Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 40:10 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 40 Jeremiah 40:10

எரேமியா 40:10
நானோவெனில், இதோ, நம்மிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று ஆணையிட்டுச் சொன்னான்.

Tamil Indian Revised Version
நானோவெனில், இதோ, நம்மிடத்தில் வருகிற கல்தேயரிடத்தில் பணியும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சைரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று வாக்குக்கொடுத்துச் சொன்னான்.

Tamil Easy Reading Version
நானும் மிஸ்பாவில் வாழ்வேன். நான் உங்களுக்காக இங்கே வந்த கல்தேயரிடம் பேசுவேன். நீங்கள் அந்த வேலையை எனக்கு விட்டுவிடுங்கள். நீங்கள் திராட்சைகளை அறுவடை செய்ய வேண்டும். கோடைப் பழங்களையும், எண்ணெயையும் எடுக்க வேண்டும். நீங்கள் எதை அறுவடை செய்கிறீர்களோ அவற்றை உங்கள் சேமிப்பு ஜாடிகளில் போட்டு வையுங்கள். உங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நகரங்களில் வாழுங்கள்.”

Thiru Viviliam
நானோ மிஸ்பாவில் தங்கியிருப்பேன்; நம்மிடம் வரவிருக்கும் கல்தேயர்முன் உங்கள் பிரதிநிதியாய் இருப்பேன்; நீங்கள் போய்த் திராட்சை இரசம், பழங்கள், எண்ணெய் முதலியவற்றைச் சேகரித்துப் பாத்திரங்களில் வையுங்கள். நீங்கள் கைப்பற்றியுள்ள நகர்களில் குடியிருங்கள்” என்று சொன்னார்.

Jeremiah 40:9Jeremiah 40Jeremiah 40:11

King James Version (KJV)
As for me, behold, I will dwell at Mizpah, to serve the Chaldeans, which will come unto us: but ye, gather ye wine, and summer fruits, and oil, and put them in your vessels, and dwell in your cities that ye have taken.

American Standard Version (ASV)
As for me, behold, I will dwell at Mizpah, to stand before the Chaldeans that shall come unto us: but ye, gather ye wine and summer fruits and oil, and put them in your vessels, and dwell in your cities that ye have taken.

Bible in Basic English (BBE)
As for me, I will be living in Mizpah as your representative before the Chaldaeans who come to us: but you are to get in your wine and summer fruits and oil and put them in your vessels, and make living-places for yourselves in the towns which you have taken.

Darby English Bible (DBY)
And as for me, behold, I dwell at Mizpah, to stand before the Chaldeans, who will come unto us; and ye, gather wine, and summer fruits, and oil, and put [them] in your vessels, and dwell in your cities which ye have taken.

World English Bible (WEB)
As for me, behold, I will dwell at Mizpah, to stand before the Chaldeans who shall come to us: but you, gather you wine and summer fruits and oil, and put them in your vessels, and dwell in your cities that you have taken.

Young’s Literal Translation (YLT)
and I, lo, I am dwelling in Mizpah, to stand before the Chaldeans who are come in unto us, and ye, gather ye wine, and summer fruit, and oil, and put in your vessels, and dwell in your cities that ye have taken.’

எரேமியா Jeremiah 40:10
நானோவெனில், இதோ, நம்மிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று ஆணையிட்டுச் சொன்னான்.
As for me, behold, I will dwell at Mizpah, to serve the Chaldeans, which will come unto us: but ye, gather ye wine, and summer fruits, and oil, and put them in your vessels, and dwell in your cities that ye have taken.

וַאֲנִ֗יwaʾănîva-uh-NEE
הִנְנִ֤יhinnîheen-NEE
יֹשֵׁב֙yōšēbyoh-SHAVE
בַּמִּצְפָּ֔הbammiṣpâba-meets-PA
לַֽעֲמֹד֙laʿămōdla-uh-MODE
לִפְנֵ֣יlipnêleef-NAY
הַכַּשְׂדִּ֔יםhakkaśdîmha-kahs-DEEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יָבֹ֖אוּyābōʾûya-VOH-oo
אֵלֵ֑ינוּʾēlênûay-LAY-noo
וְאַתֶּ֡םwĕʾattemveh-ah-TEM
אִסְפוּ֩ʾispûees-FOO
יַ֨יִןyayinYA-yeen
וְקַ֜יִץwĕqayiṣveh-KA-yeets
וְשֶׁ֗מֶןwĕšemenveh-SHEH-men
וְשִׂ֙מוּ֙wĕśimûveh-SEE-MOO
בִּכְלֵיכֶ֔םbiklêkembeek-lay-HEM
וּשְׁב֖וּûšĕbûoo-sheh-VOO
בְּעָרֵיכֶ֥םbĕʿārêkembeh-ah-ray-HEM
אֲשֶׁרʾăšeruh-SHER
תְּפַשְׂתֶּֽם׃tĕpaśtemteh-fahs-TEM

Cross Reference

எரேமியா 40:12
எல்லா யூதரும் தாங்கள் துரத்துண்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சரசத்தையும் பழங்களையும் மிகுதியாய்ச் சேர்த்துவைத்தார்கள்

எரேமியா 48:32
சிப்மாவூரின் திராட்சச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோயின; அவைகள் யாசேர் கடல்மட்டும் போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்த காலத்துப் பழங்களினின் மேலும், உன் திராட்சாப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்.

எரேமியா 39:10
காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.

எரேமியா 35:19
ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

ஏசாயா 16:9
ஆகையால் யாசேருக்காக அழுததுபோலே, சிப்மாஊர்த் திராட்சச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலேயே உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோயிற்று.

உபாகமம் 1:38
உனக்கு முன்பாக நிற்கிற நூனின் குமாரனாகிய யோசுவா அதில் பிரவேசிப்பான்; அவனைத் திடப்படுத்து; அவனே அதை இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகப் பங்கிடுவான்.

லுூக்கா 21:36
ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.

மீகா 7:1
ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்த முதல் அறுப்பின் கனியும் இல்லை.

எரேமியா 40:6
அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்.

நீதிமொழிகள் 22:29
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.

2 சாமுவேல் 16:1
தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனைச் சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், வற்றலான நூறு திராட்சப்பழக்குலைகளும், வசந்தகாலத்துப் பலனான நூறு குலைகளும், ஒரு துருத்தி திராட்சரசமும் இருந்தது.


Tags நானோவெனில் இதோ நம்மிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன் நீங்களோ போய் திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து உங்கள் பாண்டங்களில் வைத்து உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று ஆணையிட்டுச் சொன்னான்
Jeremiah 40:10 in Tamil Concordance Jeremiah 40:10 in Tamil Interlinear Jeremiah 40:10 in Tamil Image