1ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.Who is this that cometh from Edom, with dyed garments from Bozrah? this that is glorious in his apparel, travelling in the greatness of his strength? I that speak in righteousness, mighty to save.
2உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள்போலவும் இருக்கிறதென்ன?Wherefore art thou red in thine apparel, and thy garments like him that treadeth in the winefat?
3நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை, நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.I have trodden the winepress alone; and of the people there was none with me: for I will tread them in mine anger, and trample them in my fury; and their blood shall be sprinkled upon my garments, and I will stain all my raiment.
4நீதியைச் சரிக்கட்டும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது.For the day of vengeance is in mine heart, and the year of my redeemed is come.
5நான் பார்த்தேன், துணைசெய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று.And I looked, and there was none to help; and I wondered that there was none to uphold: therefore mine own arm brought salvation unto me; and my fury, it upheld me.
6நான் என் கோபத்திலே ஜனங்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கப்பண்ணினேன்.And I will tread down the people in mine anger, and make them drunk in my fury, and I will bring down their strength to the earth.
7கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும் அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்.I will mention the lovingkindnesses of the LORD, and the praises of the LORD, according to all that the LORD hath bestowed on us, and the great goodness toward the house of Israel, which he hath bestowed on them according to his mercies, and according to the multitude of his lovingkindnesses.
8அவர்கள் என் ஜனந்தானென்றும், அவர்கள் வஞ்சனைசெய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி அவர்களுக்கு இரட்சகரானார்.For he said, Surely they are my people, children that will not lie: so he was their Saviour.
9அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.In all their affliction he was afflicted, and the angel of his presence saved them: in his love and in his pity he redeemed them; and he bare them, and carried them all the days of old.
10அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.But they rebelled, and vexed his holy Spirit: therefore he was turned to be their enemy, and he fought against them.
11ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும், தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறிவரப்பண்ணினவர் இப்பொழுது எங்கே?Then he remembered the days of old, Moses, and his people, saying, Where is he that brought them up out of the sea with the shepherd of his flock? where is he that put his holy Spirit within him?
12அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக்கொண்டு அவர்களைத் தமது மகியின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்தியகீர்த்தியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து,That led them by the right hand of Moses with his glorious arm, dividing the water before them, to make himself an everlasting name?
13ஒரு குதிரை வனாந்தரவெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கப்பண்ணினவர் எங்கே?That led them through the deep, as an horse in the wilderness, that they should not stumble?
14கர்த்தருடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கிலே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறப்பண்ணினார்; இப்படியே தேவரீர், உமக்கு மகிமையுள்ள கீர்த்தியை உண்டாக்கும்படி உம்முடைய ஜனத்தை நடத்தினீர்.As a beast goeth down into the valley, the Spirit of the LORD caused him to rest: so didst thou lead thy people, to make thyself a glorious name.
15தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மன உருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?Look down from heaven, and behold from the habitation of thy holiness and of thy glory: where is thy zeal and thy strength, the sounding of thy bowels and of thy mercies toward me? are they restrained?
16தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும் எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்.Doubtless thou art our father, though Abraham be ignorant of us, and Israel acknowledge us not: thou, O LORD, art our father, our redeemer; thy name is from everlasting.
17கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.O LORD, why hast thou made us to err from thy ways, and hardened our heart from thy fear? Return for thy servants' sake, the tribes of thine inheritance.
18பரிசுத்தமுள்ள உமது ஜனங்கள் கொஞ்சக் காலமாத்திரம் அதைச் சுதந்தரித்தார்கள்; எங்கள் சத்துருக்கள் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப்போட்டார்கள்.The people of thy holiness have possessed it but a little while: our adversaries have trodden down thy sanctuary.
19நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் தரிக்கப்பட்டதுமில்லை.We are thine: thou never barest rule over them; they were not called by thy name.
1Aethomilum athilulla posraa pattanaththilumirunthu, saayantheerntha vasthirangalutaiyavaraakavum, makaththuvamaay uduththirukkiravaraakavum, thamathu makaththaana vallamaiyilae eluntharulinavaraakavum varukira ivar yaar? Neethiyaayp paesi iratchikka vallavaraakiya naanthaanae.Who is this that cometh from Edom, with dyed garments from Bozrah? this that is glorious in his apparel, travelling in the greatness of his strength? I that speak in righteousness, mighty to save.
2Ummutaiya uduppuch sivappaakavum, ummutaiya vasthirangal aalaiyai mithikkiravan vasthirangalpolavum irukkirathenna?Wherefore art thou red in thine apparel, and thy garments like him that treadeth in the winefat?
3Naan oruvanaay aalaiyai mithiththaen; janangalil oruvanum ennotirunthathillai, naan en kopaththilae avarkalai mithiththu, en ukkiraththilae avarkalai nasukkippottaேn; athinaal avarkal iraththam en vasthirangalinmael theriththathu, en uduppaiyellaam karaippaduththikkonntaen.I have trodden the winepress alone; and of the people there was none with me: for I will tread them in mine anger, and trample them in my fury; and their blood shall be sprinkled upon my garments, and I will stain all my raiment.
4Neethiyaich sarikkattum naal en manathilirunthathu; ennutaiyavarkalai meetkum varusham vanthathu.For the day of vengeance is in mine heart, and the year of my redeemed is come.
5Naan paarththaen, thunnaiseyvaar oruvarumillai; thaanguvaar oruvarumillai entu aachchariyappattaேn; appoluthu en puyamae enakku iratchippaaki, en ukkiramae ennaith thaangittaு.And I looked, and there was none to help; and I wondered that there was none to uphold: therefore mine own arm brought salvation unto me; and my fury, it upheld me.
