Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 46:9 in Tamil

Home Bible Psalm Psalm 46 Psalm 46:9

சங்கீதம் 46:9
அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

Tamil Indian Revised Version
அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

Tamil Easy Reading Version
பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர். வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார். இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.

Thiru Viviliam
⁽உலகின் கடையெல்லைவரை␢ போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்;␢ வில்லை ஒடிக்கின்றார்;␢ ஈட்டியை முறிக்கின்றார்.␢ தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார்.⁾

Psalm 46:8Psalm 46Psalm 46:10

King James Version (KJV)
He maketh wars to cease unto the end of the earth; he breaketh the bow, and cutteth the spear in sunder; he burneth the chariot in the fire.

American Standard Version (ASV)
He maketh wars to cease unto the end of the earth; He breaketh the bow, and cutteth the spear in sunder; He burneth the chariots in the fire.

Bible in Basic English (BBE)
He puts an end to wars over all the earth; by him the bow is broken, and the spear cut in two, and the carriage burned in the fire.

Darby English Bible (DBY)
He hath made wars to cease unto the end of the earth; he breaketh the bow, and cutteth the spear in sunder; he burneth the chariots in the fire.

Webster’s Bible (WBT)
Come, behold the works of the LORD, what desolations he hath made in the earth.

World English Bible (WEB)
He makes wars cease to the end of the earth. He breaks the bow, and shatters the spear. He burns the chariots in the fire.

Young’s Literal Translation (YLT)
Causing wars to cease, Unto the end of the earth, the bow he shivereth, And the spear He hath cut asunder, Chariots he doth burn with fire.

சங்கீதம் Psalm 46:9
அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.
He maketh wars to cease unto the end of the earth; he breaketh the bow, and cutteth the spear in sunder; he burneth the chariot in the fire.

מַשְׁבִּ֥יתmašbîtmahsh-BEET
מִלְחָמוֹת֮milḥāmôtmeel-ha-MOTE
עַדʿadad
קְצֵ֪הqĕṣēkeh-TSAY
הָ֫אָ֥רֶץhāʾāreṣHA-AH-rets
קֶ֣שֶׁתqešetKEH-shet
יְ֭שַׁבֵּרyĕšabbērYEH-sha-bare
וְקִצֵּ֣ץwĕqiṣṣēṣveh-kee-TSAYTS
חֲנִ֑יתḥănîthuh-NEET
עֲ֝גָל֗וֹתʿăgālôtUH-ɡa-LOTE
יִשְׂרֹ֥ףyiśrōpyees-ROFE
בָּאֵֽשׁ׃bāʾēšba-AYSH

Cross Reference

ஏசாயா 2:4
அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

1 சாமுவேல் 2:4
பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள்.

மீகா 5:10
அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்து, உன் இரதங்களை அழித்து,

மீகா 4:3
அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

எசேக்கியேல் 39:3
உன் வில்லை உன் இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, உன் அம்புகளை வலதுகையிலிருந்து விழப்பண்ணுவேன்.

ஏசாயா 60:18
இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.

ஏசாயா 11:9
என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தில் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

சங்கீதம் 76:3
அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா.)

யோசுவா 11:9
யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்.

யோசுவா 11:6
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக, நாளை இந்நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டுண்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் என்றார்.

எசேக்கியேல் 39:9
இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியே போய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும் வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழுவருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.


Tags அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார் வில்லை ஒடித்து ஈட்டியை முறிக்கிறார் இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்
Psalm 46:9 in Tamil Concordance Psalm 46:9 in Tamil Interlinear Psalm 46:9 in Tamil Image