1சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின் பேர் அமுத்தாள், அவள் லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.Zedekiah was one and twenty years old when he began to reign, and he reigned eleven years in Jerusalem. And his mother's name was Hamutal the daughter of Jeremiah of Libnah.
2யோயாக்கீம் செய்தபடியெல்லாம் அவனும் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.And he did that which was evil in the eyes of the LORD, according to all that Jehoiakim had done.
3எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.For through the anger of the LORD it came to pass in Jerusalem and Judah, till he had cast them out from his presence, that Zedekiah rebelled against the king of Babylon.
4அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.And it came to pass in the ninth year of his reign, in the tenth month, in the tenth day of the month, that Nebuchadrezzar king of Babylon came, he and all his army, against Jerusalem, and pitched against it, and built forts against it round about.
5அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.So the city was besieged unto the eleventh year of king Zedekiah.
6நாலாம் மாதம் ஒன்பதாம் தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்துக்கு ஆகாரமில்லாமல் போயிற்று.And in the fourth month, in the ninth day of the month, the famine was sore in the city, so that there was no bread for the people of the land.
7நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ஓடி, ராஜாவுடைய தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள்.Then the city was broken up, and all the men of war fled, and went forth out of the city by night by the way of the gate between the two walls, which was by the king's garden; (now the Chaldeans were by the city round about:) and they went by the way of the plain.
8ஆனாலும் கல்தேயருடைய இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமனான பூமியில் சிதேக்கியாவைக் கிட்டினார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவத்தார் எல்லாரும் அவனைவிட்டு சிதறிப்போனார்கள்.But the army of the Chaldeans pursued after the king, and overtook Zedekiah in the plains of Jericho; and all his army was scattered from him.
9அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான்.Then they took the king, and carried him up unto the king of Babylon to Riblah in the land of Hamath; where he gave judgment upon him.
10பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.And the king of Babylon slew the sons of Zedekiah before his eyes: he slew also all the princes of Judah in Riblah.
11சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கிப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.Then he put out the eyes of Zedekiah; and the king of Babylon bound him in chains, and carried him to Babylon, and put him in prison till the day of his death.
12ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.Now in the fifth month, in the tenth day of the month, which was the nineteenth year of Nebuchadrezzar king of Babylon, came Nebuzaradan, captain of the guard, which served the king of Babylon, into Jerusalem,
13அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.And burned the house of the LORD, and the king's house; and all the houses of Jerusalem, and all the houses of the great men, burned he with fire:
14காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.And all the army of the Chaldeans, that were with the captain of the guard, brake down all the walls of Jerusalem round about.
15ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.Then Nebuzaradan the captain of the guard carried away captive certain of the poor of the people, and the residue of the people that remained in the city, and those that fell away, that fell to the king of Babylon, and the rest of the multitude.
16ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.But Nebuzaradan the captain of the guard left certain of the poor of the land for vinedressers and for husbandmen.
17கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.Also the pillars of brass that were in the house of the LORD, and the bases, and the brasen sea that was in the house of the LORD, the Chaldeans brake, and carried all the brass of them to Babylon.
18செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.The caldrons also, and the shovels, and the snuffers, and the bowls, and the spoons, and all the vessels of brass wherewith they ministered, took they away.
19பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும் தூபகலசங்களையும், கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான்.And the basons, and the firepans, and the bowls, and the caldrons, and the candlesticks, and the spoons, and the cups; that which was of gold in gold, and that which was of silver in silver, took the captain of the guard away.
20சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல் தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை.The two pillars, one sea, and twelve brasen bulls that were under the bases, which king Solomon had made in the house of the LORD: the brass of all these vessels was without weight.
21அந்தத் தூண்களோவெனில், ஒவ்வொரு தூண் பதினெட்டுமுழ உயரமாயிருந்தது; பன்னிரண்டு முழநூல் அதைச் சுற்றும்; நாலு விரற்கடை அதின் கனம்; உள்ளே குழாயாயிருந்தது.And concerning the pillars, the height of one pillar was eighteen cubits; and a fillet of twelve cubits did compass it; and the thickness thereof was four fingers: it was hollow.
