நீதிமொழிகள் 5:21
மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
Tamil Indian Revised Version
மனிதனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
Tamil Easy Reading Version
நீ செய்கிற அனைத்தையும் கர்த்தர் தெளிவாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். நீ எங்கே போகிறாய் என்று கவனிக்கிறார்.
Thiru Viviliam
மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை; அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்தூக்கிப் பார்க்கின்றார்.
King James Version (KJV)
For the ways of man are before the eyes of the LORD, and he pondereth all his goings.
American Standard Version (ASV)
For the ways of man are before the eyes of Jehovah; And he maketh level all his paths.
Bible in Basic English (BBE)
For a man’s ways are before the eyes of the Lord, and he puts all his goings in the scales.
Darby English Bible (DBY)
For the ways of man are before the eyes of Jehovah, and he pondereth all his paths.
World English Bible (WEB)
For the ways of man are before the eyes of Yahweh. He examines all his paths.
Young’s Literal Translation (YLT)
For over-against the eyes of Jehovah are the ways of each, And all his paths He is pondering.
நீதிமொழிகள் Proverbs 5:21
மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
For the ways of man are before the eyes of the LORD, and he pondereth all his goings.
| כִּ֤י | kî | kee | |
| נֹ֨כַח׀ | nōkaḥ | NOH-hahk | |
| עֵינֵ֣י | ʿênê | ay-NAY | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| דַּרְכֵי | darkê | dahr-HAY | |
| אִ֑ישׁ | ʾîš | eesh | |
| וְֽכָל | wĕkol | VEH-hole | |
| מַעְגְּלֹתָ֥יו | maʿgĕlōtāyw | ma-ɡeh-loh-TAV | |
| מְפַלֵּֽס׃ | mĕpallēs | meh-fa-LASE |
Cross Reference
எபிரெயர் 4:13
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
எரேமியா 16:17
என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை, அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.
நீதிமொழிகள் 15:3
கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.
யோபு 34:21
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
யோபு 31:4
அவர் என் வழிகளைப் பார்த்து என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ?
ஓசியா 7:2
அவர்கள் பொல்லாப்பையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சிந்திக்கிறதில்லை; இப்போதும் அவர்களுடைய கிரியைகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது; அவைகள் என் முகத்துக்கு முன் இருக்கிறது.
எரேமியா 32:19
யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய கிரியையின் பலனுக்குத் தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.
சங்கீதம் 11:4
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.
சங்கீதம் 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.
சங்கீதம் 119:168
உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.
சங்கீதம் 17:3
நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்திலே அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன்.
யோபு 14:16
இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர், என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
2 நாளாகமம் 16:9
தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் புத்தியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:23
அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
எரேமியா 17:10
கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கும், இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
எரேமியா 23:24
யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tags மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்
Proverbs 5:21 in Tamil Concordance Proverbs 5:21 in Tamil Interlinear Proverbs 5:21 in Tamil Image