Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaaalamae Devanai Thedu - காலமே தேவனைத் தேடு

பல்லவி

காலமே தேவனைத் தேடு;-ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு.

அனுபல்லவி

சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு;
சீரான நித்திய ஜீவனை நாடு. – காலமே

சரணங்கள்

1. மன்னுயிர்க்காய் மரித்தாரே,-மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே;
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு!
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு. – காலமே

2. பாவச் சோதனைகளை வெல்லு;-கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு,
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய்; மனுவேலனைப் பணிய. – காலமே

3. சிறுவர்கள் என்னிடஞ் சேரத்-தடை
செய்யா திருங்களென்றார் மனதார;
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்;
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும். – காலமே

4. வேலையுனக்குக் கைகூட,-சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட,
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே,
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே. – காலமே

Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு Lyrics in English

Pallavi

Kaalamae thaevanaith thaedu;-jeeva
Kaarunnyar paatham panninthu mantadu.

Anupallavi

Seelamudan patham paatikkonndaadu;
Seeraana niththiya jeevanai naadu. – kaalamae

Saranangal

1. Mannuyirkkaay mariththaarae,-manu
Mainthanena naamam vaiththirunthaarae;
Un siruttikarai nee uthayaththilennnu!
Ullanganinthu thaniJebam pannnu. – kaalamae

2. Paavach sothanaikalai vellu;-ketta
Paarudal paeyudan porukku nillu,
Jeeva kireedanj siraththilanniyach
Sinthanai sey; manuvaelanaip panniya. – kaalamae

3. Siraுvarkal ennidanj serath-thatai
Seyyaa thirungalentar manathaara;
Paraloka selva mavarkkup palikkum;
Paakkiyamellaam paranthu jolikkum. – kaalamae

4. Vaelaiyunakkuk kaikooda,-sathya
Vaethan kirupai varaththai mantada,
Kaalai thaeduvor enaik kanndataivaarae,
Kannviliththu jepanj seyyumentarae. – kaalamae

PowerPoint Presentation Slides for the song Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு PPT
Kaaalamae Devanai Thedu PPT

காலமே பல்லவி தேவனைத் தேடுஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு அனுபல்லவி சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு சீரான நித்திய ஜீவனை நாடு சரணங்கள் மன்னுயிர்க்காய் மரித்தாரேமனு தமிழ்