எரேமியா 50:13
கர்த்தரின் கோபத்தினாலே அது குடியற்றதும் பெரும்பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, ஈசல்போடுவான்.
Tamil Indian Revised Version
கர்த்தரின் கோபத்தினால் அது குடியற்றதும் பெரும் பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, நடுங்குவான்.
Tamil Easy Reading Version
கர்த்தர் அவரது கோபத்தைக் காட்டுவார். எனவே அங்கே ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள். பாபிலோன் முழுவதும் காலியாகும். பாபிலோனைக் கடந்துப்போகும் எவரும் பயப்படுவார்கள். அது எவ்வளவு மோசமாக அழிக்கப்பட்டிருக்கிறதைப் பார்க்கும்போது அவர்கள் தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
Thiru Viviliam
⁽ஆண்டவருடைய வெஞ்சினத்தால்␢ அது குடியற்றுப்போகும்;␢ முற்றிலும் பாழடைந்துபோகும்;␢ பாபிலோனைக் கடந்து செல்லும்␢ எவனும் அதிர்ச்சி அடைவான்;␢ அதன் தோல்வி கண்டு␢ ஏளனம் செய்வான்.⁾
King James Version (KJV)
Because of the wrath of the LORD it shall not be inhabited, but it shall be wholly desolate: every one that goeth by Babylon shall be astonished, and hiss at all her plagues.
American Standard Version (ASV)
Because of the wrath of Jehovah she shall not be inhabited, but she shall be wholly desolate: every one that goeth by Babylon shall be astonished, and hiss at all her plagues.
Bible in Basic English (BBE)
Because of the wrath of the Lord no one will be living in it, and it will be quite unpeopled: everyone who goes by Babylon will be overcome with wonder, and make sounds of fear at all her punishments.
Darby English Bible (DBY)
Because of the wrath of Jehovah, it shall not be inhabited, but it shall be wholly desolate; every one that goeth by Babylon shall be astonished, and shall hiss, because of all her plagues.
World English Bible (WEB)
Because of the wrath of Yahweh she shall not be inhabited, but she shall be wholly desolate: everyone who goes by Babylon shall be astonished, and hiss at all her plagues.
Young’s Literal Translation (YLT)
Because of the wrath of Jehovah it is not inhabited, And it hath been a desolation — all of it. Every passer by at Babylon is astonished, And doth hiss because of all her plagues.
எரேமியா Jeremiah 50:13
கர்த்தரின் கோபத்தினாலே அது குடியற்றதும் பெரும்பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, ஈசல்போடுவான்.
Because of the wrath of the LORD it shall not be inhabited, but it shall be wholly desolate: every one that goeth by Babylon shall be astonished, and hiss at all her plagues.
| מִקֶּ֤צֶף | miqqeṣep | mee-KEH-tsef | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| לֹ֣א | lōʾ | loh | |
| תֵשֵׁ֔ב | tēšēb | tay-SHAVE | |
| וְהָיְתָ֥ה | wĕhāytâ | veh-hai-TA | |
| שְׁמָמָ֖ה | šĕmāmâ | sheh-ma-MA | |
| כֻּלָּ֑הּ | kullāh | koo-LA | |
| כֹּ֚ל | kōl | kole | |
| עֹבֵ֣ר | ʿōbēr | oh-VARE | |
| עַל | ʿal | al | |
| בָּבֶ֔ל | bābel | ba-VEL | |
| יִשֹּׁ֥ם | yiššōm | yee-SHOME | |
| וְיִשְׁרֹ֖ק | wĕyišrōq | veh-yeesh-ROKE | |
| עַל | ʿal | al | |
| כָּל | kāl | kahl | |
| מַכּוֹתֶֽיהָ׃ | makkôtêhā | ma-koh-TAY-ha |
Cross Reference
எரேமியா 18:16
நான் அவர்களுடைய தேசத்தைப் பாழாக்கவும், என்றென்றைக்கும் ஈசலிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கவும் செய்யும்படி இப்படிச் செய்கிறார்கள்; அதைக் கடந்துபோகிற எவனும் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான்.
எரேமியா 49:17
அப்படியே ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து ஈசல்போடுவான்.
சகரியா 1:15
நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன்.
செப்பனியா 2:15
நான்தான், என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப்போய்விட்டதே! அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.
ஆபகூக் 2:6
இவர்களெல்லாரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான வசைச்சொல்லையும் வசனித்து, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எந்தமட்டும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள்.
புலம்பல் 2:15
வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.
எரேமியா 51:37
அப்பொழுது பாபிலோன் குடியில்லாத மண்மேடுகளும், வலுசர்ப்பங்களின் தாபரமும், பாழும், ஈசல்போடப்படுதலுக்கு இடமுமாய்ப்போகும்.
எரேமியா 25:12
எழுபது வருஷம் நிறைவேறினபின்பு, நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து, அதை நித்தியபாழிடமாக்கி,
எரேமியா 19:8
இந்த நகரத்தைப் பாழாக்கவும், கூச்சலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் ஈசலிடுவான்.
ஏசாயா 14:4
நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!
யோபு 27:23
ஜனங்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவன் ஸ்தலத்தைவிட்டு வெருட்டிவிடுவார்கள்.
Tags கர்த்தரின் கோபத்தினாலே அது குடியற்றதும் பெரும்பாழுமாயிருக்கும் பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து ஈசல்போடுவான்
Jeremiah 50:13 in Tamil Concordance Jeremiah 50:13 in Tamil Interlinear Jeremiah 50:13 in Tamil Image