துதிகள் நடுவில் வாசம் செய்யும்
தூயாதி தூயர் நீரே
துதிக்கும் வேளையில் ஜெயம் தந்திடும்
கர்த்தாதி கர்த்தர் நீரே
என் தஞ்சம் நீரே உம்மை ஆண்டினேன்
உமக்கே என் ஆராதனை
உமக்கே உமக்கே ஆராதனை
உமக்கே என் ஆராதனை
பாவியாய் அலைந்த என்னையுமே
தம் இரத்தத்தால் மீட்டவரே
பரிசுத்தமாய் வாழ பெலன் தந்தீரே
தம் பிள்ளையாய் மாற்றினீரே
பரிசுத்தரே எந்தன் இயேசுவே
உமக்கே என் ஆராதனை
மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகத்துவமானவரே
மன்னித்து மறுரூபமாக்குகிறீர்
மறுகரை சேர்த்திடுவீர்
மன்னவரே எந்தன் இயேசுவே
உமக்கே என் ஆராதனை
சாந்தமும் தாழ்மையும் உடையவரே
அன்புள்ளம் கொண்டவரே
நுகங்கள் முறித்திட அபிஷேகித்தீர்
வல்லமை பொழிந்திடுவீர்
வல்லவரே எந்தன் இயேசுவே
உமக்கே என் ஆராதனை
ஆசீர்வதித்திட சித்தம் கொண்டீர்
சாபங்கள் தீர்த்தவரே
வியாதியின் ரோகங்கள் மாற்றினீரே
விடுதலை கொடுத்தவரே
இரட்சகரே எந்தன் இயேசுவே
உமக்கே என் அராதனை
Thuthigal naduvil Lyrics in English
Thuthikal naduvil vaasam seyyum thooyaathi thooyar neerae thuthikkum vaelaiyil jeyam thanthidum karththaathi Karththar neerae en thanjam neerae ummai aanntinaen umakkae en aaraathanaiumakkae umakkae aaraathanai umakkae en aaraathanaipaaviyaay alaintha ennaiyumae tham iraththaththaal meettavarae Parisuththamaay vaala pelan thantheerae tham pillaiyaay maattineerae Parisuththarae enthan Yesuvae umakkae en aaraathanaimakimai maatchimai nirainthavarae makaththuvamaanavarae manniththu maraுroopamaakkukireer maraுkarai serththiduveer mannavarae enthan Yesuvae umakkae en aaraathanaisaanthamum thaalmaiyum utaiyavarae anpullam konndavarae nukangal muriththida apishaekiththeer vallamai polinthiduveer vallavarae enthan Yesuvae umakkae en aaraathanaiaaseervathiththida siththam konnteer saapangal theerththavarae viyaathiyin rokangal maattineerae viduthalai koduththavarae iratchakarae enthan Yesuvae umakkae en araathanai
PowerPoint Presentation Slides for the song Thuthigal naduvil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthigal Naduvil – துதிகள் நடுவில் வாசம் செய்யும் PPT
Thuthigal Naduvil PPT