22அதின்மேல் வெண்கலக் குமிழ் இருந்தது; ஒரு குமிழின் உயரம் ஐந்து முழம், குமிழிலே சுற்றிலும் பின்னலும் மாதளம்பழங்களும் செய்திருந்தது; எல்லாம் வெண்கலமாயிருந்தது; அதற்குச் சரியாய் மற்றத் தூணுக்கும் மாதளம்பழங்களும் செய்திருந்தது.And a chapiter of brass was upon it; and the height of one chapiter was five cubits, with network and pomegranates upon the chapiters round about, all of brass. The second pillar also and the pomegranates were like unto these.
23தொண்ணூற்றாறு மாதளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் நூறு.And there were ninety and six pomegranates on a side; and all the pomegranates upon the network were an hundred round about.
24காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.And the captain of the guard took Seraiah the chief priest, and Zephaniah the second priest, and the three keepers of the door:
25நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழு பேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.He took also out of the city an eunuch, which had the charge of the men of war; and seven men of them that were near the king's person, which were found in the city; and the principal scribe of the host, who mustered the people of the land; and threescore men of the people of the land, that were found in the midst of the city.
26அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய் விட்டான்.So Nebuzaradan the captain of the guard took them, and brought them to the king of Babylon to Riblah.
27அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவிலே அவர்களை வெட்டிக்கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.And the king of Babylon smote them, and put them to death in Riblah in the land of Hamath. Thus Judah was carried away captive out of his own land.
28நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்துமூன்று யூதரும்,This is the people whom Nebuchadrezzar carried away captive: in the seventh year three thousand Jews and three and twenty:
29நேபுகாத்நேச்சாருடைய பதினெட்டாம் வருஷத்தில் எருசலேமிலிருந்து எண்ணூற்று முப்பத்திரண்டு பேர்களும் கொண்டுபோகப்பட்டார்கள்.In the eighteenth year of Nebuchadrezzar he carried away captive from Jerusalem eight hundred thirty and two persons:
30நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; ஆக நாலாயிரத்து அறுநூறு பேர்களாம்.In the three and twentieth year of Nebuchadrezzar Nebuzaradan the captain of the guard carried away captive of the Jews seven hundred forty and five persons: all the persons were four thousand and six hundred.
31யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,And it came to pass in the seven and thirtieth year of the captivity of Jehoiachin king of Judah, in the twelfth month, in the five and twentieth day of the month, that Evilmerodach king of Babylon in the first year of his reign lifted up the head of Jehoiachin king of Judah, and brought him forth out of prison.
32அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் ஆசனங்களுக்கு மேலாக வைத்து,And spake kindly unto him, and set his throne above the throne of the kings that were with him in Babylon,
33அவனுடைய சிறையிருப்பு வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் தன் சமுகத்தில் நித்தம் போஜனம்பண்ணும்படி செய்தான்.And changed his prison garments: and he did continually eat bread before him all the days of his life.
34அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய மரணநாள் பரியந்தமும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.And for his diet, there was a continual diet given him of the king of Babylon, every day a portion until the day of his death, all the days of his life.
1Sithaekkiyaa raajaavaakirapothu irupaththoru vayathaayirunthaan; avan pathinoru varusham erusalaemil raajyapaarampannnninaan; avanutaiya thaayin paer amuththaal, aval lipnaa ooraanaakiya eraemiyaavin kumaaraththi.Zedekiah was one and twenty years old when he began to reign, and he reigned eleven years in Jerusalem. And his mother's name was Hamutal the daughter of Jeremiah of Libnah.
2Yoyaakgeem seythapatiyellaam avanum karththarutaiya paarvaikkup pollaappaanathaich seythaan.And he did that which was evil in the eyes of the LORD, according to all that Jehoiakim had done.
3Erusalaemaiyum yoothaavaiyum Karththar thammutaiya samukaththaivittu akattith theerumalavum, avaikalin maelulla avarutaiya kopaththinaal ippati nadanthathum allaamal, sithaekkiyaa paapilonilae raajaavukku virothamaakak kalakampannnninaan.For through the anger of the LORD it came to pass in Jerusalem and Judah, till he had cast them out from his presence, that Zedekiah rebelled against the king of Babylon.
