2 இராஜாக்கள் 8:12
அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவனே, ஏன் அழுகிறீர் என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் மக்களுக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியால் அழுகிறேன்; நீ அவர்களுடைய கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்களுடைய வாலிபர்களைப் பட்டயத்தால் கொன்று, அவர்களுடைய குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிற்றைக் கிழித்துப்போடுவாய் என்றான்.
Tamil Easy Reading Version
ஆசகேல் அவனிடம், “ஐயா ஏன் அழுகிறீர்?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “நீ இஸ்ரவேலர்களுக்குச் செய்யப்போகும் தீமைகள் என்னென்ன என்பதை நான் அறிவேன். அதற்காக அழுகிறேன். நீ அவர்களின் கோட்டையுள்ள நகரங்களை எரிப்பாய். நீ வாளால் இளைஞர்களைக் கொல்வாய், குழந்தைகளைக் கொல்வாய், கருவிலுள்ள குழந்தைகளையும் கீறிப்போடுவாய்” என்றான்.
Thiru Viviliam
அசாவேல் அவரை நோக்கி, “என் தலைவரே, நீர் அழுவது ஏன்?” என்று கேட்டான். அதற்கு அவர், “நீ இஸ்ரயேல் மக்களுக்கு செய்யவிருக்கிற தீமைகளை நான் அறிவேன்; அவர்களின் கோட்டைகளைத் தீக்கிரையாக்குவாய்; அவர்களுடைய இளைஞர்களை வாளுக்கு இரையாக்குவாய்; அவர்களுடைய சிறு குழந்தைகளைத் தரையில் மோதிக் கொல்வாய்; அவர்களுடைய கருவுற்ற பெண்களின் வயிற்றைக் குத்திக் கிழிப்பாய்” என்றார்.
King James Version (KJV)
And Hazael said, Why weepeth my lord? And he answered, Because I know the evil that thou wilt do unto the children of Israel: their strong holds wilt thou set on fire, and their young men wilt thou slay with the sword, and wilt dash their children, and rip up their women with child.
American Standard Version (ASV)
And Hazael said, Why weepeth my lord? And he answered, Because I know the evil that thou wilt do unto the children of Israel: their strongholds wilt thou set on fire, and their young men wilt thou slay with the sword, and wilt dash in pieces their little ones, and rip up their women with child.
Bible in Basic English (BBE)
And Hazael said, Why is my lord weeping? Then he said in answer, Because I see the evil which you will do to the children of Israel: burning down their strong towns, putting their young men to death with the sword, smashing their little ones against the stones, and cutting open the women who are with child.
Darby English Bible (DBY)
And Hazael said, Why does my lord weep? And he said, Because I know the evil that thou wilt do to the children of Israel: their strongholds wilt thou set on fire, and their young men wilt thou kill with the sword, and wilt dash in pieces their children, and rip up their women with child.
Webster’s Bible (WBT)
And Hazael said, Why weepeth my lord? And he answered, Because I know the evil that thou wilt do to the children of Israel: their strong holds wilt thou set on fire, and their young men wilt thou slay with the sword, and wilt dash their children, and rip up their women with child.
World English Bible (WEB)
Hazael said, Why weeps my lord? He answered, Because I know the evil that you will do to the children of Israel: their strongholds will you set on fire, and their young men will you kill with the sword, and will dash in pieces their little ones, and rip up their women with child.
Young’s Literal Translation (YLT)
And Hazael saith, `Wherefore is my lord weeping?’ and he saith, `Because I have known the evil that thou dost to the sons of Israel — their fenced places thou dost send into fire, and their young men with sword thou dost slay, and their sucklings thou dost dash to pieces, and their pregnant women thou dost rip up.’
2 இராஜாக்கள் 2 Kings 8:12
அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்.
