Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirthelunthare - உயிர்தெழுந்தாரே அல்லேலூயா

உயிர்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு
என் சொந்தமானாரே

கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே

மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே

எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே

மரணமுன் கூர் எங்கே
பாதாளமுன் ஜெயமெங்கே
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்

ஆவியால் இன்றும் என்றும்
ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

பரிசுத்தமாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா Lyrics in English

uyirthelunthaarae allaelooyaa
jeyiththelunthaarae
uyirudan eluntha meetpar Yesu
en sonthamaanaarae

kallarai thiranthidavae
kadum sevakar payanthidavae
vallavar Yesu uyirththelunthaarae
valla pithaavin seyalithuvae

mariththavar maththiyilae
jeeva thaevanaith thaeduvaaro
neethiyin athipathi uyirththelunthaarae
niththiya nampikkai perukiduthae

emmaa oor seesharkalin
ellaa mana irul neekkinaarae
emmanak kalakkangal neekkinathaalae
ellaiyillaap paramaananthamae

maranamun koor engae
paathaalamun jeyamengae
saavaiyum Nnoyaiyum paeyaiyum jeyiththaar
sapaiyorae thuthi saattiduvom

aaviyaal intum entum
aa emmaiyum uyirppikkavae
aaviyin achchaாram emakkaliththaarae
allaelooyaa thuthi saattiduvom

parisuththamaakuthalai
payaththodentum kaaththuk kolvom
ekkaalam thonikkaiyil maruroopamaaka
elumpuvomae makimaiyilae

PowerPoint Presentation Slides for the song Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா PPT
Uyirthelunthare PPT

தமிழ்