1கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய வஸ்திரங்களையும், ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களையும் செய்தார்கள்.And of the blue, and purple, and scarlet, they made cloths of service, to do service in the holy place, and made the holy garments for Aaron; as the LORD commanded Moses.
2ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.And he made the ephod of gold, blue, and purple, and scarlet, and fine twined linen.
3அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள்.And they did beat the gold into thin plates, and cut it into wires, to work it in the blue, and in the purple, and in the scarlet, and in the fine linen, with cunning work.
4இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாய் இணைக்கப்பட்டிருந்தது.They made shoulderpieces for it, to couple it together: by the two edges was it coupled together.
5அந்த ஏபோத்தின்மேலிருக்கும் விசித்திரமான கச்சை, அந்த வேலைக்கு ஒப்பாகவே பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்யப்பட்டது.And the curious girdle of his ephod, that was upon it, was of the same, according to the work thereof; of gold, blue, and purple, and scarlet, and fine twined linen; as the LORD commanded Moses.
6இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.And they wrought onyx stones inclosed in ouches of gold, graven, as signets are graven, with the names of the children of Israel.
7கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவைகள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து ஞாபகக்குறிக் கற்களாயிருக்கும்படி ஏபோத்துத் தோள்களின்மேல் அவைகளை வைத்தான்.And he put them on the shoulders of the ephod, that they should be stones for a memorial to the children of Israel; as the LORD commanded Moses.
8மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.And he made the breastplate of cunning work, like the work of the ephod; of gold, blue, and purple, and scarlet, and fine twined linen.
9அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாய்ச் செய்து, ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாக்கி,It was foursquare; they made the breastplate double: a span was the length thereof, and a span the breadth thereof, being doubled.
10அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,And they set in it four rows of stones: the first row was a sardius, a topaz, and a carbuncle: this was the first row.
11இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,And the second row, an emerald, a sapphire, and a diamond.
12மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,And the third row, a ligure, an agate, and an amethyst.
13நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.And the fourth row, a beryl, an onyx, and a jasper: they were inclosed in ouches of gold in their inclosings.
14இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்களுள்ளவைகளுமாயிருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம் ஒவ்வொன்றிலும் முத்திரை வெட்டாய் வெட்டியிருந்தது.And the stones were according to the names of the children of Israel, twelve, according to their names, like the engravings of a signet, every one with his name, according to the twelve tribes.
15மார்ப்பதக்கத்துக்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,And they made upon the breastplate chains at the ends, of wreathed work of pure gold.
16இரண்டு பொன் குவளைகளையும் இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கத்திலும் வைத்து,And they made two ouches of gold, and two gold rings; and put the two rings in the two ends of the breastplate.
17பொன்னினால் செய்த பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களிலும் மாட்டி,And they put the two wreathed chains of gold in the two rings on the ends of the breastplate.
18பின்னல் வேலையான அவ்விரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள் மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள்.And the two ends of the two wreathed chains they fastened in the two ouches, and put them on the shoulderpieces of the ephod, before it.
19பின்னும் இரண்டு வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு பக்கங்களிலும் அதின் ஓரத்தில் வைத்து,And they made two rings of gold, and put them on the two ends of the breastplate, upon the border of it, which was on the side of the ephod inward.
20வேறே இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து,And they made two other golden rings, and put them on the two sides of the ephod underneath, toward the forepart of it, over against the other coupling thereof, above the curious girdle of the ephod.
21மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், ஏபோத்திலிருந்து நீங்கிப் போகாதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடே இளநீல நாடாவினாலே, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, கட்டினார்கள்.And they did bind the breastplate by his rings unto the rings of the ephod with a lace of blue, that it might be above the curious girdle of the ephod, and that the breastplate might not be loosed from the ephod; as the LORD commanded Moses.
22ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.And he made the robe of the ephod of woven work, all of blue.
23அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்துக்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது.And there was an hole in the midst of the robe, as the hole of an habergeon, with a band round about the hole, that it should not rend.
