Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Devanai Yeagamaai Naam - தேவ தேவனை ஏகமாய் நாம்-

பல்லவி

தேவ தேவனை ஏகமாய் நாம் பாடிப்போற்றிடுவோம்
இயேசுவின் நாமத்தினால்
பாவரோக சாபம் நீங்கவே
விடுதலையும் அடைந்தோம் – என்றென்றுமாய்

சரணங்கள்

1. உலகம் தரக்கூடா சமாதானமும்
சந்தோஷமும் தந்தார் இயேசு ராஜன்
மண்ணுலகில் ஜீவித்தாலும்
விண்ணுலகின்பத்தை அனுபவிக்க
இந்த நல்பாக்கியம் ஈந்தாரே – தேவதேவனை

2. துன்பமோ துக்கமோ தொல்லைகளோ
தொடர்ந்து வந்தாலும் திகிலடையோம்
சீயோனின் அரண்களைப் போல்
அசையாது நாம் வாழ்ந்திடுவோம்
சேனையதிபன் நம்மோடிருக்க – தேவதேவனை

3. எரிகோவைப் போல் பல எதிர்ப்புகளும்
எழும்பி வந்து நம்மை தடுத்தாலும்
முன் வைத்த காலைப்பின் வைப்பீரோ
வாலிபரே இபா்போர் முனையில்
வல்லமையோடவரைத் துதிப்போம் – தேவதேவனை

4. மாமிச சிந்தையால் ஆவியிலே
மரணமும் விழுகையும் சேர்ந்திடுமே
பயப்படுவீர் நீர் பயப்படுவீர்
பட்சிக்கும் தேவன் நம்மில் இருக்க
பரிசுத்த சிந்தையில் பலப்படுவீர் – தேவதேவனை

5. சீயோனுக்காய் இதோ சீக்கிரத்தில்
ஸ்ரீஇயேசு ராஜனும் தோன்றிடுவார்
அல்லேலூயா! ஆர்ப்பரிப்போம்!
ஆனந்தநாள் வேகம் நெருங்கிடுதே
ஆயத்தமாய் அவரைச் சந்திப்போம் – தேவதேவனை

தேவ தேவனை ஏகமாய் நாம்- Deva Devanai Yeagamaai Naam Lyrics in English

pallavi

thaeva thaevanai aekamaay naam paatippottiduvom
Yesuvin naamaththinaal
paavaroka saapam neengavae
viduthalaiyum atainthom – ententumaay

saranangal

1. ulakam tharakkoodaa samaathaanamum
santhoshamum thanthaar Yesu raajan
mannnulakil jeeviththaalum
vinnnulakinpaththai anupavikka
intha nalpaakkiyam eenthaarae – thaevathaevanai

2. thunpamo thukkamo thollaikalo
thodarnthu vanthaalum thikilataiyom
seeyonin arannkalaip pol
asaiyaathu naam vaalnthiduvom
senaiyathipan nammotirukka – thaevathaevanai

3. erikovaip pol pala ethirppukalum
elumpi vanthu nammai thaduththaalum
mun vaiththa kaalaippin vaippeero
vaaliparae ipaa்por munaiyil
vallamaiyodavaraith thuthippom – thaevathaevanai

4. maamisa sinthaiyaal aaviyilae
maranamum vilukaiyum sernthidumae
payappaduveer neer payappaduveer
patchikkum thaevan nammil irukka
parisuththa sinthaiyil palappaduveer – thaevathaevanai

5. seeyonukkaay itho seekkiraththil
sreeYesu raajanum thontiduvaar
allaelooyaa! aarpparippom!
aananthanaal vaekam nerungiduthae
aayaththamaay avaraich santhippom – thaevathaevanai

PowerPoint Presentation Slides for the song தேவ தேவனை ஏகமாய் நாம்- Deva Devanai Yeagamaai Naam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Devanai Yeagamaai Naam – தேவ தேவனை ஏகமாய் நாம்- PPT
Deva Devanai Yeagamaai Naam PPT

தேவதேவனை பயப்படுவீர் பல்லவி தேவ தேவனை ஏகமாய் பாடிப்போற்றிடுவோம் இயேசுவின் நாமத்தினால் பாவரோக சாபம் நீங்கவே விடுதலையும் அடைந்தோம் என்றென்றுமாய் சரணங்கள் உலகம் தரக்கூடா சமாதானமும் தமிழ்