யோவான் 21:22
அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
Tamil Easy Reading Version
அதற்கு இயேசு, “நான் வருமளவும் இவன் இருக்க எனக்கு விருப்பம் உண்டு. அது உனக்கு அவ்வளவு முக்கியமில்லை. நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார்.
Thiru Viviliam
இயேசு அவரிடம், “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார்.
King James Version (KJV)
Jesus saith unto him, If I will that he tarry till I come, what is that to thee? follow thou me.
American Standard Version (ASV)
Jesus saith unto him, If I will that he tarry till I come, what `is that’ to thee? Follow thou me.
Bible in Basic English (BBE)
Jesus said to him, If it is my desire for him to be here till I come back, what is that to you? come yourself after me.
Darby English Bible (DBY)
Jesus says to him, If I will that he abide until I come, what [is that] to thee? Follow thou me.
World English Bible (WEB)
Jesus said to him, “If I desire that he stay until I come, what is that to you? You follow me.”
Young’s Literal Translation (YLT)
Jesus saith to him, `If him I will to remain till I come, what — to thee? be thou following me.’ This word, therefore, went forth to the brethren that that disciple doth not die,
யோவான் John 21:22
அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
Jesus saith unto him, If I will that he tarry till I come, what is that to thee? follow thou me.
| λέγει | legei | LAY-gee | |
| αὐτῷ | autō | af-TOH | |
| ὁ | ho | oh | |
| Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS | |
| Ἐὰν | ean | ay-AN | |
| αὐτὸν | auton | af-TONE | |
| θέλω | thelō | THAY-loh | |
| μένειν | menein | MAY-neen | |
| ἕως | heōs | AY-ose | |
| ἔρχομαι | erchomai | ARE-hoh-may | |
| τί | ti | tee | |
| πρὸς | pros | prose | |
| σέ | se | say | |
| σύ | sy | syoo | |
| ἀκολούθει | akolouthei | ah-koh-LOO-thee | |
| μοι | moi | moo |
Cross Reference
1 கொரிந்தியர் 4:5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:25
உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
1 கொரிந்தியர் 11:26
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
யோவான் 21:19
இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.
மாற்கு 9:1
அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணும்முன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:20
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:7
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:11
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
வெளிப்படுத்தின விசேஷம் 1:7
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
யாக்கோபு 5:7
இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.
மத்தேயு 25:31
அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
மத்தேயு 24:44
நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
மத்தேயு 24:27
மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
மத்தேயு 24:3
பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
மத்தேயு 16:27
மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
Tags அதற்கு இயேசு நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன நீ என்னைப் பின்பற்றிவா என்றார்
John 21:22 in Tamil Concordance John 21:22 in Tamil Interlinear John 21:22 in Tamil Image