24அங்கியின் கீழ் ஓரங்களில் தொங்கத்தக்கதாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதளம்பழங்களைப் பண்ணி,And they made upon the hems of the robe pomegranates of blue, and purple, and scarlet, and twined linen.
25பசும்பொன்னினால் மணிகளையும் பண்ணி, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதளம்பழங்களின் இடைஇடையே தொங்கவைத்தார்கள்.And they made bells of pure gold, and put the bells between the pomegranates upon the hem of the robe, round about between the pomegranates;
26கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமுமாய் இருந்தது.A bell and a pomegranate, a bell and a pomegranate, round about the hem of the robe to minister in; as the LORD commanded Moses.
27ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும்,And they made coats of fine linen of woven work for Aaron, and for his sons,
28மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும்,And a mitre of fine linen, and goodly bonnets of fine linen, and linen breeches of fine twined linen,
29திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடைக்கச்சையையும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்தார்கள்.And a girdle of fine twined linen, and blue, and purple, and scarlet, of needlework; as the LORD commanded Moses.
30பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் பசும்பொன்னினாலே பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாக வெட்டி,And they made the plate of the holy crown of pure gold, and wrote upon it a writing, like to the engravings of a signet, HOLINESS TO THE LORD.
31அதை உயரப் பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.And they tied unto it a lace of blue, to fasten it on high upon the mitre; as the LORD commanded Moses.
32இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.Thus was all the work of the tabernacle of the tent of the congregation finished: and the children of Israel did according to all that the LORD commanded Moses, so did they.
33பின்பு, வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,And they brought the tabernacle unto Moses, the tent, and all his furniture, his taches, his boards, his bars, and his pillars, and his sockets,
34சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோல் மூடியையும், தகசுத்தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும்,And the covering of rams' skins dyed red, and the covering of badgers' skins, and the vail of the covering,
35சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும்,The ark of the testimony, and the staves thereof, and the mercy seat,
36மேஜையையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,The table, and all the vessels thereof, and the showbread,
37சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாய் ஒழுங்குபடுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,The pure candlestick, with the lamps thereof, even with the lamps to be set in order, and all the vessels thereof, and the oil for light,
38பொற்பீடத்தையும், அபிஷேக தைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்குதிரையையும்,And the golden altar, and the anointing oil, and the sweet incense, and the hanging for the tabernacle door,
39வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,The brazen altar, and his grate of brass, his staves, and all his vessels, the laver and his foot,
40பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதன் முளைகளையும், ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வேலைக்கடுத்த சகல பணிமுட்டுகளையும்,The hangings of the court, his pillars, and his sockets, and the hanging for the court gate, his cords, and his pins, and all the vessels of the service of the tabernacle, for the tent of the congregation,
41பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்கடுத்த வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் கொண்டுவந்தார்கள்.The cloths of service to do service in the holy place, and the holy garments for Aaron the priest, and his sons' garments, to minister in the priest's office.
42கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்தார்கள்.According to all that the LORD commanded Moses, so the children of Israel made all the work.
43மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; கர்த்தர் கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.And Moses did look upon all the work, and, behold, they had done it as the LORD had commanded, even so had they done it: and Moses blessed them.
1Karththar Moseskkuk karpiththapatiyae, avarkal ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum Parisuththa sthalaththil aaraathanai seykiratharku vaenntiya vasthirangalaiyum, aaronukkup Parisuththa vasthirangalaiyum seythaarkal.And of the blue, and purple, and scarlet, they made cloths of service, to do service in the holy place, and made the holy garments for Aaron; as the LORD commanded Moses.
2Aepoththaip ponninaalum ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappu noolaalum thiriththa melliya panjunoolaalum seythaan.And he made the ephod of gold, blue, and purple, and scarlet, and fine twined linen.
