எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.
நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?
நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவளை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள்.
கோதுமையை விதைத்தார்கள், முள்ளுகளை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பிரயோஜனமடையார்கள்; கர்த்தருடைய உக்கிரகோபத்தினால் உங்களுக்கு வரும்பலனைக்குறித்து வெட்கப்படுங்கள்.
இதோ நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்.
அப்புறம் அவர்கள் என் ஜனத்துக்குப் பாகாலின்மேல் ஆணையிடக் கற்றுக்கொடுத்ததுபோல, கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு என்று சொல்லி, என் நாமத்தின்மேல் ஆணையிடும்படி என் ஜனத்தின் வழிகளை நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்கள் என் ஜனத்தின் நடுவிலே ஊன்றக்கட்டப்படுவார்கள்.
But if | וְאִ֖ם | wĕʾim | veh-EEM |
they will not | לֹ֣א | lōʾ | loh |
obey, | יִשְׁמָ֑עוּ | yišmāʿû | yeesh-MA-oo |
utterly will I | וְנָ֨תַשְׁתִּ֜י | wĕnātaštî | veh-NA-tahsh-TEE |
nation, | אֶת | ʾet | et |
that up | הַגּ֥וֹי | haggôy | HA-ɡoy |
pluck | הַה֛וּא | hahûʾ | ha-HOO |
destroy | נָת֥וֹשׁ | nātôš | na-TOHSH |
and | וְאַבֵּ֖ד | wĕʾabbēd | veh-ah-BADE |
saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |