Jeremiah 23:5
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
Acts 8:20பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது,
Isaiah 52:13இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.
Colossians 4:5புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
Psalm 104:24கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.