3Anthap ponnai, ilaneelanoolodum iraththaamparanoolodum sivappunoolodum melliya panjunoolodum serththu visiththiravaelaiyaay neyyumpatikku, melliya thakadukalaay atiththu, avaikalaich sarikaikalaakap pannnninaarkal.And they did beat the gold into thin plates, and cut it into wires, to work it in the blue, and in the purple, and in the scarlet, and in the fine linen, with cunning work.
4Iranndu tholkalinmaelulla athin iranndu munaikalaiyum serththaarkal; athu ontay innaikkappattirunthathu.They made shoulderpieces for it, to couple it together: by the two edges was it coupled together.
5Antha aepoththinmaelirukkum visiththiramaana kachchaை, antha vaelaikku oppaakavae ponninaalum ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum, thiriththa melliya panjunoolaalum, Karththar Moseskkuk karpiththapatiyae, seyyappattathu.And the curious girdle of his ephod, that was upon it, was of the same, according to the work thereof; of gold, blue, and purple, and scarlet, and fine twined linen; as the LORD commanded Moses.
6Israel puththirarin naamangalai muththirai vettuvaelaiyaakak komaethakak karkalil vetti, avaikalaip pon kuvalaikalil pathiththaarkal.And they wrought onyx stones inclosed in ouches of gold, graven, as signets are graven, with the names of the children of Israel.
7Karththar Moseskkuk karpiththapatiyae, avaikal Israel puththiraraikkuriththu njaapakakkurik karkalaayirukkumpati aepoththuth tholkalinmael avaikalai vaiththaan.And he put them on the shoulders of the ephod, that they should be stones for a memorial to the children of Israel; as the LORD commanded Moses.
8Maarppathakkaththai aepoththin vaelaikku oththa visiththiravaelaiyaakap ponninaalum ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum thiriththa melliya panjunoolaalum seythaan.And he made the breastplate of cunning work, like the work of the ephod; of gold, blue, and purple, and scarlet, and fine twined linen.
9Antha maarppathakkaththaich sathuramum irattaைyumaaych seythu, oru jaann neelamum oru jaann akalamumaakki,It was foursquare; they made the breastplate double: a span was the length thereof, and a span the breadth thereof, being doubled.
10Athilae naalu paththi raththinakkarkalaip pathiththaarkal; muthalaam paththi pathmaraakamum pushparaakamum maannikkamum,And they set in it four rows of stones: the first row was a sardius, a topaz, and a carbuncle: this was the first row.
11Iranndaam paththi marakathamum inthiraneelamum vachchiramum,And the second row, an emerald, a sapphire, and a diamond.
12Moontam paththi kempum vaitooriyamum sukanthiyum,And the third row, a ligure, an agate, and an amethyst.
13Naalaam paththi patikappachchaைyum komaethakamum yaspiyumaanathu. Avaikal anthantha idangalilae ponkuvalaikalil pathikkappattirunthathu.And the fourth row, a beryl, an onyx, and a jasper: they were inclosed in ouches of gold in their inclosings.
14Inthak karkal Israel puththirarutaiya naamangalinpatiyae panniranndum, avarkalutaiya naamangalullavaikalumaayirunthathu; panniranndu koththirangalil ovvoru koththiraththin naamam ovvontilum muththirai vettay vettiyirunthathu.And the stones were according to the names of the children of Israel, twelve, according to their names, like the engravings of a signet, every one with his name, according to the twelve tribes.
15Maarppathakkaththukku athin pakkangalilae pinnal vaelaiyaana pasumpon sangilikalaiyum pannnni,And they made upon the breastplate chains at the ends, of wreathed work of pure gold.
16Iranndu pon kuvalaikalaiyum iranndu pon valaiyangalaiyum seythu, antha iranndu valaiyangalai maarppathakkaththin iranndu pakkaththilum vaiththu,And they made two ouches of gold, and two gold rings; and put the two rings in the two ends of the breastplate.
17Ponninaal seytha pinnal vaelaiyaana antha iranndu sangilikalaiyum maarppathakkaththin pakkangalil irukkira iranndu valaiyangalilum maatti,And they put the two wreathed chains of gold in the two rings on the ends of the breastplate.