And Hazael said, Why weepeth my lord? And he answered, Because I know the evil that thou wilt do unto the children of Israel: their strong holds wilt thou set on fire, and their young men wilt thou slay with the sword, and wilt dash their children, and rip up their women with child.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| חֲזָאֵ֔ל | ḥăzāʾēl | huh-za-ALE | |
| מַדּ֖וּעַ | maddûaʿ | MA-doo-ah | |
| אֲדֹנִ֣י | ʾădōnî | uh-doh-NEE | |
| בֹכֶ֑ה | bōke | voh-HEH | |
| וַיֹּ֡אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| כִּֽי | kî | kee | |
| יָדַ֡עְתִּי | yādaʿtî | ya-DA-tee | |
| אֵ֣ת | ʾēt | ate | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| תַּֽעֲשֶׂה֩ | taʿăśeh | ta-uh-SEH | |
| לִבְנֵ֨י | libnê | leev-NAY | |
| יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| רָעָ֗ה | rāʿâ | ra-AH | |
| מִבְצְרֵיהֶ֞ם | mibṣĕrêhem | meev-tseh-ray-HEM | |
| תְּשַׁלַּ֤ח | tĕšallaḥ | teh-sha-LAHK | |
| בָּאֵשׁ֙ | bāʾēš | ba-AYSH | |
| וּבַחֻֽרֵיהֶם֙ | ûbaḥurêhem | oo-va-hoo-ray-HEM | |
| בַּחֶ֣רֶב | baḥereb | ba-HEH-rev | |
| תַּֽהֲרֹ֔ג | tahărōg | ta-huh-ROɡE | |
| וְעֹֽלְלֵיהֶ֣ם | wĕʿōlĕlêhem | veh-oh-leh-lay-HEM | |
| תְּרַטֵּ֔שׁ | tĕraṭṭēš | teh-ra-TAYSH | |
| וְהָרֹֽתֵיהֶ֖ם | wĕhārōtêhem | veh-ha-roh-tay-HEM | |
| תְּבַקֵּֽעַ׃ | tĕbaqqēaʿ | teh-va-KAY-ah |
Cross Reference
நாகூம் 3:10
ஆயினும் அவள் குடிவிலக்கப்பட்டுச் சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவள் குழந்தைகள் எல்லா வீதிகளின் முகனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள்பேரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.
ஓசியா 13:16
சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினபடியால், குற்றஞ் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகள் கீறப்பட்டுப்போவார்கள்.
2 இராஜாக்கள் 15:16
அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சாதொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லை என்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.
2 இராஜாக்கள் 13:3
ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.
2 இராஜாக்கள் 12:17
அதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்தான்; அதின்பின்பு எருசலேமுக்கு விரோதமாய்ப் போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான்.
ஆமோஸ் 1:13
கர்த்தர் சொல்லுகிறது என்னவன்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே.
ஏசாயா 13:16
அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள்.
2 இராஜாக்கள் 13:7
யோவாகாசுக்குச் சீரியாவின் ராஜா, ஐம்பது குதிரைவீரரையும், பத்து இரதங்களையும், பதினாயிரம் காலாட்களையுமே அல்லாமல், ஜனங்களில் வேறொன்றும் மீதியாக வைக்கவில்லை; அவன் அவர்களை அழித்துப் போரடிக்கும் இடத்துத் தூளைப்போல ஆக்கிப்போட்டான்.
ஆமோஸ் 1:3
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் அடித்தார்களே.
ஓசியா 10:14
ஆகையால் உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலை சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண்களும் அழிக்கப்படும்.
ஏசாயா 13:18
வில்லுகளால் இளைஞரைச் சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.
2 இராஜாக்கள் 10:32
அந்நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து,
சங்கீதம் 137:8
பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.
2 இராஜாக்கள் 4:28
அப்பொழுது அவள், நான் என் ஆண்டவனிடத்தில் ஒரு குமாரனை வேண்டும் என்று கேட்டதுண்டா? எனக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள்.
1 இராஜாக்கள் 18:13
யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?
Tags அப்பொழுது ஆசகேல் என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான் அதற்கு அவன் நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன் நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்
2 Kings 8:12 in Tamil Concordance 2 Kings 8:12 in Tamil Interlinear 2 Kings 8:12 in Tamil Image