1அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.Moreover, brethren, we do you to wit of the grace of God bestowed on the churches of Macedonia;
2அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.How that in a great trial of affliction the abundance of their joy and their deep poverty abounded unto the riches of their liberality.
3மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்.For to their power, I bear record, yea, and beyond their power they were willing of themselves;
4தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்மஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.Praying us with much intreaty that we would receive the gift, and take upon us the fellowship of the ministering to the saints.
5மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.And this they did, not as we hoped, but first gave their own selves to the Lord, and unto us by the will of God.
6ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.Insomuch that we desired Titus, that as he had begun, so he would also finish in you the same grace also.
7அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.Therefore, as ye abound in every thing, in faith, and utterance, and knowledge, and in all diligence, and in your love to us, see that ye abound in this grace also.
8இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன்.I speak not by commandment, but by occasion of the forwardness of others, and to prove the sincerity of your love.
9நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.For ye know the grace of our Lord Jesus Christ, that, though he was rich, yet for your sakes he became poor, that ye through his poverty might be rich.
10இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மாத்திரமல்ல, செய்யவேண்டுமென்று உற்சாகப்படுகிறதற்கும் ஒருவருஷமாய் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாயிருக்கும்.And herein I give my advice: for this is expedient for you, who have begun before, not only to do, but also to be forward a year ago.
11ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.Now therefore perform the doing of it; that as there was a readiness to will, so there may be a performance also out of that which ye have.
12ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.For if there be first a willing mind, it is accepted according to that a man hath, and not according to that he hath not.
13மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன்.For I mean not that other men be eased, and ye burdened:
14எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்,But by an equality, that now at this time your abundance may be a supply for their want, that their abundance also may be a supply for your want: that there may be equality:
15சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.As it is written, He that had gathered much had nothing over; and he that had gathered little had no lack.
16அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.But thanks be to God, which put the same earnest care into the heart of Titus for you.
17நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கிகரித்ததுமல்லாமல், அவன் அதிக ஜாக்கிரதையாயிருந்து, தன் விருப்பத்தின்படியே உங்களிடத்திற்கு வரப் புறப்பட்டான்.For indeed he accepted the exhortation; but being more forward, of his own accord he went unto you.
18சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடேகூட அனுப்பியிருக்கிறோம்.And we have sent with him the brother, whose praise is in the gospel throughout all the churches;
19அதுமாத்திரமல்ல, கர்த்தருக்கு மகிமையுண்டாகவும், உங்கள் மனவிருப்பம் விளங்கவும், எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகையில், எங்களுக்கு வழித்துணையாயிருக்கும்படி, அவன் சபைகளால் தெரிந்து ஏற்படுத்தப்பட்டவனாயும் இருக்கிறான்.And not that only, but who was also chosen of the churches to travel with us with this grace, which is administered by us to the glory of the same Lord, and declaration of your ready mind:
20ஊழியத்தினாலே சேர்க்கப்பட்ட மிகுதியான தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து,Avoiding this, that no man should blame us in this abundance which is administered by us:
21கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.Providing for honest things, not only in the sight of the Lord, but also in the sight of men.
22மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவனென்று நாங்கள் பலமுறை கண்டறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேலுள்ள மிகுந்த நம்பிக்கையினாலே அதிக ஜாக்கிரதையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடே கூட அனுப்பியிருக்கிறோம்.And we have sent with them our brother, whom we have oftentimes proved diligent in many things, but now much more diligent, upon the great confidence which I have in you.
23தீத்துவைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும் உங்களுக்காக என் உடன்வேலையாளுமாயிக்கிறானென்றும்; எங்கள் சகோதரரைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளுடைய ஸ்தானாபதிகளும், கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார்களென்றும் அறியக்கடவன்.Whether any do enquire of Titus, he is my partner and fellowhelper concerning you: or our brethren be enquired of, they are the messengers of the churches, and the glory of Christ.