18Pinnal vaelaiyaana avviranndu sangilikalin iranndu nunikalaiyum aepoththin tholpuraththuth thunndukal mael munpuraththil irukkira iranndu kuvalaikalilum maattinaarkal.And the two ends of the two wreathed chains they fastened in the two ouches, and put them on the shoulderpieces of the ephod, before it.
19Pinnum iranndu valaiyangalaip pannnni, avaikalai aepoththin geelppuraththirku ethiraana maarppathakkaththin matta iranndu pakkangalilum athin oraththil vaiththu,And they made two rings of gold, and put them on the two ends of the breastplate, upon the border of it, which was on the side of the ephod inward.
20Vaeraே iranndu pon valaiyangalaiyum pannnni, avaikalai aepoththin munpuraththin iranndu geelppakkangalil athin innaippukku ethiraakavum, aepoththin visiththiramaana kachchaைkku maelaakavum vaiththu,And they made two other golden rings, and put them on the two sides of the ephod underneath, toward the forepart of it, over against the other coupling thereof, above the curious girdle of the ephod.
21Maarppathakkam aepoththin visiththiramaana kachchaைkku maelaaka irukkumpatikkum, aepoththilirunthu neengip pokaathapatikkum, athai athin valaiyangalaal aepoththin valaiyangalotae ilaneela naadaavinaalae, Karththar Moseskkuk karpiththapatiyae, kattinaarkal.And they did bind the breastplate by his rings unto the rings of the ephod with a lace of blue, that it might be above the curious girdle of the ephod, and that the breastplate might not be loosed from the ephod; as the LORD commanded Moses.
22Aepoththin geel angiyai muluvathum ilaneelanoolaal neythaan.And he made the robe of the ephod of woven work, all of blue.
23Angiyin naduvil maarkkavasath thuvaaraththukku oppaaka oru thuvaaramum, athu kiliyaathapati anthath thuvaaraththaich suttilum oru naadaavum thaiththirunthathu.And there was an hole in the midst of the robe, as the hole of an habergeon, with a band round about the hole, that it should not rend.
24Angiyin geel orangalil thongaththakkathaakath thiriththa ilaneelanoolum iraththaamparanoolum sivappunoolumaana vaelaiyaaka maathalampalangalaip pannnni,And they made upon the hems of the robe pomegranates of blue, and purple, and scarlet, and twined linen.
25Pasumponninaal mannikalaiyum pannnni, antha mannikalai angiyin orangalil suttilum maathalampalangalin itaiitaiyae thongavaiththaarkal.And they made bells of pure gold, and put the bells between the pomegranates upon the hem of the robe, round about between the pomegranates;
26Karththar Moseskkuk karpiththapatiyae aaraathanaikkuriya angiyin oraththaich suttilum, oru manniyum oru maathalampalamum, oru manniyum oru maathalampalamumaay irunthathu.A bell and a pomegranate, a bell and a pomegranate, round about the hem of the robe to minister in; as the LORD commanded Moses.
27Aaronukkum avan kumaararukkum melliya panjunoolaal nesavuvaelaiyaana angikalaiyum,And they made coats of fine linen of woven work for Aaron, and for his sons,
28Melliya panjunoolaal paakaiyaiyum, alangaaramaana kullaakkalaiyum, thiriththa melliya sanalnoolaal salladangalaiyum,And a mitre of fine linen, and goodly bonnets of fine linen, and linen breeches of fine twined linen,
29Thiriththa melliya panjunoolaalum ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum siththirath thaiyalvaelaiyaana itaikkachchaைyaiyum, Karththar Moseskkuk karpiththapatiyae, seythaarkal.And a girdle of fine twined linen, and blue, and purple, and scarlet, of needlework; as the LORD commanded Moses.
30Parisuththa kireedaththin pattaththaiyum pasumponninaalae pannnni, karththarukkup Parisuththam ennum eluththukkalai athilae muththirai vettaka vetti,And they made the plate of the holy crown of pure gold, and wrote upon it a writing, like to the engravings of a signet, HOLINESS TO THE LORD.
