யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரையும் வெட்டினார்கள்.
மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.
யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப் போனான், அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து, அதைச் சங்காரம் பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்.
கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்த கூடாமற்போயிற்று.
பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
And afterward | וְאַחַ֗ר | wĕʾaḥar | veh-ah-HAHR |
down went | יָֽרְדוּ֙ | yārĕdû | ya-reh-DOO |
children the | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
of Judah | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
fight to | לְהִלָּחֵ֖ם | lĕhillāḥēm | leh-hee-la-HAME |
against the Canaanites, | בַּֽכְּנַעֲנִ֑י | bakkĕnaʿănî | ba-keh-na-uh-NEE |
dwelt that | יוֹשֵׁ֣ב | yôšēb | yoh-SHAVE |
in the mountain, | הָהָ֔ר | hāhār | ha-HAHR |
south, the in and | וְהַנֶּ֖גֶב | wĕhannegeb | veh-ha-NEH-ɡev |
and in the valley. | וְהַשְּׁפֵלָֽה׃ | wĕhaššĕpēlâ | veh-ha-sheh-fay-LA |