4Avan raajyapaarampannnum onpathaam varusham paththaam maatham paththaanthaethiyilae paapilon raajaavaakiya naepukaathnaechchaாrum, avanutaiya ellaa iraanuvamum erusalaemukku virothamaay vanthu, atharku ethiraakap paalayamirangi, suttilum atharku ethiraakak koththalangalaik kattinaarkal.And it came to pass in the ninth year of his reign, in the tenth month, in the tenth day of the month, that Nebuchadrezzar king of Babylon came, he and all his army, against Jerusalem, and pitched against it, and built forts against it round about.
5Appatiyae sithaekkiyaa raajaavin pathinoraam varushamattum nakaram muttikkai podappattirunthathu.So the city was besieged unto the eleventh year of king Zedekiah.
6Naalaam maatham onpathaam thaethiyilae panjam nakaraththilae athikariththu, thaesaththin janaththukku aakaaramillaamal poyittaு.And in the fourth month, in the ninth day of the month, the famine was sore in the city, so that there was no bread for the people of the land.
7Nakaraththin mathil itikkappattathu; appoluthu kalthaeyar nakaraththaich soolnthirukkaiyil, yuththamanushar ellaarum iraaththirikaalaththil oti, raajaavutaiya thottaththin valiyae iranndu mathilkalukkum naduvaana vaasalaal nakaraththilirunthu purappattu, vayalveliyin valiyae poyvittarkal.Then the city was broken up, and all the men of war fled, and went forth out of the city by night by the way of the gate between the two walls, which was by the king's garden; (now the Chaldeans were by the city round about:) and they went by the way of the plain.
8Aanaalum kalthaeyarutaiya iraanuvaththaar raajaavaip pinthodarnthu, erikovin samanaana poomiyil sithaekkiyaavaik kittinaarkal; appoluthu avanutaiya iraanuvaththaar ellaarum avanaivittu sitharipponaarkal.But the army of the Chaldeans pursued after the king, and overtook Zedekiah in the plains of Jericho; and all his army was scattered from him.
9Avarkal raajaavaip pitiththu, avanai aamaaththaesaththin ooraakiya riplaavukkup paapilon raajaavaakiya naepukaathnaechchaாridaththukkuk konnduponaarkal; angae ivanukku niyaayaththeerppuk koduththaan.Then they took the king, and carried him up unto the king of Babylon to Riblah in the land of Hamath; where he gave judgment upon him.
10Pinpu paapilon raajaa sithaekkiyaavin kumaararai avan kannkalukku munpaaka vettinaan; yoothaavin pirapukkalellaaraiyum riplaavilae vettinaan.And the king of Babylon slew the sons of Zedekiah before his eyes: he slew also all the princes of Judah in Riblah.
11Sithaekkiyaavin kannkalaik kurudaakkip poduviththaan; pinpu paapilon raajaa avanaip paapilonukkuk konndupoy, avan maranamataiyum naalmattum avanaik kaaval veettil ataiththuvaiththaan.Then he put out the eyes of Zedekiah; and the king of Babylon bound him in chains, and carried him to Babylon, and put him in prison till the day of his death.
12Ainthaam maatham paththaanthaethiyilae, paapilon raajaavukku munpaaka nirkiravanaakiya kaavarsenaathipathiyaana naepusaraathaan erusalaemukku vanthaan; athu naepukaathnaechchaாr ennum raajaa paapilonai arasaalukira paththonpathaam varushamaayirunthathu.Now in the fifth month, in the tenth day of the month, which was the nineteenth year of Nebuchadrezzar king of Babylon, came Nebuzaradan, captain of the guard, which served the king of Babylon, into Jerusalem,
13Avan karththarutaiya aalayaththaiyum, raajaavin aramanaiyaiyum, erusalaemilulla ellaa veedukalaiyum, ovvoru periya manithanutaiya veettaைyum akkiniyinaal sutteriththuppottan.And burned the house of the LORD, and the king's house; and all the houses of Jerusalem, and all the houses of the great men, burned he with fire:
14Kaavarsenaathipathiyotiruntha kalthaeyarin iraanuvaththaarellaarum erusalaemaich suttilum iruntha alangangalai itiththuppottarkal.And all the army of the Chaldeans, that were with the captain of the guard, brake down all the walls of Jerusalem round about.