31Athai uyarap paakaiyinmael kattumpati, Karththar Moseskkuk karpiththapatiyae, ilaneela naadaavinaal kattinaarkal.And they tied unto it a lace of blue, to fasten it on high upon the mitre; as the LORD commanded Moses.
32Ippatiyae aasarippuk koodaaramaakiya vaasasthalaththin vaelaiyellaam mutinthathu; Karththar Moseskkuk karpiththapatiyellaam Israel puththirar seythaarkal.Thus was all the work of the tabernacle of the tent of the congregation finished: and the children of Israel did according to all that the LORD commanded Moses, so did they.
33Pinpu, vaasasthalaththai Mosesyinidaththil konnduvanthaarkal; koodaaraththaiyum, atharkuriya ellaap pannimuttukalaiyum, athin thuradukalaiyum, athin palakaikalaiyum, athin thaalppaalkalaiyum, athin thoonnkalaiyum, athin paathangalaiyum,And they brought the tabernacle unto Moses, the tent, and all his furniture, his taches, his boards, his bars, and his pillars, and his sockets,
34Sivappuththeerntha aattukkadaath thol mootiyaiyum, thakasuththol mootiyaiyum, maraivin thiraichchaீlaiyaiyum,And the covering of rams' skins dyed red, and the covering of badgers' skins, and the vail of the covering,
35Saatchippettiyaiyum, athin thanndukalaiyum, kirupaasanaththaiyum,The ark of the testimony, and the staves thereof, and the mercy seat,
36Maejaiyaiyum, athin ellaap pannimuttukalaiyum, samukaththappangalaiyum,The table, and all the vessels thereof, and the showbread,
37Suththamaana kuththuvilakkaiyum, varisaiyaay olungupaduththappatta athin akalkalaiyum, athin ellaap pannimuttukalaiyum, velichchaththirku ennnneyaiyum,The pure candlestick, with the lamps thereof, even with the lamps to be set in order, and all the vessels thereof, and the oil for light,
38Porpeedaththaiyum, apishaeka thailaththaiyum, sukantha thoopavarkkaththaiyum, vaasasthalaththin vaasal thonguthiraiyaiyum,And the golden altar, and the anointing oil, and the sweet incense, and the hanging for the tabernacle door,
39Vennkalap palipeedaththaiyum, athin vennkalach sallataiyaiyum, athin thanndukalaiyum, athin sakala pannimuttukalaiyum, thottiyaiyum, athin paathaththaiyum,The brazen altar, and his grate of brass, his staves, and all his vessels, the laver and his foot,
40Piraakaaraththin thonguthiraikalaiyum, athin thoonnkalaiyum, athin paathangalaiyum, piraakaaraththu vaasal maraivaiyum, athin kayiraுkalaiyum, athan mulaikalaiyum, aasarippuk koodaaramaana vaasasthalaththin vaelaikkaduththa sakala pannimuttukalaiyum,The hangings of the court, his pillars, and his sockets, and the hanging for the court gate, his cords, and his pins, and all the vessels of the service of the tabernacle, for the tent of the congregation,
41Parisuththa sthalaththilae seyyum aaraathanaikkaduththa vasthirangalaiyum, aasaariya ooliyanjaெykira aaronin Parisuththa vasthirangalaiyum, avan kumaararin vasthirangalaiyum konnduvanthaarkal.The cloths of service to do service in the holy place, and the holy garments for Aaron the priest, and his sons' garments, to minister in the priest's office.
42Karththar Moseskkuk karpiththapatiyellaam Israel puththirar sakala vaelaikalaiyum seythaarkal.According to all that the LORD commanded Moses, so the children of Israel made all the work.
43Moses antha vaelaikalaiyellaam paarththaan; Karththar karpiththapatiyae athaich seythirunthaarkal. Moses avarkalai aaseervathiththaan.And Moses did look upon all the work, and, behold, they had done it as the LORD had commanded, even so had they done it: and Moses blessed them.