யோபு 12

fullscreen1 யோபு பிரதியுத்தரமாக:

fullscreen2 ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.

fullscreen3 உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழந்தவனல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?

fullscreen4 என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.

fullscreen5 ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.

fullscreen6 கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.

fullscreen7 இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப்போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள். அவைகள் உனக்கு அறிவிக்கும்.

fullscreen8 அல்லது பூமியை விசாரித்துக்கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.

fullscreen9 கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றிலும் அறியாதவன் யார்?

fullscreen10 சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.

fullscreen11 வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?

fullscreen12 முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.

fullscreen13 அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.

fullscreen14 இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.

fullscreen15 இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால் பூமியைக் கீழதுமேலதாக்கும்.

fullscreen16 அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும். அவர் கையின் கீழிருக்கிறார்கள்.

fullscreen17 அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.

fullscreen18 அவர் ராஜாக்களின் கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.

fullscreen19 அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.

fullscreen20 அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவரின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறார்.

fullscreen21 அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.

1 And Job answered and said,

2 No doubt but ye are the people, and wisdom shall die with you.

3 But I have understanding as well as you; I am not inferior to you: yea, who knoweth not such things as these?

4 I am as one mocked of his neighbour, who calleth upon God, and he answereth him: the just upright man is laughed to scorn.

5 He that is ready to slip with his feet is as a lamp despised in the thought of him that is at ease.

6 The tabernacles of robbers prosper, and they that provoke God are secure; into whose hand God bringeth abundantly.

7 But ask now the beasts, and they shall teach thee; and the fowls of the air, and they shall tell thee:

8 Or speak to the earth, and it shall teach thee: and the fishes of the sea shall declare unto thee.

9 Who knoweth not in all these that the hand of the Lord hath wrought this?

10 In whose hand is the soul of every living thing, and the breath of all mankind.

11 Doth not the ear try words? and the mouth taste his meat?

12 With the ancient is wisdom; and in length of days understanding.

13 With him is wisdom and strength, he hath counsel and understanding.

14 Behold, he breaketh down, and it cannot be built again: he shutteth up a man, and there can be no opening.

15 Behold, he withholdeth the waters, and they dry up: also he sendeth them out, and they overturn the earth.

16 With him is strength and wisdom: the deceived and the deceiver are his.

17 He leadeth counsellers away spoiled, and maketh the judges fools.

18 He looseth the bond of kings, and girdeth their loins with a girdle.

19 He leadeth princes away spoiled, and overthroweth the mighty.

20 He removeth away the speech of the trusty, and taketh away the understanding of the aged.

21 He poureth contempt upon princes, and weakeneth the strength of the mighty.

Job 11 in Tamil and English

1 அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக:
Then answered Zophar the Naamathite, and said,

2 ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ?
Should not the multitude of words be answered? and should a man full of talk be justified?

3 உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?
Should thy lies make men hold their peace? and when thou mockest, shall no man make thee ashamed?

4 என் சொல் சுத்தம் என்றும், நான் தேவரீருடைய பார்வைக்குத் துப்புரவானவன் என்றும் நீர் சொல்லுகிறீர்.
For thou hast said, My doctrine is pure, and I am clean in thine eyes.

5 ஆனாலும் தேவன் பேசி, உமக்கு விரோதமாய்த் தம்முடைய உதடுகளைத் திறந்து,
But oh that God would speak, and open his lips against thee;

6 உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால் அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.
And that he would shew thee the secrets of wisdom, that they are double to that which is! Know therefore that God exacteth of thee less than thine iniquity deserveth.

7 தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?
Canst thou by searching find out God? canst thou find out the Almighty unto perfection?

8 அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன?
It is as high as heaven; what canst thou do? deeper than hell; what canst thou know?

9 அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும் சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது.
The measure thereof is longer than the earth, and broader than the sea.

10 அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும் அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடைபண்ணுகிறவன் யார்?
If he cut off, and shut up, or gather together, then who can hinder him?

11 மனுஷருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனியாதிருப்பாரோ?
For he knoweth vain men: he seeth wickedness also; will he not then consider it?

12 புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.
For vain man would be wise, though man be born like a wild ass’s colt.

13 நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.
If thou prepare thine heart, and stretch out thine hands toward him;

14 உம்முடைய கையிலே அக்கிரமமிருந்தால் அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்.
If iniquity be in thine hand, put it far away, and let not wickedness dwell in thy tabernacles.

15 அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர்.
For then shalt thou lift up thy face without spot; yea, thou shalt be stedfast, and shalt not fear:

16 அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.
Because thou shalt forget thy misery, and remember it as waters that pass away:

17 அப்பொழுது உம்முடைய ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.
And thine age shall be clearer than the noonday; thou shalt shine forth, thou shalt be as the morning.

18 நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர்.
And thou shalt be secure, because there is hope; yea, thou shalt dig about thee, and thou shalt take thy rest in safety.

19 பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர், அநேகர் முகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள்.
Also thou shalt lie down, and none shall make thee afraid; yea, many shall make suit unto thee.