எசேக்கியேல் 20:4
மனுபுத்திரனே, நீ அவர்களுக்காக வழக்காடுவாயோ? வழக்காட மனதானால், நீ அவர்கள் பிதாக்களின் அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டி, அவர்களை நோக்கி:
Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, நீ அவர்களுக்காக வழக்காடுவாயோ? வழக்காட மனதிருந்தால், நீ அவர்கள் தகப்பன்மார்களுடைய அருவருப்புகளை அவர்களுக்கு காட்டி, அவர்களை நோக்கி:
Tamil Easy Reading Version
அவர்களை நியாயம்தீர்க்க வேண்டுமா? மனுபுத்திரனே, நீ அவர்களை நியாயம்தீர்க்கிறாயா? அவர்கள் பிதாக்கள் செய்த அருவருப்பான பாவங்களைப்பற்றி நீ சொல்ல வேண்டும்.
Thiru Viviliam
மானிடா! நீயே அவர்களுக்குத் தீர்ப்பளிக்கமாட்டாயா? நீயே அவர்களுக்குத் தீர்ப்புக் கூறமாட்டாயா? அவர்களுடைய மூதாதையரின் வெறுக்கத்தக்க செயல்களை அவர்கள் அறியச் செய்.
King James Version (KJV)
Wilt thou judge them, son of man, wilt thou judge them? cause them to know the abominations of their fathers:
American Standard Version (ASV)
Wilt thou judge them, son of man, wilt thou judge them? Cause them to know the abominations of their fathers;
Bible in Basic English (BBE)
Will you be their judge, O son of man, will you be their judge? make clear to them the disgusting ways of their fathers,
Darby English Bible (DBY)
Wilt thou judge them, wilt thou judge, son of man? Cause them to know the abominations of their fathers,
World English Bible (WEB)
Will you judge them, son of man, will you judge them? Cause them to know the abominations of their fathers;
Young’s Literal Translation (YLT)
Dost thou judge them? Dost thou judge, son of man? The abominations of their fathers cause them to know,
எசேக்கியேல் Ezekiel 20:4
மனுபுத்திரனே, நீ அவர்களுக்காக வழக்காடுவாயோ? வழக்காட மனதானால், நீ அவர்கள் பிதாக்களின் அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டி, அவர்களை நோக்கி:
Wilt thou judge them, son of man, wilt thou judge them? cause them to know the abominations of their fathers:
| הֲתִשְׁפֹּ֣ט | hătišpōṭ | huh-teesh-POTE | |
| אֹתָ֔ם | ʾōtām | oh-TAHM | |
| הֲתִשְׁפּ֖וֹט | hătišpôṭ | huh-teesh-POTE | |
| בֶּן | ben | ben | |
| אָדָ֑ם | ʾādām | ah-DAHM | |
| אֶת | ʾet | et | |
| תּוֹעֲבֹ֥ת | tôʿăbōt | toh-uh-VOTE | |
| אֲבוֹתָ֖ם | ʾăbôtām | uh-voh-TAHM | |
| הוֹדִיעֵֽם׃ | hôdîʿēm | hoh-dee-AME |
Cross Reference
எசேக்கியேல் 22:2
இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதால் நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி,
எசேக்கியேல் 23:36
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காட மனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு.
1 கொரிந்தியர் 6:2
பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
லுூக்கா 13:33
இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக, நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.
லுூக்கா 11:47
உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
மத்தேயு 23:29
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து,
எசேக்கியேல் 23:45
ஆகையால், விபசாரிகளை நியாயந்தீர்க்கிற பிரகாரமாகவும், இரத்தஞ்சிந்தும் ஸ்திரீகளை நியாயந்தீர்க்கிற பிரகாரமாகவும் நீதிமான்கள் அவர்களை நியாயந்தீர்ப்பார்கள்; அவர்கள் விபசாரிகள், அவர்களுடைய கைகளில் இரத்தம் இருக்கிறது.
எசேக்கியேல் 16:2
மனுபுத்திரனே, நீ எருசலேமின் அருவருப்புகளை அதற்கு அறிவித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
எசேக்கியேல் 14:20
நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
எசேக்கியேல் 14:14
அப்பொழுது நோவா, தானியேல், யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எரேமியா 15:1
கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது, இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு,
எரேமியா 14:11
கர்த்தர் என்னை நோக்கி: நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம்.
எரேமியா 11:14
ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம்பண்ணவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும்வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தினிமித்தம் என்னை நோக்கிக் கூப்பிடுங்காலத்திலே நான் அவர்களைக் கேளாதிருப்பேன்.
எரேமியா 7:16
நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை.
ஏசாயா 5:3
எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள்.
Tags மனுபுத்திரனே நீ அவர்களுக்காக வழக்காடுவாயோ வழக்காட மனதானால் நீ அவர்கள் பிதாக்களின் அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டி அவர்களை நோக்கி
Ezekiel 20:4 in Tamil Concordance Ezekiel 20:4 in Tamil Interlinear Ezekiel 20:4 in Tamil Image