24ஆதலால் உங்கள் அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.Wherefore shew ye to them, and before the churches, the proof of your love, and of our boasting on your behalf.
1Antiyum sakothararae, makkethoniyaa naattuch Sabaikalukku Dhevan aliththa kirupaiyai ungalukku arivikkirom.Moreover, brethren, we do you to wit of the grace of God bestowed on the churches of Macedonia;
2Avarkal mikuntha upaththiravaththinaalae sothikkappadukaiyil, kotiya thariththiramutaiyavarkalaayirunthum, thangal paripoorana santhoshaththinaalae mikuntha uthaaraththuvamaayk koduththaarkal.How that in a great trial of affliction the abundance of their joy and their deep poverty abounded unto the riches of their liberality.
3Maelum avarkal thangal thiraannikkuth thakkathaakavum, thangal thiraannikku minjiyum kodukka thaangalae manathullavarkalaayirunthaarkalenpatharku, naan saatchiyaayirukkiraேn.For to their power, I bear record, yea, and beyond their power they were willing of themselves;
4Thangal upakaaraththaiyum, Parisuththavaankalukkuch seyyappadum tharmaooliyaththin pangaiyum naangal aettaுkkollumpati avarkal engalai mikavum vaenntikkonndaarkal.Praying us with much intreaty that we would receive the gift, and take upon us the fellowship of the ministering to the saints.
5Maelum naangal ninaiththapatimaaththiram kodaamal, thaevanutaiya siththaththinaalae munpu thangalaiththaamae karththarukkum, pinpu engalukkum oppukkoduththaarkal.And this they did, not as we hoped, but first gave their own selves to the Lord, and unto us by the will of God.
6Aathalaal theeththu inthath tharmakaariyaththai ungalidaththil thodanginapatiyae, athai mutikkavum vaenndumentu avanaik kaettukkonntoom.Insomuch that we desired Titus, that as he had begun, so he would also finish in you the same grace also.
7Allaamalum, visuvaasaththilum, pothippilum, arivilum, ellaavitha jaakkirathaiyilum, engalmaelulla ungal anpilum, mattellaak kaariyangalilum, neengal perukiyirukkirathupola, inthath tharmakaariyaththilum perukavaenndum.Therefore, as ye abound in every thing, in faith, and utterance, and knowledge, and in all diligence, and in your love to us, see that ye abound in this grace also.
8Ithai naan kattalaiyaakach sollaamal, mattavarkalutaiya jaakkirathaiyaikkonndu, ungal anpin unnmaiyaich sothikkumporuttaே sollukiraேn.I speak not by commandment, but by occasion of the forwardness of others, and to prove the sincerity of your love.
9Nammutaiya karththaraakiya YesuKristhuvin kirupaiyai arinthirukkireerkalae; avar aisuvariyamullavaraayirunthum, neengal avarutaiya thariththiraththinaalae aisuvariyavaankalaakumpatikku, ungalnimiththam thariththiraraanaarae.For ye know the grace of our Lord Jesus Christ, that, though he was rich, yet for your sakes he became poor, that ye through his poverty might be rich.
10Ithaikkuriththu en yosanaiyai ungalukku arivikkiraேn; ithaich seykiratharku maaththiramalla, seyyavaenndumentu ursaakappadukiratharkum oruvarushamaay aarampampannnnina ungalukku ithu thakuthiyaayirukkum.And herein I give my advice: for this is expedient for you, who have begun before, not only to do, but also to be forward a year ago.
11Aakaiyaal athai ippoluthu seythu niraivaettaுngal; kodukkavaenndum enkira viruppamunndaayirunthathupola, ungalukku ullavaikalil eduththu athai niraivaettaுthalum unndaavathaaka.Now therefore perform the doing of it; that as there was a readiness to will, so there may be a performance also out of that which ye have.
12Oruvanukku manaviruppamirunthaal, avanukku illaathathinpatiyalla, avanukku ullathinpatiyae angikarikkappadum.For if there be first a willing mind, it is accepted according to that a man hath, and not according to that he hath not.
