Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zephaniah 2:15 in Tamil

Home Bible Zephaniah Zephaniah 2 Zephaniah 2:15

செப்பனியா 2:15
நான்தான், என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப்போய்விட்டதே! அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.

Tamil Indian Revised Version
நான்தான், என்னைத் தவிர வெறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, பொறுப்பில்லாமல் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகங்கள் வசிக்குமிடமாகப் போய்விட்டதே! அதின் வழியாகப் போகிறவன் எவனும் தன் கைகளைத்தட்டி ஏளனம் செய்வான்.

Tamil Easy Reading Version
இப்பொழுது நினிவே மிகவும் பெருமிதமாக உள்ளது. இது அத்தகைய மகிழ்ச்சிகரமான நகரம். ஜனங்கள் தாம் பாதுகாப்புடன் இருப்பதாக நினைக்கிறார்கள். அவர்கள் நினிவேதான் உலகத்திலேயே மிகச் சிறந்த இடம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்நகரம் அழிக்கபடும். இது காலியான இடமாகி காட்டு மிருகங்கள் மட்டுமே ஓய்வெடுக்கச் செல்லும். ஜனங்கள் அந்த வழியாகக் கடந்து செல்லும்போது அதைப் பார்த்து பரிகசிப்பார்கள். அந்நகரம் எவ்வளவு மோசமாக அழிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி தங்கள் தலையை குலுக்குவார்கள்.

Thiru Viviliam
⁽“நான் ஒப்புயர்வு அற்றவன்” என்று␢ கவலையின்றிக் களிப்புற்றிருந்த␢ நகர் இதுதானோ?␢ இப்பொழுது அது␢ காட்டு விலங்குகளின் குகையாகி␢ எவ்வளவு பாழாய்ப் போயிற்று!␢ அதைக் கடந்துபோகும் ஒவ்வொருவனும்␢ சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான்.⁾

Zephaniah 2:14Zephaniah 2

King James Version (KJV)
This is the rejoicing city that dwelt carelessly, that said in her heart, I am, and there is none beside me: how is she become a desolation, a place for beasts to lie down in! every one that passeth by her shall hiss, and wag his hand.

American Standard Version (ASV)
This is the joyous city that dwelt carelessly, that said in her heart, I am, and there is none besides me: how is she become a desolation, a place for beasts to lie down in! every one that passeth by her shall hiss, and wag his hand.

Bible in Basic English (BBE)
This is the town which was full of joy, living without fear of danger, saying in her heart, I am, and there is no other: how has she been made waste, a place for beasts to take their rest in! everyone who goes by her will make hisses, waving his hand.

Darby English Bible (DBY)
This is the rejoicing city that dwelt in security, that said in her heart, I am, and there is none else beside me: how is she become a desolation, a couching-place for beasts! Every one that passeth by her shall hiss, shall wave his hand.

World English Bible (WEB)
This is the joyous city that lived carelessly, that said in her heart, “I am, and there is none besides me.” How she has become a desolation, a place for animals to lie down in! Everyone who passes by her will hiss, and shake their fists.

Young’s Literal Translation (YLT)
This `is’ the exulting city that is dwelling confidently, That is saying in her heart, `I `am’, and beside me there is none,’ How hath she been for a desolation, A crouching-place for beasts, Every one passing by her doth hiss, He doth shake his hand!

செப்பனியா Zephaniah 2:15
நான்தான், என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப்போய்விட்டதே! அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.
This is the rejoicing city that dwelt carelessly, that said in her heart, I am, and there is none beside me: how is she become a desolation, a place for beasts to lie down in! every one that passeth by her shall hiss, and wag his hand.

זֹ֞֠אתzōtzote
הָעִ֤ירhāʿîrha-EER
הָעַלִּיזָה֙hāʿallîzāhha-ah-lee-ZA
הַיּוֹשֶׁ֣בֶתhayyôšebetha-yoh-SHEH-vet
לָבֶ֔טַחlābeṭaḥla-VEH-tahk
הָאֹֽמְרָה֙hāʾōmĕrāhha-oh-meh-RA
בִּלְבָבָ֔הּbilbābāhbeel-va-VA
אֲנִ֖יʾănîuh-NEE
וְאַפְסִ֣יwĕʾapsîveh-af-SEE
ע֑וֹדʿôdode
אֵ֣יךְ׀ʾêkake
הָיְתָ֣הhāytâhai-TA
לְשַׁמָּ֗הlĕšammâleh-sha-MA
מַרְבֵּץ֙marbēṣmahr-BAYTS
לַֽחַיָּ֔הlaḥayyâla-ha-YA
כֹּ֚לkōlkole
עוֹבֵ֣רʿôbēroh-VARE
עָלֶ֔יהָʿālêhāah-LAY-ha
יִשְׁרֹ֖קyišrōqyeesh-ROKE
יָנִ֥יעַyānîaʿya-NEE-ah
יָדֽוֹ׃yādôya-DOH

Cross Reference

நாகூம் 3:19
உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காரியம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார்பேரிலேதான் பாயாமற்போயிற்று?

எசேக்கியேல் 28:2
மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.

எசேக்கியேல் 28:9
உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே,

ஏசாயா 47:7
என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக்காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய்.

ஏசாயா 22:2
சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை, யுத்தத்தில் செத்ததும் இல்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 18:7
அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்.

மத்தேயு 27:39
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:

எசேக்கியேல் 29:3
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,

எசேக்கியேல் 27:36
சகல ஜனங்களிலுமுள்ள வர்த்தகர் உன்பேரில் ஈசல்போடுவார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்.

புலம்பல் 2:15
வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.

புலம்பல் 2:1
ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார்.

புலம்பல் 1:1
ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே!

எரேமியா 19:8
இந்த நகரத்தைப் பாழாக்கவும், கூச்சலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் ஈசலிடுவான்.

ஏசாயா 32:9
சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.

ஏசாயா 14:4
நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!

ஏசாயா 10:12
ஆதால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும் அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.

சங்கீதம் 52:6
நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து அவனைப்பார்த்து நகைத்து:

யோபு 27:23
ஜனங்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவன் ஸ்தலத்தைவிட்டு வெருட்டிவிடுவார்கள்.

1 இராஜாக்கள் 9:7
நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்ததேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்கி, என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச் சொல்லாகவும் இருப்பார்கள்.


Tags நான்தான் என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப்போய்விட்டதே அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்
Zephaniah 2:15 in Tamil Concordance Zephaniah 2:15 in Tamil Interlinear Zephaniah 2:15 in Tamil Image