கர்த்தர் தனக்குக் கட்டளψயிΟ்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,
அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக் கட்டி,
அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து,
பின்பு மோசே, அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி,
அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தம்படுத்தும்படிக்கு அபிஷேகம் பண்ணி,
பாவநிவாரண பலிக்கான காளையைக் கொண்டு வந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்;
அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு அதைப் பரிசுத்தப்படுத்தினான்.
பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,
காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.
ஆட்டுக்கடா சந்து சந்தாகத் துண்டிக்கப் பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான்.
குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான சர்வாங்க தகனபலியாகத் தகனித்தான்.
கொழுப்பையும், வாலையும், குடல்கள்மேலிருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேலிருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து,
மோசே அபிஷேக தைலத்திலும், பலிபீடத்தின்மேலிருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவன் வஸ்திரங்கள் மேலும், அவன் குமாரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள்மேலும் தெளித்து, ஆரோனையும் அவன் வஸ்திரங்களையும், அவன் குமாரரையும் அவன் குமாரரின் வஸ்திரங்களையும் பரிசுத்தப்படுத்தினான்.
Take | קַ֤ח | qaḥ | kahk |
אֶֽת | ʾet | et | |
Aaron | אַהֲרֹן֙ | ʾahărōn | ah-huh-RONE |
and his sons | וְאֶת | wĕʾet | veh-ET |
with | בָּנָ֣יו | bānāyw | ba-NAV |
garments, the and him, | אִתּ֔וֹ | ʾittô | EE-toh |
oil, and the | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
anointing | הַבְּגָדִ֔ים | habbĕgādîm | ha-beh-ɡa-DEEM |
bullock a and | וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE |
for the sin offering, | שֶׁ֣מֶן | šemen | SHEH-men |
and two | הַמִּשְׁחָ֑ה | hammišḥâ | ha-meesh-HA |
rams, | וְאֵ֣ת׀ | wĕʾēt | veh-ATE |
and a basket | פַּ֣ר | par | pahr |
of unleavened bread; | הַֽחַטָּ֗את | haḥaṭṭāt | ha-ha-TAHT |
וְאֵת֙ | wĕʾēt | veh-ATE | |
שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY | |
הָֽאֵילִ֔ים | hāʾêlîm | ha-ay-LEEM | |
וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE | |
סַ֥ל | sal | sahl | |
הַמַּצּֽוֹת׃ | hammaṣṣôt | ha-ma-tsote |