Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 6:31 in Tamil

Home Bible John John 6 John 6:31

யோவான் 6:31
வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள்.

Tamil Indian Revised Version
வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தை சாப்பிடக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய முற்பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்களே என்றார்கள்.

Tamil Easy Reading Version
நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் தேவன் கொடுத்த மன்னாவை (உணவு) உண்டார்கள். இது ‘தேவன் பரலோகத்தில் இருந்து அவர்களுக்கு உண்பதற்கு அப்பத்தைக் கொடுத்தார்,’ என்று எழுதப்பட்டிருக்கிறது” என்று மக்கள் கேட்டனர்.

Thiru Viviliam
எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ⁽‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்’⁾ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!” என்றனர்.

John 6:30John 6John 6:32

King James Version (KJV)
Our fathers did eat manna in the desert; as it is written, He gave them bread from heaven to eat.

American Standard Version (ASV)
Our fathers ate the manna in the wilderness; as it is written, He gave them bread out of heaven to eat.

Bible in Basic English (BBE)
Our fathers had the manna in the waste land, as the Writings say, He gave them bread from heaven.

Darby English Bible (DBY)
Our fathers ate the manna in the wilderness, as it is written, He gave them bread out of heaven to eat.

World English Bible (WEB)
Our fathers ate the manna in the wilderness. As it is written, ‘He gave them bread out of heaven{Greek and Hebrew use the same word for “heaven”, “the heavens”, “the sky”, and “the air”.} to eat.'”

Young’s Literal Translation (YLT)
our fathers the manna did eat in the wilderness, according as it is having been written, Bread out of the heaven He gave them to eat.’

யோவான் John 6:31
வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள்.
Our fathers did eat manna in the desert; as it is written, He gave them bread from heaven to eat.

οἱhoioo
πατέρεςpaterespa-TAY-rase
ἡμῶνhēmōnay-MONE
τὸtotoh
μάνναmannaMAHN-na
ἔφαγονephagonA-fa-gone
ἐνenane
τῇtay
ἐρήμῳerēmōay-RAY-moh
καθώςkathōska-THOSE
ἐστινestinay-steen
γεγραμμένονgegrammenongay-grahm-MAY-none
ἌρτονartonAR-tone
ἐκekake
τοῦtoutoo
οὐρανοῦouranouoo-ra-NOO
ἔδωκενedōkenA-thoh-kane
αὐτοῖςautoisaf-TOOS
φαγεῖνphageinfa-GEEN

Cross Reference

சங்கீதம் 105:40
கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.

நெகேமியா 9:15
அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.

யோவான் 6:49
உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்

வெளிப்படுத்தின விசேஷம் 2:17
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.

1 கொரிந்தியர் 10:3
எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.

சங்கீதம் 78:24
மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

யோவான் 6:58
வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.

நெகேமியா 9:20
அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல்ல ஆவியைக் கட்டளையிட்டீர், அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.

யோசுவா 5:12
அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது: அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான் தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.

உபாகமம் 8:3
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

எண்ணாகமம் 11:6
இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத்தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்.

யாத்திராகமம் 16:35
இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும் வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.

யாத்திராகமம் 16:4
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.


Tags வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள்
John 6:31 in Tamil Concordance John 6:31 in Tamil Interlinear John 6:31 in Tamil Image