இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.
சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபது முழநீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது.
அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி ஸ்தானச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுக்கட்டுகளைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.
கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்து முழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறு முழ அகலமும், மூன்றாவதாயிருக்கிறது ஏழுமுழ அகலமுமாயிருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காத படிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் புறம்பே ஒட்டுச்சுவர்களைக் கட்டுவித்தான்.
ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.
இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்.
அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக் கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டுவித்தான்; அவைகள் கேதுருமரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது.
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று; அவர்
இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.
அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை நாற்பதுமுழ நீளமாயிருந்தது.
ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.
looked upon | וַיַּ֧רְא | wayyar | va-YAHR |
And God | אֱלֹהִ֛ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
אֶת | ʾet | et | |
earth, the | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
and, behold, | וְהִנֵּ֣ה | wĕhinnē | veh-hee-NAY |
corrupt; was it | נִשְׁחָ֑תָה | nišḥātâ | neesh-HA-ta |
for | כִּֽי | kî | kee |
had | הִשְׁחִ֧ית | hišḥît | heesh-HEET |
corrupted | כָּל | kāl | kahl |
all flesh | בָּשָׂ֛ר | bāśār | ba-SAHR |
אֶת | ʾet | et | |
his way | דַּרְכּ֖וֹ | darkô | dahr-KOH |
upon | עַל | ʿal | al |
the earth. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |