ஏசாயா 24:11
திராட்சரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; எல்லாச் சந்தோஷமும் மங்கி, தேசத்தின் மகிழ்ச்சி அற்றுப்போம்.
Tamil Indian Revised Version
திராட்சைரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; அனைத்து சந்தோஷமும் குறைந்து, தேசத்தின் மகிழ்ச்சி இல்லாமல் போகும்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் இன்னும் சந்தை இடங்களில் திராட்சைரசத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அனைத்து மகிழ்ச்சியும் போய்விட்டன. சந்தோஷம் வெகு தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
Thiru Viviliam
⁽திராட்சை இரசத்திற்காகத்␢ தெருக்களில் கூச்சல் எழுகின்றது;␢ மகிழ்ச்சி எல்லாம் மங்கி மறைகின்றது;␢ விழாக்கள் நாட்டிலிருந்து அகற்றப்பட்டன.⁾
King James Version (KJV)
There is a crying for wine in the streets; all joy is darkened, the mirth of the land is gone.
American Standard Version (ASV)
There is a crying in the streets because of the wine; all joy is darkened, the mirth of the land is gone.
Bible in Basic English (BBE)
There is a crying in the streets because of the wine; there is an end of all delight, the joy of the land is gone.
Darby English Bible (DBY)
There is a crying for wine in the streets; all joy is darkened, the mirth of the land is gone;
World English Bible (WEB)
There is a crying in the streets because of the wine; all joy is darkened, the mirth of the land is gone.
Young’s Literal Translation (YLT)
A cry over the wine `is’ in out-places, Darkened hath been all joy, Removed hath been the joy of the land.
ஏசாயா Isaiah 24:11
திராட்சரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; எல்லாச் சந்தோஷமும் மங்கி, தேசத்தின் மகிழ்ச்சி அற்றுப்போம்.
There is a crying for wine in the streets; all joy is darkened, the mirth of the land is gone.
| צְוָחָ֥ה | ṣĕwāḥâ | tseh-va-HA | |
| עַל | ʿal | al | |
| הַיַּ֖יִן | hayyayin | ha-YA-yeen | |
| בַּֽחוּצ֑וֹת | baḥûṣôt | ba-hoo-TSOTE | |
| עָֽרְבָה֙ | ʿārĕbāh | ah-reh-VA | |
| כָּל | kāl | kahl | |
| שִׂמְחָ֔ה | śimḥâ | seem-HA | |
| גָּלָ֖ה | gālâ | ɡa-LA | |
| מְשׂ֥וֹשׂ | mĕśôś | meh-SOSE | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Cross Reference
நீதிமொழிகள் 31:6
மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;
மத்தேயு 22:11
விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒருமனுஷனை அங்கே கண்டு:
ஆமோஸ் 5:16
ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.
யோவேல் 1:15
அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.
ஓசியா 7:14
அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.
புலம்பல் 5:14
முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று.
எரேமியா 48:33
பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து சந்தோஷமும் களிப்பும் நீங்கிப்போயிற்று; திராட்சரசம் ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயப்பண்ணினேன்; ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை; அது ஆரவாரமேயல்லாமல் ஆலை மிதிக்கும் பாடலல்ல.
ஏசாயா 32:13
என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
ஏசாயா 24:7
திராட்சரசம் துக்கங்கொண்டாடும், திராட்சச்செடி வதங்கும்; மனக்களிப்பாயிருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சு விடுவார்கள்.
ஏசாயா 16:10
பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் அற்றுப்போயின; திராட்சத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் ரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயப்பண்ணினேன்.
ஏசாயா 9:19
சேனைகளின் கர்த்தருடைய சினத்தால் தேசம் அந்தகாரப்பட்டு, ஜனங்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடான்.
ஏசாயா 8:22
அவர்கள் அண்ணாந்து பார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.
லுூக்கா 16:25
அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
Tags திராட்சரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு எல்லாச் சந்தோஷமும் மங்கி தேசத்தின் மகிழ்ச்சி அற்றுப்போம்
Isaiah 24:11 in Tamil Concordance Isaiah 24:11 in Tamil Interlinear Isaiah 24:11 in Tamil Image