Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaarum Magathuva Devanae - வாரும் வாரும் மகத்துவ தேவனே-Vaarum

வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்

1. மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே!
மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே – வாரும்

2. தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்கு
தரணியில் வேறோர் துணை இல்லையே – வாரும்

3. பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்
பரிசுத்த ராஜனே! நீர் வாருமே – வாரும்

4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
பரலோக ராஜனே! நீர் வாருமே – வாரும்

5. காருண்ய தேவனே! கதியும்மை யண்டினோம்
கடைசிவரையும் காத்து இரட்சியும் – வாரும்

6. மன்னா! உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க
ஏவுதல் தினம் தாரும் ஏகனே – வாரும்

7. விழிப்புள்ள ஜீவியம் விமலா! நீர் ஈந்துமே
வெற்றியடையக் கிருபை தாருமே – வாரும்

8. இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம் – வாரும்

வாரும் வாரும் மகத்துவ தேவனே-Vaarum Vaarum Magathuva Devanae Lyrics in English

Vaarum vaarum makaththuva thaevanae
Vallamaiyaaka ippo vanthidum

1. Makimaich sorupanae! Maavalla thaevanae!
Mannaa! Vanthaaseervaatham thaarumae – vaarum

2. Thaay thanthai neer thaamae! Tharparaa! Engatku
Tharanniyil vaeror thunnai illaiyae – vaarum

3. Paavaththai veraுththu paaviyai naesikkum
Parisuththa raajanae! Neer vaarumae – vaarum

4. Paktharum muktharum paatith thuthikkinta
Paraloka raajanae! Neer vaarumae – vaarum

5. Kaarunnya thaevanae! Kathiyummai yanntinom
Kataisivaraiyum kaaththu iratchiyum – vaarum

6. Mannaa! Um varavai ennnni yaam jeevikka
Aevuthal thinam thaarum aekanae – vaarum

7. Vilippulla jeeviyam vimalaa! Neer eenthumae
Vettiyataiyak kirupai thaarumae – vaarum

8. Ivvitha paakkiyam aelaikalengatku
Eenthathaalumakkentum Sthoththiram – vaarum

PowerPoint Presentation Slides for the song வாரும் வாரும் மகத்துவ தேவனே-Vaarum Vaarum Magathuva Devanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarum Magathuva Devanae – வாரும் வாரும் மகத்துவ தேவனே-Vaarum PPT
Vaarum Magathuva Devanae PPT

வாரும் நீர் தேவனே மன்னா தாருமே ராஜனே வாருமே மகத்துவ வல்லமையாக இப்போ வந்திடும் மகிமைச் சொருபனே மாவல்ல வந்தாசீர்வாதம் தாய் தந்தை தாமே தற்பரா தமிழ்