Bible
Lyrics PPT

Devan Varum Naalathilae PPT - தேவன் வரும் நாளதிலே

1. தேவன் வரும் நாளதிலே - என் நண்பா
பூமியிலுள்ள மனுஷரெல்லாம்
ஏகமாகக் கூடுவார்கள் - என் நண்பா
இயேசு முன்னே சேருவார்கள்

Slide 1

1. தேவன் வரும் நாளதிலே – என் நண்பா பூமியிலுள்ள மனுஷரெல்லாம் ஏகமாகக் கூடுவார்கள் – என் நண்பா இயேசு முன்னே சேருவார்கள்

Slide 2

2. புத்திகெட்ட மானிடர்கள் – கத்திக் கத்தி அலறுவார்கள் சுத்தமுள்ள மானிடர்கள் – என் நண்பா கர்த்தனேசைச் சேர்ந்திடுவார்

Slide 3

3. தூஷணங்கள் பேசினோரை – மாசணுகா நாளதிலே மோசமுள்ள தீ நரகில் – என் நண்பா நாசமாகத் தள்ளிடுவார்!

Slide 4

4. மறுதலித்த பேர்களெல்லாம் – பரிதபிப்பார் தீ நரகில் நெறி தவறிப் போகாமலே – என் நண்பா! சரிவரவே வேதங் கேளாய்!

Slide 5

5. தீயகுணப் பாதகரும் – மாயகுணப் பேதைகளும் பேயினுட தூதர்களும் – என் நண்பா! போயழிவார் தீ நரகில்!

Slide 6

6. அண்டபரனை மறந்து கண்டதெல்லாம் தெய்வமென்று தெண்டனிட்ட பாவியெல்லாம் – என் நண்பா! சென்றழுவார் தீ நரகில்

Slide 7

7. ஓடுவார்க ளங்குமிங்கும் – சாடுவார்கள் தாகத்தாலே தேடுவார்கள் தண்ணீரையே – என் நண்பா! வாடுவார்கள் கிட்டாமலே!

Slide 8

8. தள்ளை தந்தை யானவர்கள் – பிள்ளைகளைப் பார்த்தழுவார் துள்ளித் துள்ளிப் பார்த்தழுவார் – என் நண்பா! எள்ளளவு மோயமாட்டார்!

Slide 9

9. ஐயையோ, சொல்வதெல்லாம் பொய்யல்லோ என்றிருந்தோம் தீயல்லோ பிடித்ததென்பார் – என் நண்பா! பேயல்லோ கெடுத்ததென்பார்!

Devan Varum Naalathilae - தேவன் வரும் நாளதிலே PowerPoint

Devan Varum Naalathilae - தேவன் வரும் நாளதிலே Lyrics

Devan Varum Naalathilae PPT

Download Devan Varum Naalathilae - தேவன் வரும் நாளதிலே Tamil PPT