15Janaththil aelaikalaana silaraiyum nakaraththil meethiyaana matta janaththaiyum, paapilon raajaavin vasamaaka otivanthuvittavarkalaiyum, matta janangalaiyum kaavarsenaathipathiyaakiya naepusaraathaan siraikalaakak konnduponaan.Then Nebuzaradan the captain of the guard carried away captive certain of the poor of the people, and the residue of the people that remained in the city, and those that fell away, that fell to the king of Babylon, and the rest of the multitude.
16Aanaal thaesaththaaril aelaikalaana silaraik kaavarsenaathipathiyaakiya naepusaraathaan thiraatchaththottakkaararaakavum payiridungutikalaakavum vittuvaiththaan.But Nebuzaradan the captain of the guard left certain of the poor of the land for vinedressers and for husbandmen.
17Karththarutaiya aalayaththilirunthu vennkalath thoonnkalaiyum, karththarutaiya aalayaththiliruntha aathaarangalaiyum, vennkalak kadalthottiyaiyum kalthaeyar utaiththuppottu, avaikalin vennkalaththaiyellaam paapilonukku eduththukkonndu ponaarkal.Also the pillars of brass that were in the house of the LORD, and the bases, and the brasen sea that was in the house of the LORD, the Chaldeans brake, and carried all the brass of them to Babylon.
18Seppuchchattikalaiyum, saampal edukkum karanntikalaiyum, vettukkaththikalaiyum, kalangalaiyum, kalayangalaiyum, aaraathanaikkuriya sakala vennkalappannimuttukalaiyum eduththukkonnduponaarkal.The caldrons also, and the shovels, and the snuffers, and the bowls, and the spoons, and all the vessels of brass wherewith they ministered, took they away.
19Pasumponnum suththavelliyumaana kinnnangalaiyum thoopakalasangalaiyum, kalangalaiyum, sattikalaiyum, vilakkuththanndukalaiyum, kalayangalaiyum, karakangalaiyum kaavarsenaathipathi eduththukkonndaan.And the basons, and the firepans, and the bowls, and the caldrons, and the candlesticks, and the spoons, and the cups; that which was of gold in gold, and that which was of silver in silver, took the captain of the guard away.
20Saalomon raajaa karththarutaiya aalayaththukkaakach seythu vaiththa iranndu thoonnkalum oru kadal thottiyum aathaarangalin geelninta panniranndu vennkala rishapangalum aakiya ivaikalukkuriya vennkalaththukku niraiyillai.The two pillars, one sea, and twelve brasen bulls that were under the bases, which king Solomon had made in the house of the LORD: the brass of all these vessels was without weight.
21Anthath thoonnkalovenil, ovvoru thoonn pathinettumula uyaramaayirunthathu; panniranndu mulanool athaich suttaுm; naalu virarkatai athin kanam; ullae kulaayaayirunthathu.And concerning the pillars, the height of one pillar was eighteen cubits; and a fillet of twelve cubits did compass it; and the thickness thereof was four fingers: it was hollow.
22Athinmael vennkalak kumil irunthathu; oru kumilin uyaram ainthu mulam, kumililae suttilum pinnalum maathalampalangalum seythirunthathu; ellaam vennkalamaayirunthathu; atharkuch sariyaay mattath thoonukkum maathalampalangalum seythirunthathu.And a chapiter of brass was upon it; and the height of one chapiter was five cubits, with network and pomegranates upon the chapiters round about, all of brass. The second pillar also and the pomegranates were like unto these.
23Thonnnnoottaாraு maathalampalangal naanku thisaikalukkum ethiraakach seythirunthathu; kumilaich suttilum seythiruntha maathalampalangal nooraு.And there were ninety and six pomegranates on a side; and all the pomegranates upon the network were an hundred round about.
