Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 14:11 in Tamil

Home Bible Proverbs Proverbs 14 Proverbs 14:11

நீதிமொழிகள் 14:11
துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.

Tamil Easy Reading Version
தீயவனின் வீடு அழிக்கப்படும். நல்லவனின் வீடு என்றும் வாழும்.

Thiru Viviliam
⁽பொல்லாரின் குடி வேரோடழியும்; நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும்.⁾

Proverbs 14:10Proverbs 14Proverbs 14:12

King James Version (KJV)
The house of the wicked shall be overthrown: but the tabernacle of the upright shall flourish.

American Standard Version (ASV)
The house of the wicked shall be overthrown; But the tent of the upright shall flourish.

Bible in Basic English (BBE)
The house of the sinner will be overturned, but the tent of the upright man will do well.

Darby English Bible (DBY)
The house of the wicked shall be overthrown; but the tent of the upright shall flourish.

World English Bible (WEB)
The house of the wicked will be overthrown, But the tent of the upright will flourish.

Young’s Literal Translation (YLT)
The house of the wicked is destroyed, And the tent of the upright flourisheth.

நீதிமொழிகள் Proverbs 14:11
துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
The house of the wicked shall be overthrown: but the tabernacle of the upright shall flourish.

בֵּ֣יתbêtbate
רְ֭שָׁעִיםrĕšāʿîmREH-sha-eem
יִשָּׁמֵ֑דyiššāmēdyee-sha-MADE
וְאֹ֖הֶלwĕʾōhelveh-OH-hel
יְשָׁרִ֣יםyĕšārîmyeh-sha-REEM
יַפְרִֽיחַ׃yaprîaḥyahf-REE-ak

Cross Reference

நீதிமொழிகள் 3:33
துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.

யோபு 8:15
ஒருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது; அதைப் பிடித்தால், அது நிற்காது.

நீதிமொழிகள் 12:7
துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.

சங்கீதம் 128:3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

யோபு 21:28
பிரபுவினுடைய வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே என்று சொல்லுகிறீர்கள்.

மத்தேயு 7:26
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.

சகரியா 5:4
அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து, அவனவன்வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப்போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

ஏசாயா 58:11
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

நீதிமொழிகள் 21:20
வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.

நீதிமொழிகள் 21:12
நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப் பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.

நீதிமொழிகள் 11:28
தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.

சங்கீதம் 112:2
அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.

யோபு 27:13
பொல்லாத மனுஷனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,

யோபு 20:26
அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அவியாத அக்கினி அவனைப் பட்சிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் தீங்கு அநுபவிப்பான்.

யோபு 18:21
அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.

யோபு 18:14
அவன் நம்பிΕ்கை அவன் கூடாΰத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்.

யோபு 15:34
மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.

யோபு 8:6
சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.


Tags துன்மார்க்கனுடைய வீடு அழியும் செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்
Proverbs 14:11 in Tamil Concordance Proverbs 14:11 in Tamil Interlinear Proverbs 14:11 in Tamil Image