Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 24:49 in Tamil

Home Bible Luke Luke 24 Luke 24:49

லூக்கா 24:49
என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னத்ததிலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.

Tamil Indian Revised Version
என் பிதா வாக்குத்தத்தம் செய்ததை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் நிரப்பப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
கவனியுங்கள், என் பிதா உங்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை உங்களுக்கு அனுப்புவேன். விண்ணில் இருந்து அந்த வல்லமையை நீங்கள் பெறும்வரைக்கும் எருசலேமில் தங்கி இருக்கவேண்டும்” என்றார்.

Thiru Viviliam
இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள்” என்றார்.

Luke 24:48Luke 24Luke 24:50

King James Version (KJV)
And, behold, I send the promise of my Father upon you: but tarry ye in the city of Jerusalem, until ye be endued with power from on high.

American Standard Version (ASV)
And behold, I send forth the promise of my Father upon you: but tarry ye in the city, until ye be clothed with power from on high.

Bible in Basic English (BBE)
And now I will send to you what my father has undertaken to give you, but do not go from the town, till the power from heaven comes to you.

Darby English Bible (DBY)
And behold, I send the promise of my Father upon you; but do ye remain in the city till ye be clothed with power from on high.

World English Bible (WEB)
Behold, I send forth the promise of my Father on you. But wait in the city of Jerusalem until you are clothed with power from on high.”

Young’s Literal Translation (YLT)
`And, lo, I do send the promise of my Father upon you, but ye — abide ye in the city of Jerusalem till ye be clothed with power from on high.’

லூக்கா Luke 24:49
என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னத்ததிலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
And, behold, I send the promise of my Father upon you: but tarry ye in the city of Jerusalem, until ye be endued with power from on high.

καὶkaikay
ἰδού,idouee-THOO
ἐγὼegōay-GOH
ἀποστέλλωapostellōah-poh-STALE-loh
τὴνtēntane
ἐπαγγελίανepangelianape-ang-gay-LEE-an
τοῦtoutoo
πατρόςpatrospa-TROSE
μουmoumoo
ἐφ'ephafe
ὑμᾶς·hymasyoo-MAHS
ὑμεῖςhymeisyoo-MEES
δὲdethay
καθίσατεkathisateka-THEE-sa-tay
ἐνenane
τῇtay
πόλειpoleiPOH-lee
Ἰερουσαλήμ,ierousalēmee-ay-roo-sa-LAME
ἕωςheōsAY-ose
οὗhouoo
ἐνδύσησθεendysēstheane-THYOO-say-sthay
δύναμινdynaminTHYOO-na-meen
ἐξexayks
ὕψουςhypsousYOO-psoos

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:4
அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

யோவான் 14:26
என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

யோவேல் 2:28
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.

ஏசாயா 59:20
மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 44:3
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.

ஏசாயா 32:15
உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:1
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.

யோவான் 16:7
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

யோவான் 15:26
பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

யோவான் 14:16
நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.


Tags என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன் நீங்களோ உன்னத்ததிலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்
Luke 24:49 in Tamil Concordance Luke 24:49 in Tamil Interlinear Luke 24:49 in Tamil Image