இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்ததிற்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார்.
எலியாபின் குமாரர் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து, கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணி, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள்.
பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பது பேரைப் பட்சித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.
மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்: மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும்,
இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பதுபேராயிருந்தார்கள்.
ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய நாமங்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள்.
லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயரின் குடும்பமும், எப்ரோனியரின் குடும்பமும், மகலியரின் குடும்பமும், மூசியரின் குடும்பமும், கோராகியரின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.
ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.
அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை.
மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசரும் எரிகோவின் அருகேயிருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.
முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.
Take the sum of the people, old from | מִבֶּ֛ן | mibben | mee-BEN |
twenty | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
years | שָׁנָ֖ה | šānâ | sha-NA |
and upward; | וָמָ֑עְלָה | wāmāʿĕlâ | va-MA-eh-la |
as | כַּֽאֲשֶׁר֩ | kaʾăšer | ka-uh-SHER |
commanded the | צִוָּ֨ה | ṣiwwâ | tsee-WA |
Lord | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
אֶת | ʾet | et | |
Moses | מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH |
and the children | וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY |
of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
forth went which | הַיֹּֽצְאִ֖ים | hayyōṣĕʾîm | ha-yoh-tseh-EEM |
out of the land | מֵאֶ֥רֶץ | mēʾereṣ | may-EH-rets |
of Egypt. | מִצְרָֽיִם׃ | miṣrāyim | meets-RA-yeem |