யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம் பண்ணினாள்.
அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.
சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.
அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்,
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வழியை மாறுபாடாக்கி, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்ததினிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும்.
said And the | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
Lord | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
unto | אֵלַ֔י | ʾēlay | ay-LAI |
hath justified herself | צִדְּקָ֥ה | ṣiddĕqâ | tsee-deh-KA |
The | נַפְשָׁ֖הּ | napšāh | nahf-SHA |
backsliding me, | מְשֻׁבָ֣ה | mĕšubâ | meh-shoo-VA |
Israel | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
more than treacherous | מִבֹּגֵדָ֖ה | mibbōgēdâ | mee-boh-ɡay-DA |
Judah. | יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |