1 இத்தகைய தலைமைக் குரு நமக்கு வாய்த்துள்ளார் என்பதே இதுகாறும் நாம் கூறியவற்றின் தலையாய கருத்து. இவர் விண்ணகத்தில் பெருமைமிகு கடவுளுடைய அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

2 அங்கே மனிதரால் அல்ல, ஆண்டவராலே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் ஊழியம் செய்கிறார்.⒫

3 ஒவ்வொரு தலைமைக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். எனவே பலி செலுத்துவதற்கு இவரிடமும் ஏதேனும் ஒரு பொருள் கட்டாயம் இருக்க வேண்டும்.

4 உலகிலேயே இருந்திருப்பாரென்றால் இவர் குருவாக இருந்திருக்கமாட்டார். ஏனெனில், திருச்சட்டத்தின்படி காணிக்கைகளைச் செலுத்த ஏற்கெனவே இங்குக் குருமார்கள் இருக்கிறார்கள்.

5 இவர்கள் வழிபடும் இடம் விண்ணகக் கூடாரத்தின் சாயலும் நிழலுமே. மோசே கூடாரத்தை அமைத்தபோது,⁽“மலையில் உனக்குக்␢ காண்பிக்கப்பட்ட முறைப்படி␢ நீ இவற்றையெல்லாம்␢ செய்யுமாறு கவனித்துக்கொள்”⁾என்று கடவுள் பணித்தது இதைச் சுட்டிக்காட்டுகிறது.

6 ஆனால், இவரோ அவர்களுடைய குருத்துவப்பணியை விட மிக மேன்மையான குருத்துவப் பணியைப் பெற்றிருக்கிறார். ஏனெனில் சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இவரை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிட சிறப்புமிக்கது.⒫

7 முதல் உடன்படிக்கை குறையற்றதாய் இருந்திருப்பின், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடமே இருந்திருக்காது.

8 ஆனால், கடவுள் அவர்களது குற்றத்தை எடுத்துக் கூறிக் சொன்னது இதுவே:⁽“இதோ, நாள்கள் வருகின்றன.␢ அப்போது இஸ்ரயேல் வீட்டாரோடும்␢ யூதாவின் வீட்டாரோடும்␢ புதிய உன்படிக்கை ஒன்றைச்␢ செய்து கொள்வேன்”⁾ என்கிறார் ஆண்டவர்.

9 ⁽“எகிப்து நாட்டிலிருந்து␢ அவர்களுடைய மூதாதையரைக்␢ கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது␢ நான் அவர்களோடு␢ செய்துகொண்ட உடன்படிக்கையைப்␢ போன்று இது இராது.␢ ஏனெனில், நான் அவர்களோடு␢ செய்துகொண்ட உடன்படிக்கையை␢ அவர்கள் மீறிவிட்டார்கள்;␢ நானும் அவர்கள் மீது␢ அக்கறை கொள்ளவில்லை”⁾ என்கிறார் ஆண்டவர்.

10 ⁽“அந்நாள்களுக்குப் பின்␢ இஸ்ரயேல் வீட்டாரோடு␢ நான் செய்யவிருக்கும்␢ உடன்படிக்கை இதுவே:␢ என் சட்டத்தை உள்ளத்தில் பதிப்பேன்;␢ அதை அவர்களது இதயத்தில்␢ எழுதி வைப்பேன்.␢ நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்;␢ அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்”⁾ என்கிறார் ஆண்டவர்.

11 ⁽இனிமேல் எவரும்␢ “ஆண்டவரை அறிந்து கொள்ளும்” எனத்␢ தம் அடுத்தவருக்கோ,␢ சகோதரர் சகோதரிகளுக்கோ␢ கற்றுத் தர மாட்டார்.␢ ஏனெனில், அவர்களுள்␢ பெரியோர் முதல் சிறியோர்வரை␢ அனைவரும் என்னை அறிந்துகொள்வர்.⁾

12 ⁽அவர்களது தீச்செயலை நான்␢ இரக்கத்தோடு மன்னித்துவிடுவேன்.␢ அவர்களுடைய பாவங்களை␢ இனிமேல் நினைவுகூர மாட்டேன்.”⁾⒫

13 “புதியதோர் உடன்படிக்கை” என்பதால், முன்னையதை அவர் பழையதாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரைவில் மறையவேண்டியதே.

Hebrews 8 ERV IRV TRV