13Mattavarkalukkuch sakaayamum ungalukku varuththamum unndaakumpatiyalla, samanilaiyirukkumpatiyaakavae sollukiraேn.For I mean not that other men be eased, and ye burdened:
14Eppatiyenil, mikuthiyaaych serththavanukku athikamaanathumillai, konjamaaych serththavanukkuk kuraivaanathumillai entu eluthiyirukkirapirakaaram,But by an equality, that now at this time your abundance may be a supply for their want, that their abundance also may be a supply for your want: that there may be equality:
15Samanilaip piramaanaththinpatiyae, avarkalutaiya selvam ungal varaுmaikku uthavumpatikku ikkaalaththilae ungalutaiya selvam avarkalutaiya varaுmaikku uthavuvathaaka.As it is written, He that had gathered much had nothing over; and he that had gathered little had no lack.
16Antiyum ungalukkaaka ippatippatta jaakkirathai unndaayirukkumpati theeththuvin iruthayaththil arulina thaevanukku Sthoththiram.But thanks be to God, which put the same earnest care into the heart of Titus for you.
17Naangal kaettukkonndathai avan angikariththathumallaamal, avan athika jaakkirathaiyaayirunthu, than viruppaththinpatiyae ungalidaththirku varap purappattan.For indeed he accepted the exhortation; but being more forward, of his own accord he went unto you.
18Suvisesha ooliyaththil ellaach Sabaikalilum pukalchchipetta oru sakotharanai avanotaekooda anuppiyirukkirom.And we have sent with him the brother, whose praise is in the gospel throughout all the churches;
19Athumaaththiramalla, karththarukku makimaiyunndaakavum, ungal manaviruppam vilangavum, engal ooliyaththinaalae serkkappadum tharmappanaththaik konndupokaiyil, engalukku valiththunnaiyaayirukkumpati, avan Sabaikalaal therinthu aerpaduththappattavanaayum irukkiraan.And not that only, but who was also chosen of the churches to travel with us with this grace, which is administered by us to the glory of the same Lord, and declaration of your ready mind:
20Ooliyaththinaalae serkkappatta mikuthiyaana tharmappanaththaikkuriththu oruvanum engalaik kuttappaduththaathapatikku naangal echcharikkaiyaayirunthu,Avoiding this, that no man should blame us in this abundance which is administered by us:
21Karththarukku munpaakamaaththiramalla, manusharukku munpaakavum yokkiyamaanavaikalaich seyya naadukirom.Providing for honest things, not only in the sight of the Lord, but also in the sight of men.
22Maelum, anaeka kaariyangalil jaakkirathaiyullavanentu naangal palamurai kanndarinthavanum, ippoluthu ungalmaelulla mikuntha nampikkaiyinaalae athika jaakkirathaiyullavanumaakiya nammutaiya sakotharanaiyum ivarkalotae kooda anuppiyirukkirom.And we have sent with them our brother, whom we have oftentimes proved diligent in many things, but now much more diligent, upon the great confidence which I have in you.
23Theeththuvaikkuriththu oruvan visaariththaal, avan enakkuk koottaliyum ungalukkaaka en udanvaelaiyaalumaayikkiraanentum; engal sakothararaikkuriththu oruvan visaariththaal, avarkal Sabaikalutaiya sthaanaapathikalum, Kristhuvukku makimaiyumaayirukkiraarkalentum ariyakkadavan.Whether any do enquire of Titus, he is my partner and fellowhelper concerning you: or our brethren be enquired of, they are the messengers of the churches, and the glory of Christ.
24Aathalaal ungal anpaiyum, naangal ungalaikkuriththuch sonna pukalchchiyaiyum, Sabaikalukku munpaaka avarkalukkuth thirushdaanthappaduththungal.Wherefore shew ye to them, and before the churches, the proof of your love, and of our boasting on your behalf.