பல்லவி
கருணாகர தேவா, இரங்கி இந்தக்
கங்குலில் எனைக் கா வா.
அனுபல்லவி
இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல
என்றும் ப்ரகாசமாக இலங்கும் மா திரியேக. – கரு
சரணங்கள்
1. சென்ற பகலில் காத்துச், சேர் விபத்துகள் நீத்துச்
சேர்த்தையே வழி பார்த்துத், திகில் தீர்த்து;
நன்றி யதற்குத் துதி நவில்வன், நீ என் கதி
நாடும் என் அதிபதி; நமஸ்காரம் உனக்கதி. – கரு
2. நித்திரையில் உட்புகுந்து, சத்துருப் பசாசு வந்து
நெருங்காமல் நீ எழுந்து, நிலை புரிந்து,
சுத்தநெஞ்சோ டமைந்து தூங்க நல் துயில் தந்து,
தூதர் காவல் நிறைந்து, துணையாய் என்னோடிருந்து. – கரு
3. தாதா, அண்டினேன் உன்னைத் தஞ்சம் நீயே, என்னைத்
தாங்குவதார் பின்னை, சார்வன் நின்னை;
வேதா, நான் உன் தொண்டு வினைஞன் என் நிலை கண்டு,
மீண்டும் செட்டைகள் விண்டு விலகா தணைத்துக்கொண்டு. – கரு
4. தீய எண்ணங்கள் பாற, திகில் கனவுகள் மாறத்,
திவ்ய சிந்தை உள் ஊற, ஸ்திரம் ஏறக்,
காயம் உயிரும் கூடக், கருத்துன்னோ டுறவாடக்,
காலை நல்லறம் நாடக், கரிசித்துன் துதி பாட. – கரு
Kaunakara Deva Irangi – கருணாகர தேவா இரங்கி Lyrics in English
Pallavi
Karunnaakara thaevaa, irangi inthak
Kangulil enaik kaa vaa.
Anupallavi
Irulaethum anukaamal iravilum pakalpola
Entum prakaasamaaka ilangum maa thiriyaeka. – karu
Saranangal
1. Senta pakalil kaaththuch, ser vipaththukal neeththuch
Serththaiyae vali paarththuth, thikil theerththu;
Nanti yatharkuth thuthi navilvan, nee en kathi
Naadum en athipathi; namaskaaram unakkathi. – karu
2. Niththiraiyil utpukunthu, saththurup pasaasu vanthu
Nerungaamal nee elunthu, nilai purinthu,
Suththanenjaோ damainthu thoonga nal thuyil thanthu,
Thoothar kaaval nirainthu, thunnaiyaay ennotirunthu. – karu
3. Thaathaa, anntinaen unnaith thanjam neeyae, ennaith
Thaanguvathaar pinnai, saarvan ninnai;
Vaethaa, naan un thonndu vinainjan en nilai kanndu,
Meenndum settaைkal vinndu vilakaa thannaiththukkonndu. – karu
4. Theeya ennnangal paara, thikil kanavukal maarath,
Thivya sinthai ul oora, sthiram aerak,
Kaayam uyirum koodak, karuththunno duravaadak,
Kaalai nallaram naadak, karisiththun thuthi paada. – karu
PowerPoint Presentation Slides for the song Kaunakara Deva Irangi – கருணாகர தேவா இரங்கி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaunakara Deva Irangi – கருணாகர தேவா இரங்கி PPT
Kaunakara Deva Irangi PPT

