த்தனேசைச் சேர்ந்திடுவார்
3. தூஷணங்கள் பேசினோரை – மாசணுகா நாளதிலே
மோசமுள்ள தீ நரகில் – என் நண்பா
நாசமாகத் தள்ளிடுவார்!
4. மறுதலித்த பேர்களெல்லாம் – பரிதபிப்பார் தீ நரகில்
நெறி தவறிப் போகாமலே – என் நண்பா!
சரிவரவே வேதங் கேளாய்!
5. தீயகுணப் பாதகரும் – மாயகுணப் பேதைகளும்
பேயினுட தூதர்களும் – என் நண்பா!
போயழிவார் தீ நரகில்!
6. அண்டபரனை மறந்து கண்டதெல்லாம் தெய்வமென்று
தெண்டனிட்ட பாவியெல்லாம் – என் நண்பா!
சென்றழுவார் தீ நரகில்
7. ஓடுவார்க ளங்குமிங்கும் – சாடுவார்கள் தாகத்தாலே
தேடுவார்கள் தண்ணீரையே – என் நண்பா!
வாடுவார்கள் கிட்டாமலே!
8. தள்ளை தந்தை யானவர்கள் – பிள்ளைகளைப் பார்த்தழுவார்
துள்ளித் துள்ளிப் பார்த்தழுவார் – என் நண்பா!
எள்ளளவு மோயமாட்டார்!
9. ஐயையோ, சொல்வதெல்லாம் பொய்யல்லோ என்றிருந்தோம்
தீயல்லோ பிடித்ததென்பார் – என் நண்பா!
பேயல்லோ கெடுத்ததென்பார்!
Devan Varum Naalathilae - தேவன் வரும் நாளதிலே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Devan Varum Naalathilae - தேவன் வரும் நாளதிலே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Devan Varum Naalathilae - தேவன் வரும் நாளதிலே PPT Devan Varum Naalathilae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum