Pitha Anbu Selvan - பிதா அன்புச் செல்வன்
பிதா அன்புச் செல்வன்
Pitha Anbu Selvan Boomiyilae Vaan Lyrics in Tamil
பிதா அன்புச் செல்வன் பூமியிலே வான்
பிறை ஒளி முன்னணை புரண்டதே
தாழ்மையுள்ள இதயத்திலே தனயன் தவழ்கிறான் அவன்
தரணி மீள ஆருயிரைத் தானம் தருகிறான் — பிதா
1. ஒளி பூச் சொரியும் இதயத்திலே நடப்பான் அருள்
ஓடி வரும் கடமைகளில் வளர்வான் இருள்
ஒளிந்தோட சுடர் ஒளியாய் ஒளிர்வான் வழி
ஒற்றுமையில் அறக்கடலாய் நிலைப்பான் — தாழ்மை
2. கனி கடலாக ஆவியினால் தருவான் பகை
கலைந்தோட அமுதமொழி அருள்வான் பிறர்
கனிந்துயர உடலாவி கொடுப்பான் மனம்
கசிந்துருக கோடி துயர் சுமப்பான் — தாழ்மை
3. கடல் உப்பாக வாழ்ந்துவிடில் இன்பம் பிறர்
கண்டு வர ஒளிப்பாதை எழும்பும் விழி
தூண்டும் பணி அமைதியுன் சிரிப்பு அதில்
துலங்க வரும் தூயோனின் ரட்சிப்பு — தாழ்மை
4. புவி புல்லரெல்லாம் மாற்றி விடும் புனிதன் வளர்
புது மலராய் பூத்த தெய்வ மனிதன் உளம்
பூம்பொழிலாய் மாற்ற வந்த கோமான் தேன்
பூங்குயிலாய் அறம் பாடும் பூமான் — தாழ்மை
Pitha Anbu Selvan - பிதா அன்புச் செல்வன் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Pitha Anbu Selvan - பிதா அன்புச் செல்வன்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Pitha Anbu Selvan - பிதா அன்புச் செல்வன் PPT Pitha Anbu Selvan PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar