Joshua 21:4
கோகாத்தியரின் வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது; அந்தச் சீட்டின்படி லேவியரில் ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.
Numbers 16:1லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு,
Deuteronomy 3:14மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர் மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லைமட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.
Joshua 21:20லேவியரான கோகாத்தின் புத்திரரில் மீதியான அவர்களுடைய மற்ற வம்சங்களுக்கு எப்பிராயீமின் கோத்திரத்திலே அவர்களுக்குப் பங்குவீதமாக அவர்கள் கொடுத்த பட்டணங்களாவன:
2 Chronicles 20:19கோகாத்தியரின் புத்திரரிலும் கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள்.
Joshua 12:5எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாரான் அனைத்தையும் ஆண்டான்.
1 Chronicles 6:38இவன் இத்சாரின் குமாரன்; இவன் கோகாத்தின் குமாரன்; இவன் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குமாரன்.
1 Chronicles 6:61கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக்கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.
1 Chronicles 6:54அவர்கள் பேட்டைகளின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் வாசஸ்தலங்களாவன: கோகாத்தியரின் வம்சமான ஆரோனின் புத்திரருக்கு விழுந்த சீட்டின்படியே,
1 Chronicles 23:12கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர்.
Numbers 7:9கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது.
Joshua 21:5கோகாத்தின் மற்றப்புத்திரருக்கு, எப்பிராயீம் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், தாண் கோத்திரத்திலும் மனாசேயின் பாதிக்கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பத்து.
Exodus 6:18கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்று முப்பத்து மூன்று வருஷம் உயிரோடிருந்தான்.
1 Chronicles 6:33கோகாத்தியரின் குமாரரில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் சாமுவேலின் குமாரன்.
1 Chronicles 6:2கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
Joshua 21:9லேவியின் குமாரரில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியரின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் குமாரருக்கு,
1 Chronicles 6:22கோகாத்தின் குமாரரில் ஒருவன் அம்மினதாப், இவன் குமாரன் கோராகு, இவன் குமாரன் ஆசீர்.
1 Chronicles 6:18கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
1 Chronicles 9:32அவர்கள் சகோதரராகிய கோகாத்தியரின் புத்திரரில் சிலருக்கு ஓய்வுநாள் தோறும் அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.
Numbers 26:57எண்ணப்பட்ட லேவியரின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியரின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியரின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியரின் குடும்பமும்;
Numbers 3:27கோகாத்தின் வழியாய் அம்ராமியரின் வம்சமும் இத்சேயாரின் வம்சமும் எப்ரோனியரின் வம்சமும் ஊசியேலரின் வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியரின் வம்சங்கள்.
Numbers 10:21கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவார்கள்.