Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 24:22 in Tamil

Home Bible Matthew Matthew 24 Matthew 24:22

மத்தேயு 24:22
அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.

Tamil Indian Revised Version
அந்த நாட்கள் குறைக்கப்படாமலிருந்தால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும்.

Tamil Easy Reading Version
“அக்கொடிய காலத்தை குறுகியதாக்க தேவன் முடிவு செய்துள்ளார். அவ்வாறு குறுகியதாகாவிடில், பின் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க முடியாது. ஆனால், தான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உதவ தேவன் அக்கொடிய காலத்தை குறுகியதாக்குவார்.

Thiru Viviliam
அந்நாள்கள் குறைக்கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்கமுடியாது. எனவே, தாம் தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டுக் கடவுள் அந்நாள்களைக் குறைப்பார்.

Matthew 24:21Matthew 24Matthew 24:23

King James Version (KJV)
And except those days should be shortened, there should no flesh be saved: but for the elect’s sake those days shall be shortened.

American Standard Version (ASV)
And except those days had been shortened, no flesh would have been saved: but for the elect’s sake those days shall be shortened.

Bible in Basic English (BBE)
And if those days had not been made short there would have been no salvation for any, but because of the saints those days will be made short.

Darby English Bible (DBY)
and if those days had not been cut short, no flesh had been saved; but on account of the elect those days shall be cut short.

World English Bible (WEB)
Unless those days had been shortened, no flesh would have been saved. But for the sake of the chosen ones, those days will be shortened.

Young’s Literal Translation (YLT)
And if those days were not shortened, no flesh would have been saved; but because of the chosen, shall those days be shortened.

மத்தேயு Matthew 24:22
அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.
And except those days should be shortened, there should no flesh be saved: but for the elect's sake those days shall be shortened.

καὶkaikay
εἰeiee
μὴmay
ἐκολοβώθησανekolobōthēsanay-koh-loh-VOH-thay-sahn
αἱhaiay
ἡμέραιhēmeraiay-MAY-ray
ἐκεῖναιekeinaiake-EE-nay
οὐκoukook
ἂνanan
ἐσώθηesōthēay-SOH-thay
πᾶσαpasaPA-sa
σάρξ·sarxSAHR-ks
διὰdiathee-AH
δὲdethay
τοὺςtoustoos
ἐκλεκτοὺςeklektousake-lake-TOOS
κολοβωθήσονταιkolobōthēsontaikoh-loh-voh-THAY-sone-tay
αἱhaiay
ἡμέραιhēmeraiay-MAY-ray
ἐκεῖναιekeinaiake-EE-nay

Cross Reference

மாற்கு 13:20
கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.

மத்தேயு 24:31
வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.

மத்தேயு 24:24
ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

ஏசாயா 65:8
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்.

2 தீமோத்தேயு 2:10
இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;

ரோமர் 11:25
மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.

ரோமர் 9:11
பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,

லுூக்கா 18:7
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?

மத்தேயு 22:14
அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

சகரியா 14:2
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.

சகரியா 13:8
தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.

ஏசாயா 6:13
ஆகிலும் அதில் இன்னும் பத்திலொரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.


Tags அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால் ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்
Matthew 24:22 in Tamil Concordance Matthew 24:22 in Tamil Interlinear Matthew 24:22 in Tamil Image