🏠  Lyrics  Chords  Bible 

Mutiyaathu Mutiyaathu Ummaip Pirinthu PPT - முடியாது முடியாது

முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது – என்னால் (இயேசையா)
 
1. திராட்சை செடியே உம் கொடி நான்
    உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
    உலகெங்கும் கனி தருவேன்
 
2.  மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
    உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
    உயிர்ப்பியும் என் தெய்வமே
 
3.  குயவன் நீர் களிமண் நான் – உமது
    விருப்பம் போல் வனைந்துக் கொண்டு
    உலகெங்கும் பயன்படுத்தும்
 
4.  பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
    எதையும் செய்திட பெலணுண்டு
    எல்லாம் நான் செய்திடுவேன்
    எல்லாம் நான் செய்திடுவேன்
    உம் துணையால் உம் கரத்தால்
   எல்லாம் நான் செய்திடுவேன் .. இயேசையா
 
5.  பூமியிலே பரதேசி நான் – உமது
     வார்த்தையை ஒருபோதும் எனக்கு
     மறைத்து விடாதேயும்
 
6. உம் வழிகள் கற்றுத்தாரும்
    இறுதிவரை நான் பற்றிக் கொண்டு
    எந்நாளும் கடைபிடிப்பேன்


Mutiyaathu Mutiyaathu Ummaip Pirinthu PowerPoint



Mutiyaathu Mutiyaathu Ummaip Pirinthu - முடியாது முடியாது Lyrics

Mutiyaathu Mutiyaathu Ummaip Pirinthu PPT

Download Mutiyaathu Mutiyaathu Ummaip Pirinthu Tamil PPT