எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீ
எந்நாளுமே துதிப்பாய் !
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த ;
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது — எந்நாளுமே
1. பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்
பாவங்கள் எத்தனையோ ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி — எந்நாளுமே
2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை ?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,
நேயமதாக ஜீவனை மீட்டதால் — எந்நாளுமே
3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே , பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை ;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு ,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால் — எந்நாளுமே
4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே ,
பூமிக்கும் வானத்துக்கும் ;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே , சத்திய மேயிது — எந்நாளுமே
5. மன்னிப்பு மாட்சிமையாம் – மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம் ;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே — எந்நாளுமே
6. தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு ?
எந்த வேளையும் அவரோடு தங்கினால் ,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே — எந்நாளுமே
Ennaalumae Thuthippaay Lyrics in English
Ennaalumae thuthippaay – ennaaththumaavae , nee
Ennaalumae thuthippaay !
Innaal varaiyilae unnathanaar seytha ;
Ennnnillaa nanmaikal yaavu maravaathu — ennaalumae
1. Paavangal eththanaiyo – ninaiyaa thiruththaarun
Paavangal eththanaiyo ?
Paalaana Nnoyai akattik kunamaakkip
Paarinil vaiththa makaa thaya vaiennnni — ennaalumae
2. Eththanaiyo kirupai – unnuyirkkuch seythaarae
Eththanaiyo kirupai ?
Niththamunaimuti soottinathumanti ,
Naeyamathaaka jeevanai meettathaal — ennaalumae
3. Nanmaiyaalun vaayai – niraiththaarae , poorththiyaay
Nanmaiyaalun vaayai ;
Unvayathu kalukaippol palangaொnndu ,
Ongu ilamaipo laakavae seythathaal — ennaalumae
4. Poomikkum vaanaththukkum – ulla thooram polavae ,
Poomikkum vaanaththukkum ;
Saami payamullavar mael avar arul
Saalavum thangumae , saththiya maeyithu — ennaalumae
5. Mannippu maatchimaiyaam – maathaevanarulum
Mannippu maatchimaiyaam ;
Ennnuvaayo kilakku maerkin thooramae ?
Ennnnil unpaavam akantathaththooramae — ennaalumae
6. Thanthaithan pillaikatku – thayavo tirangaano
Thanthaithan pillaikatku ?
Entha vaelaiyum avarodu thanginaal ,
Sontham paaraattiyae thookkich sumappaarae — ennaalumae
PowerPoint Presentation Slides for the song Ennaalumae Thuthippaay
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennaalumae Thuthippaay – எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே நீ PPT
Ennaalumae Thuthippaay PPT

