Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 33:14 in Tamil

Home Bible Psalm Psalm 33 Psalm 33:14

சங்கீதம் 33:14
தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.

Tamil Indian Revised Version
தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்.

Tamil Easy Reading Version
அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார்.

Thiru Viviliam
⁽தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து␢ உலகெங்கும் வாழ்வோரைக் § கூர்ந்து நோக்குகின்றார்.⁾

Psalm 33:13Psalm 33Psalm 33:15

King James Version (KJV)
From the place of his habitation he looketh upon all the inhabitants of the earth.

American Standard Version (ASV)
From the place of his habitation he looketh forth Upon all the inhabitants of the earth,

Bible in Basic English (BBE)
From his house he keeps watch on all who are living on the earth;

Darby English Bible (DBY)
From the place of his habitation he looketh forth upon all the inhabitants of the earth;

Webster’s Bible (WBT)
From the place of his habitation he looketh upon all the inhabitants of the earth.

World English Bible (WEB)
From the place of his habitation he looks out on all the inhabitants of the earth,

Young’s Literal Translation (YLT)
From the fixed place of His dwelling, He looked unto all inhabitants of the earth;

சங்கீதம் Psalm 33:14
தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.
From the place of his habitation he looketh upon all the inhabitants of the earth.

מִֽמְּכוֹןmimmĕkônMEE-meh-hone
שִׁבְתּ֥וֹšibtôsheev-TOH
הִשְׁגִּ֑יחַhišgîaḥheesh-ɡEE-ak
אֶ֖לʾelel
כָּלkālkahl
יֹשְׁבֵ֣יyōšĕbêyoh-sheh-VAY
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

Cross Reference

1 இராஜாக்கள் 8:39
உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,

1 இராஜாக்கள் 8:27
தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

1 இராஜாக்கள் 8:30
உமது அடியானும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பஞ் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே அதை நீர் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.

1 இராஜாக்கள் 8:43
உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.

சங்கீதம் 123:1
பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.

ஏசாயா 57:15
நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.

ஏசாயா 66:1
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?

லுூக்கா 11:2
அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும் போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;

1 தீமோத்தேயு 6:16
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.


Tags தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்
Psalm 33:14 in Tamil Concordance Psalm 33:14 in Tamil Interlinear Psalm 33:14 in Tamil Image