6Naan en kopaththilae janangalai mithiththu, en ukkiraththilae avarkalai veriyaakki, avarkal saaraththaith tharaiyilae irangappannnninaen.And I will tread down the people in mine anger, and make them drunk in my fury, and I will bring down their strength to the earth.
7Karththar engalukkuch seytharulina ellaavattirkum thakkathaakavum avar thammutaiya irakkangalinpatiyum thammutaiya thiralaana thayavukalinpatiyum, Israel vamsaththukkuch seytha makaa nanmaikkuththakkathaakavum, karththarutaiya kiriyaikalaiyum, karththarutaiya thuthikalaiyum pirasthaapampannnuvaen.I will mention the lovingkindnesses of the LORD, and the praises of the LORD, according to all that the LORD hath bestowed on us, and the great goodness toward the house of Israel, which he hath bestowed on them according to his mercies, and according to the multitude of his lovingkindnesses.
8Avarkal en jananthaanentum, avarkal vanjanaiseyyaathirukkum pillaikalentum solli avarkalukku iratchakaraanaar.For he said, Surely they are my people, children that will not lie: so he was their Saviour.
9Avarkalutaiya ellaa nerukkaththilum avar nerukkappattar; avarutaiya samukaththin thoothanaanavar avarkalai iratchiththaar; avar thamathu anpinimiththamum, thamathu parithaapaththinimiththamum avarkalai meettu, poorvanaatkalilellaam avarkalaith thookkich sumanthuvanthaar.In all their affliction he was afflicted, and the angel of his presence saved them: in his love and in his pity he redeemed them; and he bare them, and carried them all the days of old.
10Avarkalo kalakampannnni, avarutaiya Parisuththa aaviyai visanappaduththinaarkal; athinaal avar avarkalukkuch saththuruvaay maari, avarae avarkalukku virothamaay yuththampannnninaar.But they rebelled, and vexed his holy Spirit: therefore he was turned to be their enemy, and he fought against them.
11Aakilum avar poorvanaatkalaiyum, Mosesyaiyum, thammutaiya janaththaiyum ninaivukoornthaar; aanaalum avarkalaiyum, thamathu manthaiyin maeyppanaiyum samuththiraththilirunthu aerivarappannnninavar ippoluthu engae?Then he remembered the days of old, Moses, and his people, saying, Where is he that brought them up out of the sea with the shepherd of his flock? where is he that put his holy Spirit within him?
12Avarkal naduvilae thammutaiya Parisuththa aaviyai irukkak kattalaiyittu, Mosesyin valathukaiyaikkonndu avarkalaith thamathu makiyin puyaththinaalae nadaththi, thamakku niththiyageerththiyai unndaakka avarkalukku munpaakath thannnneeraip pilanthu,That led them by the right hand of Moses with his glorious arm, dividing the water before them, to make himself an everlasting name?
13Oru kuthirai vanaantharaveliyilae nadakkirathupola, avarkal idaraathapatikku avarkalai aalangalil nadakkappannnninavar engae?That led them through the deep, as an horse in the wilderness, that they should not stumble?
14Karththarutaiya Aaviyaanavar avarkalaip pallaththaakkilae poy irangukira mirukajeevankalaippola ilaippaarappannnninaar; ippatiyae thaevareer, umakku makimaiyulla geerththiyai unndaakkumpati ummutaiya janaththai nadaththineer.As a beast goeth down into the valley, the Spirit of the LORD caused him to rest: so didst thou lead thy people, to make thyself a glorious name.
15Thaevareer paralokaththilirunthu kannnnokki, Parisuththamum makimaiyumulla ummutaiya vaasasthalaththilirunthu paarum, ummutaiya vairaakkiyamum, ummutaiya vallamaiyum engae? Ummutaiya ullaththin kothippaiyum, ummutaiya mana urukkaththaiyum enakku munpaaka adakkikkollukireero?Look down from heaven, and behold from the habitation of thy holiness and of thy glory: where is thy zeal and thy strength, the sounding of thy bowels and of thy mercies toward me? are they restrained?
16Thaevareer engal pithaavaayirukkireer; Abraham engalai ariyaan, isravaelukku naangal ariyappattavarkalumalla; karththaavae, neer engal pithaavum engal meetparumaayirukkireer; ithu poorvakaalamuthal ummutaiya naamam.Doubtless thou art our father, though Abraham be ignorant of us, and Israel acknowledge us not: thou, O LORD, art our father, our redeemer; thy name is from everlasting.
17Karththaavae, neer engalai ummutaiya valikalaivittuth thappippokappannnni, engal iruthayaththai umakkup payappadaathapatikkuk katinappaduththuvaanaen? Ummutaiya ooliyakkaararinimiththamum, ummutaiya suthantharamaana koththirangalinimiththamum thirumpiyarulum.O LORD, why hast thou made us to err from thy ways, and hardened our heart from thy fear? Return for thy servants' sake, the tribes of thine inheritance.
18Parisuththamulla umathu janangal konjak kaalamaaththiram athaich suthanthariththaarkal; engal saththurukkal ummutaiya Parisuththa sthalaththai mithiththuppottarkal.The people of thy holiness have possessed it but a little while: our adversaries have trodden down thy sanctuary.
19Naangalae ummutaiyavarkal, avarkalai orupoluthum neer aanndathillai; avarkalukku umathu naamam tharikkappattathumillai.We are thine: thou never barest rule over them; they were not called by thy name.