Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 10:25 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 10 Jeremiah 10:25

எரேமியா 10:25
உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.

Tamil Indian Revised Version
உம்மை அறியாத தேசங்களின்மேலும், உமது பெயரைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபை அழித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் குடியிருப்புகளை அழித்தார்களே.

Tamil Easy Reading Version
நீர் கோபத்தோடு இருந்தால், பின் அந்நிய நாடுகளைத் தண்டியும். அவர்கள் உம்மை அறிவதில்லை, மதிப்பதுமில்லை. அந்த ஜனங்கள் உம்மைத் தொழுதுகொள்வதுமில்லை. அந்த நாடுகள் யாக்கோபின் குடும்பத்தை அழித்தது, அவர்கள் இஸ்ரவேலை முழுமையாக அழித்தனர், அவர்கள் இஸ்ரவேலரின் தாய் நாட்டையும் அழித்தனர்.

Thiru Viviliam
⁽உம்மை அறியாத␢ வேற்றினத்தார் மேலும்,␢ உம் பெயரைச் சொல்லி மன்றாடாத␢ குடும்பத்தார் மேலும்␢ உன் சீற்றத்தைக் காட்டியருளும்.␢ ஏனெனில், அவர்கள் யாக்கோபை␢ விழுங்கிவிட்டார்கள்;␢ விழுங்கி முற்றிலும் அழித்து விட்டார்கள்;␢ அவர் குடியிருப்பையும்␢ பாழாக்கிவிட்டார்கள்.⁾

Jeremiah 10:24Jeremiah 10

King James Version (KJV)
Pour out thy fury upon the heathen that know thee not, and upon the families that call not on thy name: for they have eaten up Jacob, and devoured him, and consumed him, and have made his habitation desolate.

American Standard Version (ASV)
Pour out thy wrath upon the nations that know thee not, and upon the families that call not on thy name: for they have devoured Jacob, yea, they have devoured him and consumed him, and have laid waste his habitation.

Bible in Basic English (BBE)
Let your wrath be let loose on the nations which have no knowledge of you, and on the families who give no worship to your name: for they have made a meal of Jacob, truly they have made a meal of him and put an end to him and made his fields a waste.

Darby English Bible (DBY)
Pour out thy fury upon the nations that know thee not, and upon the families that call not on thy name; for they have eaten up Jacob, yea, they have eaten him up and consumed him, and have laid waste his dwelling-place.

World English Bible (WEB)
Pour out your wrath on the nations that don’t know you, and on the families that don’t call on your name: for they have devoured Jacob, yes, they have devoured him and consumed him, and have laid waste his habitation.

Young’s Literal Translation (YLT)
Pour out Thy fury on the nations that have not known Thee, And on the families that have not called in Thy name, For they have eaten up Jacob, Yea, they have eaten him up, yea, they consume him, And his habitation they have made desolate!

எரேமியா Jeremiah 10:25
உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.
Pour out thy fury upon the heathen that know thee not, and upon the families that call not on thy name: for they have eaten up Jacob, and devoured him, and consumed him, and have made his habitation desolate.

שְׁפֹ֣ךְšĕpōksheh-FOKE
חֲמָתְךָ֗ḥămotkāhuh-mote-HA
עַלʿalal
הַגּוֹיִם֙haggôyimha-ɡoh-YEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
יְדָע֔וּךָyĕdāʿûkāyeh-da-OO-ha
וְעַל֙wĕʿalveh-AL
מִשְׁפָּח֔וֹתmišpāḥôtmeesh-pa-HOTE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
בְּשִׁמְךָ֖bĕšimkābeh-sheem-HA
לֹ֣אlōʾloh
קָרָ֑אוּqārāʾûka-RA-oo
כִּֽיkee
אָכְל֣וּʾoklûoke-LOO
אֶֽתʾetet
יַעֲקֹ֗בyaʿăqōbya-uh-KOVE
וַאֲכָלֻ֙הוּ֙waʾăkāluhûva-uh-ha-LOO-HOO
וַיְכַלֻּ֔הוּwaykalluhûvai-ha-LOO-hoo
וְאֶתwĕʾetveh-ET
נָוֵ֖הוּnāwēhûna-VAY-hoo
הֵשַֽׁמּוּ׃hēšammûhay-SHA-moo

Cross Reference

சங்கீதம் 79:6
உம்மை அறியாத ஜாதிகள் உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத ராஜ்யங்கள்மேலும் உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்.

எரேமியா 8:16
தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்.

சங்கீதம் 14:4
அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.

யோபு 18:21
அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.

எசேக்கியேல் 25:6
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக நீ கைகொட்டி, உன் காலால் தட்டி வர்மம்வைத்து, ஆகடியம் பண்ணினபடியினால்,

ஒபதியா 1:10
நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம் வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப்போவாய்.

செப்பனியா 1:6
கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.

சகரியா 1:15
நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன்.

1 தெசலோனிக்கேயர் 4:5
உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:

2 தெசலோனிக்கேயர் 1:8
கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.

எரேமியா 50:17
இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.

எரேமியா 50:7
அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள் மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே பாவஞ்செய்தார்கள் என்றார்கள்.

சங்கீதம் 27:2
என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.

ஏசாயா 64:7
உமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனும், உம்மைப் பற்றிக்கொள்ளும்படிக்கு விழித்துக்கொள்ளுகிறவனும் இல்லை; தேவரீர் உம்முடைய முகத்தை எங்களை விட்டு மறைத்து, எங்கள் அக்கிரமங்களினிமித்தம் எங்களைக் கரையப்பண்ணுகிறீர்.

எரேமியா 51:34
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.

புலம்பல் 2:22
பண்டிகைநாளில் கும்புகளை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்குத் திகில்களை வரவழைத்தீர்; கர்த்தருடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை; நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைஞன் நாசம்பண்ணினான்.

எசேக்கியேல் 35:5
நீ பழைய பகையை வைத்து இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,

செப்பனியா 3:8
ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிரகோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.

யோவான் 17:25
நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:23
எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறிப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

1 கொரிந்தியர் 15:34
நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.

ஏசாயா 43:22
ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனஞ்சலித்துப்போனாய்.


Tags உம்மை அறியாத ஜாதிகளின்மேலும் உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும் உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும் அவர்கள் யாக்கோபைப் பட்சித்து அவனை விழுங்கி அவனை நிர்மூலமாக்கி அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே
Jeremiah 10:25 in Tamil Concordance Jeremiah 10:25 in Tamil Interlinear Jeremiah 10:25 in Tamil Image