ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக.
ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக, அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும்.
வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக.
ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாய் இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப் போடுவாயாக.
கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தின் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.
ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக.
நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
சீத்திம் மரத்தினால் செய்து, பொன்தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.
திரைக்குப் புறம்பாக மேஜையையும் மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக.
And they shall be | וְיִֽהְי֣וּ | wĕyihĕyû | veh-yee-heh-YOO |
coupled together | תֹֽאֲמִם֮ | tōʾămim | toh-uh-MEEM |
beneath, | מִלְּמַטָּה֒ | millĕmaṭṭāh | mee-leh-ma-TA |
together be shall they | וְיַחְדָּ֗ו | wĕyaḥdāw | veh-yahk-DAHV |
and | יִֽהְי֤וּ | yihĕyû | yee-heh-YOO |
coupled | תַמִּים֙ | tammîm | ta-MEEM |
above | עַל | ʿal | al |
the head | רֹאשׁ֔וֹ | rōʾšô | roh-SHOH |
unto it of | אֶל | ʾel | el |
ring: | הַטַּבַּ֖עַת | haṭṭabbaʿat | ha-ta-BA-at |
one | הָֽאֶחָ֑ת | hāʾeḥāt | ha-eh-HAHT |
thus | כֵּ֚ן | kēn | kane |
shall it be | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
both; them for | לִשְׁנֵיהֶ֔ם | lišnêhem | leesh-nay-HEM |
for the two | לִשְׁנֵ֥י | lišnê | leesh-NAY |
corners. they shall | הַמִּקְצֹעֹ֖ת | hammiqṣōʿōt | ha-meek-tsoh-OTE |
be | יִֽהְיֽוּ׃ | yihĕyû | YEE-heh-YOO |