24Kaavarsenaathipathi pirathaana aasaariyanaakiya seraayaavaiyum, iranndaam aasaariyanaakiya seppaniyaavaiyum, vaasarpatiyin moontu kaavarkaararaiyum pitiththukkonnduponaan.And the captain of the guard took Seraiah the chief priest, and Zephaniah the second priest, and the three keepers of the door:
25Nakaraththilovental avan yuththa manusharin visaarippukkaaranaakiya pirathaani oruvanaiyum, raajaavin manthirikalil nakaraththil akappatta aelu paeraiyum, thaesaththin janaththaich sevakam eluthukira thalaimaiyaana sampirathiyaiyum, thaesaththu janaththilae pattanaththin naduvil akappatta araுpathu paeraiyum pitiththukkonnduponaan.He took also out of the city an eunuch, which had the charge of the men of war; and seven men of them that were near the king's person, which were found in the city; and the principal scribe of the host, who mustered the people of the land; and threescore men of the people of the land, that were found in the midst of the city.
26Avarkalaik kaavarsenaathipathiyaakiya naepusaraathaan pitiththu, avarkalai riplaavukkup paapilon raajaavinidaththirkuk konndupoy vittan.So Nebuzaradan the captain of the guard took them, and brought them to the king of Babylon to Riblah.
27Appoluthu paapilon raajaa aamaath ennum thaesaththin pattanamaakiya riplaavilae avarkalai vettikkontupottan; ivvithamaaka yootharkal thangal thaesaththilirunthu siraikalaayk konndupokappattarkal.And the king of Babylon smote them, and put them to death in Riblah in the land of Hamath. Thus Judah was carried away captive out of his own land.
28Naepukaathnaechchaாr siraipitiththuppona janangalin thokai evvalavental, aelaam varushaththil moovaayiraththu irupaththumoontu yootharum,This is the people whom Nebuchadrezzar carried away captive: in the seventh year three thousand Jews and three and twenty:
29Naepukaathnaechchaாrutaiya pathinettam varushaththil erusalaemilirunthu ennnnoottaு muppaththiranndu paerkalum konndupokappattarkal.In the eighteenth year of Nebuchadrezzar he carried away captive from Jerusalem eight hundred thirty and two persons:
30Naepukaathnaechchaாrutaiya irupaththumoontam varushaththil kaavarsenaathipathiyaakiya naepusaraathaan yootharil elunoottaு naarpaththainthupaerkalaich siraipitiththukkonnduponaan; aaka naalaayiraththu araுnooraு paerkalaam.In the three and twentieth year of Nebuchadrezzar Nebuzaradan the captain of the guard carried away captive of the Jews seven hundred forty and five persons: all the persons were four thousand and six hundred.
31Yoothaavin raajaavaakiya yoyaakgeenutaiya siraiyiruppin muppaththaelaam varusham panniranndaam maatham irupaththainthaam thaethiyilae, aevil merothaak ennum paapilon raajaa, thaan raajaavaana varushaththilae, yoothaavin raajaavaakiya yoyaakgeenaich siraichchaாlaiyilirunthu velippadappannnni, avan thalaiyai uyarththi,And it came to pass in the seven and thirtieth year of the captivity of Jehoiachin king of Judah, in the twelfth month, in the five and twentieth day of the month, that Evilmerodach king of Babylon in the first year of his reign lifted up the head of Jehoiachin king of Judah, and brought him forth out of prison.
32Avanotae anpaayp paesi, avanutaiya aasanaththaith thannotae paapilonil aasanangalukku maelaaka vaiththu,And spake kindly unto him, and set his throne above the throne of the kings that were with him in Babylon,
33Avanutaiya siraiyiruppu vasthirangalai maattinaan; avan uyirotiruntha sakala naalum than samukaththil niththam pojanampannnumpati seythaan.And changed his prison garments: and he did continually eat bread before him all the days of his life.
34Avan uyirotiruntha naalellaam avanutaiya marananaal pariyanthamum, avanutaiya selavukkaakap paapilon raajaavinaal kattalaiyaana anuthinath thittaththinpati, anuthinamum avanukkuk kodukkappattuvanthathu.And for his diet, there was a continual diet given him of the king of Babylon, every day a portion until the day of his death, all the days of his life.