எரேமியா 37:10
உங்களோடே யுத்தம்பண்ணுகிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் முறிய அடித்தாலும், மீந்தவர்கள் எல்லாரும் காயம்பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை அக்கினியால் சுட்டெரிப்பார்களென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.
Tamil Indian Revised Version
உங்களுடன் போர்செய்கிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் தோற்கடித்தாலும், மீந்தவர்கள் எல்லோரும் காயம்பட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை நெருப்பினால் சுட்டெரிப்பார்கள் என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.
Tamil Easy Reading Version
எருசலேம் ஜனங்களே உங்களைத் தாக்கும் பாபிலோனியப் படை முழுவதையும் நீங்கள் தோற்கடித்தாலும் அங்கே கூடாரத்தில் காயப்பட்டவர்கள் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அந்தச் சில காயப்பட்டவர்களும்கூடத் தம் கூடாரத்தை விட்டு வெளியே வந்து எருசலேமை எரித்துப்போடுவார்கள்.’”
Thiru Viviliam
உங்களை எதிர்த்துப் போரிட்டு வரும் கல்தேயரின் படை முழுவதையும் நீங்கள் முறியடித்தாலும், அவர்களுள் தாக்குண்ட வீரர் மட்டுமே தம் கூடாரங்களில் எஞ்சியிருந்தாலும், அவர்களே கிளர்ந்தெழுந்து இந்நகரைத் தீக்கிரையாக்குவர்.⒫
King James Version (KJV)
For though ye had smitten the whole army of the Chaldeans that fight against you, and there remained but wounded men among them, yet should they rise up every man in his tent, and burn this city with fire.
American Standard Version (ASV)
For though ye had smitten the whole army of the Chaldeans that fight against you, and there remained but wounded men among them, yea would they rise up every man in his tent, and burn this city with fire.
Bible in Basic English (BBE)
For even if you had overcome all the army of the Chaldaeans fighting against you, and there were only wounded men among them, still they would get up, every man in his tent, and put this town on fire.
Darby English Bible (DBY)
For though ye had smitten the whole army of the Chaldeans that fight against you, and there remained [but] wounded men among them, [yet] should they rise up every man in his tent, and burn this city with fire.
World English Bible (WEB)
For though you had struck the whole army of the Chaldeans who fight against you, and there remained but wounded men among them, yes would they rise up every man in his tent, and burn this city with fire.
Young’s Literal Translation (YLT)
for though ye had smitten all the force of the Chaldeans who are fighting with you, and there were left of them wounded men — each in his tent — they rise, and have burnt this city with fire.’
எரேமியா Jeremiah 37:10
உங்களோடே யுத்தம்பண்ணுகிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் முறிய அடித்தாலும், மீந்தவர்கள் எல்லாரும் காயம்பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை அக்கினியால் சுட்டெரிப்பார்களென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.
For though ye had smitten the whole army of the Chaldeans that fight against you, and there remained but wounded men among them, yet should they rise up every man in his tent, and burn this city with fire.
| כִּ֣י | kî | kee | |
| אִם | ʾim | eem | |
| הִכִּיתֶ֞ם | hikkîtem | hee-kee-TEM | |
| כָּל | kāl | kahl | |
| חֵ֤יל | ḥêl | hale | |
| כַּשְׂדִּים֙ | kaśdîm | kahs-DEEM | |
| הַנִּלְחָמִ֣ים | hannilḥāmîm | ha-neel-ha-MEEM | |
| אִתְּכֶ֔ם | ʾittĕkem | ee-teh-HEM | |
| וְנִ֨שְׁאֲרוּ | wĕnišʾărû | veh-NEESH-uh-roo | |
| בָ֔ם | bām | vahm | |
| אֲנָשִׁ֖ים | ʾănāšîm | uh-na-SHEEM | |
| מְדֻקָּרִ֑ים | mĕduqqārîm | meh-doo-ka-REEM | |
| אִ֤ישׁ | ʾîš | eesh | |
| בְּאָהֳלוֹ֙ | bĕʾāhŏlô | beh-ah-hoh-LOH | |
| יָק֔וּמוּ | yāqûmû | ya-KOO-moo | |
| וְשָֽׂרְפ֛וּ | wĕśārĕpû | veh-sa-reh-FOO | |
| אֶת | ʾet | et | |
| הָעִ֥יר | hāʿîr | ha-EER | |
| הַזֹּ֖את | hazzōt | ha-ZOTE | |
| בָּאֵֽשׁ׃ | bāʾēš | ba-AYSH |
Cross Reference
ஏசாயா 30:17
நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு காடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.
லேவியராகமம் 26:36
உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சியடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.
யோவேல் 2:11
கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்?
எரேமியா 51:4
குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலைசெய்யப்பட்டவர்கள் அதின் வீதிகளிலும் விழுவார்கள்.
எரேமியா 50:45
ஆகையால் கர்த்தர் பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும் அவர் கல்தேயர் தேசத்துக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் பாழாக்குவார்.
எரேமியா 49:20
ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார்.
எரேமியா 37:8
கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்துக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.
எரேமியா 21:4
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிக்கைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து,
ஏசாயா 14:19
நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய்.
ஏசாயா 13:15
அகப்பட்டவனெவனும் குத்துண்டு, அவர்களைச் சேர்ந்திருந்தவனெவனும் பட்டயத்தால் விழுவான்.
ஏசாயா 10:4
கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
Tags உங்களோடே யுத்தம்பண்ணுகிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் முறிய அடித்தாலும் மீந்தவர்கள் எல்லாரும் காயம்பட்டவர்களாயிருந்தாலும் அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி இந்த நகரத்தை அக்கினியால் சுட்டெரிப்பார்களென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்
Jeremiah 37:10 in Tamil Concordance Jeremiah 37:10 in Tamil Interlinear Jeremiah 37:10 in Tamil Image