1 கொரிந்தியர் 4:19
ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.
Tamil Indian Revised Version
ஆனாலும் கர்த்தருக்கு விருப்பமானால் நான் சீக்கிரமாக உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சை அல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.
Tamil Easy Reading Version
ஆனால் மிக விரைவில் உங்களிடம் வருவேன். தேவன் நான் வரவேண்டுமென விரும்பினால் நான் வருவேன். அப்போது தற் பெருமை பாராட்டுவோர் சொல்வதை அல்ல, செயலில் காட்டுவதைக் காண்பேன்.
Thiru Viviliam
ஆனால், ஆண்டவர் திருவுளம் கொண்டால் நான் உங்களிடம் விரைவிலேயே வருவேன். இறுமாப்புக் கொண்டுள்ள அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அல்ல, அவர்களால் என்ன செய்யமுடியும் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் போகிறேன்.
King James Version (KJV)
But I will come to you shortly, if the Lord will, and will know, not the speech of them which are puffed up, but the power.
American Standard Version (ASV)
But I will come to you shortly, if the Lord will; and I will know, not the word of them that are puffed up, but the power.
Bible in Basic English (BBE)
But I will come to you in a short time, if it is pleasing to the Lord, and I will take note, not of the word of those who are full of pride, but of the power.
Darby English Bible (DBY)
but I will come quickly to you, if the Lord will; and I will know, not the word of those that are puffed up, but the power.
World English Bible (WEB)
But I will come to you shortly, if the Lord is willing. And I will know, not the word of those who are puffed up, but the power.
Young’s Literal Translation (YLT)
but I will come quickly unto you, if the Lord may will, and I will know not the word of those puffed up, but the power;
1 கொரிந்தியர் 1 Corinthians 4:19
ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.
But I will come to you shortly, if the Lord will, and will know, not the speech of them which are puffed up, but the power.
| ἐλεύσομαι | eleusomai | ay-LAYF-soh-may | |
| δὲ | de | thay | |
| ταχέως | tacheōs | ta-HAY-ose | |
| πρὸς | pros | prose | |
| ὑμᾶς | hymas | yoo-MAHS | |
| ἐὰν | ean | ay-AN | |
| ὁ | ho | oh | |
| κύριος | kyrios | KYOO-ree-ose | |
| θελήσῃ | thelēsē | thay-LAY-say | |
| καὶ | kai | kay | |
| γνώσομαι | gnōsomai | GNOH-soh-may | |
| οὐ | ou | oo | |
| τὸν | ton | tone | |
| λόγον | logon | LOH-gone | |
| τῶν | tōn | tone | |
| πεφυσιωμένων | pephysiōmenōn | pay-fyoo-see-oh-MAY-none | |
| ἀλλὰ | alla | al-LA | |
| τὴν | tēn | tane | |
| δύναμιν· | dynamin | THYOO-na-meen |
Cross Reference
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:21
இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றிநடந்து, எருசலேமுக்குப்போகும்படி ஆவியில் நிருணயம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:21
வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு,
யாக்கோபு 4:15
ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.
எபிரெயர் 6:3
தேவனுக்குச் சித்தமானால் இப்படியேசெய்வோம்.
2 கொரிந்தியர் 13:1
இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.
2 கொரிந்தியர் 2:1
நான் துக்கத்துடனே உங்களிடத்தில் மறுபடியும் வராதபடிக்கு எனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டேன்.
2 கொரிந்தியர் 1:23
மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கு இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்.
2 கொரிந்தியர் 1:15
நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும்,
1 கொரிந்தியர் 16:5
நான் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.
1 கொரிந்தியர் 14:5
நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.
1 கொரிந்தியர் 11:34
நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.
1 கொரிந்தியர் 4:18
நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.
1 கொரிந்தியர் 2:6
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல,
ரோமர் 15:32
நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:2
அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்திசொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான்.
Tags ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்
1 Corinthians 4:19 in Tamil Concordance 1 Corinthians 4:19 in Tamil Interlinear 1 Corinthians 4:19 in Tamil Image