பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிப்பிராகாரத்திலே புறப்படப்பண்ணி, பிரத்தியேகமான இடத்துக்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார்.
நூறு முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அவ்விடத்து அகலம் ஐம்பது முழம்.
உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.
புறம்பே அறைவீடுகளுக்கு எதிரே வெளிப்பிராகாரத் திசையில் அறை வீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.
கீழ்த்திசையான பிராகாரத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.
அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும் எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாயிருந்தது.
தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கீழ்த்திசையில் அவைகளுக்குப் பிரவேசிக்கும் இடத்திலே செம்மையான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசலிருந்தது.
அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருக்கிற வடபுறமான அறைவீடுகளும் தென்புறமான அறைவீடுகளும் பரிசுத்த அறைவீடுகளாயிருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர் அங்கே மகா பரிசுத்தமானதையும், போஜனபலியையும், பாநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த ஸ்தலம் பரிசுத்தமாயிருக்கிறது.
ஆசாரியர் உட்பிரவேசிக்கும்போது, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்திருந்து வெளிப்பிராகாரத்துக்கு வராததற்குமுன்னே, அங்கே தாங்கள் ஆராதனை செய்து உடுத்தியிருந்த ஸ்திரங்களைக் கழற்றி வைப்பார்கள்; அவ்வஸ்திரங்கள் பரிசுத்தமானவைகள்; வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, ஜனத்தின் பிராகாரத்திலே போவார்கள் என்றார்.
அவர் உள்வீட்டை அளந்து தீர்ந்தபின்பு, கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச்சுற்றிலும் அளந்தார்.
மேற்றிசைப் பக்கத்துக்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
stories. was | נֶ֣גֶד | neged | NEH-ɡed |
was cubits | הָֽעֶשְׂרִ֗ים | hāʿeśrîm | ha-es-REEM |
were Over | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
against the twenty which | לֶחָצֵ֣ר | leḥāṣēr | leh-ha-TSARE |
court, | הַפְּנִימִ֔י | happĕnîmî | ha-peh-nee-MEE |
inner the for | וְנֶ֣גֶד | wĕneged | veh-NEH-ɡed |
and against | רִֽצְפָ֔ה | riṣĕpâ | ree-tseh-FA |
over | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
pavement the which court, | לֶחָצֵ֣ר | leḥāṣēr | leh-ha-TSARE |
for | הַחִֽיצוֹנָ֑ה | haḥîṣônâ | ha-hee-tsoh-NA |
utter the | אַתִּ֥יק | ʾattîq | ah-TEEK |
gallery | אֶל | ʾel | el |
פְּנֵֽי | pĕnê | peh-NAY | |
against | אַתִּ֖יק | ʾattîq | ah-TEEK |
gallery in | בַּשְּׁלִשִֽׁים׃ | baššĕlišîm | ba-sheh-lee-SHEEM |