யாத்திராகமம் 24:12
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு. நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயை நோக்கி, “மலையின் உச்சியில் என்னிடம் வா. அங்கே எனது கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நியாயப்பிரமாணத்தையும், கற்பனைகளையும் நான் உனக்கு கொடுப்பேன்” என்றார்.
Thiru Viviliam
ஆண்டவர் மோசேயை நோக்கி, “என்னிடம் மலைமேல் ஏறிவந்து இங்கேயே இரு. அவர்களுக்குக் கற்பிக்க நான் எழுதியுள்ள சட்டதிட்டங்கள் அடங்கிய கற்பலகைகளை உன்னிடம் அளிப்பேன்” என்றார்.
Title
தேவனின் கட்டளையைப் பெறுவதற்கு மோசே போகிறான்
Other Title
சீனாய் மலைமேல் மோசே
King James Version (KJV)
And the LORD said unto Moses, Come up to me into the mount, and be there: and I will give thee tables of stone, and a law, and commandments which I have written; that thou mayest teach them.
American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Come up to me into the mount, and be there: and I will give thee the tables of stone, and the law and the commandment, which I have written, that thou mayest teach them.
Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Come up to me on the mountain, and take your place there: and I will give you the stones on which I have put in writing the law and the orders, so that you may give the people knowledge of them.
Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Come up to me into the mountain, and be there; and I will give thee the tables of stone, and the law, and the commandment that I have written, for their instruction.
Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, Come up to me on the mount, and be there: and I will give thee tables of stone, and a law, and commandments which I have written; that thou mayst teach them.
World English Bible (WEB)
Yahweh said to Moses, “Come up to me on the mountain, and stay here, and I will give you the tables of stone with the law and the commands that I have written, that you may teach them.”
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Come up unto Me to the mount, and be there, and I give to thee the tables of stone, and the law, and the command, which I have written to direct them.’
யாத்திராகமம் Exodus 24:12
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.
And the LORD said unto Moses, Come up to me into the mount, and be there: and I will give thee tables of stone, and a law, and commandments which I have written; that thou mayest teach them.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA | |
| אֶל | ʾel | el | |
| מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH | |
| עֲלֵ֥ה | ʿălē | uh-LAY | |
| אֵלַ֛י | ʾēlay | ay-LAI | |
| הָהָ֖רָה | hāhārâ | ha-HA-ra | |
| וֶֽהְיֵה | wehĕyē | VEH-heh-yay | |
| שָׁ֑ם | šām | shahm | |
| וְאֶתְּנָ֨ה | wĕʾettĕnâ | veh-eh-teh-NA | |
| לְךָ֜ | lĕkā | leh-HA | |
| אֶת | ʾet | et | |
| לֻחֹ֣ת | luḥōt | loo-HOTE | |
| הָאֶ֗בֶן | hāʾeben | ha-EH-ven | |
| וְהַתּוֹרָה֙ | wĕhattôrāh | veh-ha-toh-RA | |
| וְהַמִּצְוָ֔ה | wĕhammiṣwâ | veh-ha-meets-VA | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| כָּתַ֖בְתִּי | kātabtî | ka-TAHV-tee | |
| לְהֽוֹרֹתָֽם׃ | lĕhôrōtām | leh-HOH-roh-TAHM |
Cross Reference
உபாகமம் 5:22
இந்த வார்த்தைகளை கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்.
யாத்திராகமம் 32:15
பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.
யாத்திராகமம் 31:18
சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.
யாத்திராகமம் 24:18
மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.
யாத்திராகமம் 24:15
மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.
யாத்திராகமம் 24:2
மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார்.
எபிரெயர் 9:4
அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
2 கொரிந்தியர் 3:7
எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.
2 கொரிந்தியர் 3:3
ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.
மத்தேயு 5:19
ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் பெரியவன் என்னப்படுவான்.
எரேமியா 31:33
அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நெகேமியா 9:13
நீர் சீனாய் மலையிலிறங்கி வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
எஸ்றா 7:10
கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.
உபாகமம் 4:14
நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்க வேண்டுமென்று அக்காலத்திலே கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்.
Tags அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து அங்கே இரு நான் உனக்குக் கற்பலகைகளையும் நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்
Exodus 24:12 in Tamil Concordance Exodus 24:12 in Tamil Interlinear Exodus 24:12 in Tamil Image