Judges 16:3
சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின் மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான்.
2 Chronicles 3:7அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், அதின் சுவர்களையும், அதின் கதவுகளையும் பொன்தகட்டால் முடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான்.
2 Chronicles 29:7அவர்கள் பரிசுத்தஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்.
Nehemiah 3:3மீன்வாசலை அசெனாவின் குமாரர் கட்டினார்கள்; அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
Nehemiah 3:6பழைய வாசலைப் பசெயாசின் குமாரனாகிய யோய்தாவும், பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
Nehemiah 3:13பள்ளத்தாக்கின் வாசலை ஆனூனும், சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்மட்டாக அலங்கத்தில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.
Nehemiah 3:14குப்பைமேட்டு வாசலைப் பெத்கேரேமின் மகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்.
Nehemiah 3:15ஊருணிவாசலை மிஸ்பாவின் மாகாணத்துப் பிரபுவாகிய கொல்லோசேயின் குமாரன் சல்லுூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி மச்சுப்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, ராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள் மட்டாக இருக்கிறதையும் கட்டினான்.
Job 38:10நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: