சங்கீதம் 135:9
எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.
Tamil Indian Revised Version
எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.
Tamil Easy Reading Version
எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார். பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் தேவன் அக்காரியங்களை நிகழப்பண்ணினார்.
Thiru Viviliam
⁽எகிப்து நாடே! உன் நடுவில்␢ பார்வோனையும் அவனுடைய␢ எல்லா ஊழியர்களையும் தண்டிக்குமாறு,␢ அடையாளங்களையும்␢ அருஞ்செயல்களையும்␢ அவர் நிகழச் செய்தார்.⁾
King James Version (KJV)
Who sent tokens and wonders into the midst of thee, O Egypt, upon Pharaoh, and upon all his servants.
American Standard Version (ASV)
Who sent signs and wonders into the midst of thee, O Egypt, Upon Pharaoh, and upon all his servants;
Bible in Basic English (BBE)
He sent signs and wonders among you, O Egypt, on Pharaoh, and on all his servants.
Darby English Bible (DBY)
Who sent signs and miracles into the midst of thee, O Egypt, upon Pharaoh and upon all his servants;
World English Bible (WEB)
Who sent signs and wonders into the midst of you, Egypt, On Pharaoh, and on all his servants;
Young’s Literal Translation (YLT)
He sent tokens and wonders into thy midst, O Egypt, On Pharaoh and on all his servants.
சங்கீதம் Psalm 135:9
எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.
Who sent tokens and wonders into the midst of thee, O Egypt, upon Pharaoh, and upon all his servants.
| שָׁלַ֤ח׀ | šālaḥ | sha-LAHK | |
| אֹתֹ֣ות | ʾōtōwt | oh-TOVE-t | |
| וּ֭מֹפְתִים | ûmōpĕtîm | OO-moh-feh-teem | |
| בְּתוֹכֵ֣כִי | bĕtôkēkî | beh-toh-HAY-hee | |
| מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem | |
| בְּ֝פַרְעֹ֗ה | bĕparʿō | BEH-fahr-OH | |
| וּבְכָל | ûbĕkāl | oo-veh-HAHL | |
| עֲבָדָֽיו׃ | ʿăbādāyw | uh-va-DAIV |
Cross Reference
சங்கீதம் 136:15
பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
உபாகமம் 6:22
கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன்மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் விளங்கப்பண்ணி,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:36
இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
எரேமியா 32:20
இஸ்ரவேலிலும் மற்ற மனுஷருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் விளங்குகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்திலே செய்து, இந்நாளில் நிற்கும் கீர்த்தியை உமக்கு உண்டாக்கி,
ஏசாயா 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?
சங்கீதம் 105:27
இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
சங்கீதம் 78:43
அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
நெகேமியா 9:10
பார்வோனிடத்திலும், அவனுடைய எல்லா ஊழியக்காரரிடத்திலும், அவன் தேசத்தின் சகல ஜனத்தினிடத்திலும், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தீர்; அவர்கள் உமது ஜனங்களை அகந்தையாய் நடத்தினார்கள் என்பதை அறிந்திருந்தீர்; இப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி உமக்குக் கீர்த்தியை உண்டாக்கினீர்.
உபாகமம் 4:34
அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.
யாத்திராகமம் 7:1
கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.
Tags எகிப்துதேசமே உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்
Psalm 135:9 in Tamil Concordance Psalm 135:9 in Tamil Interlinear Psalm 135:9 in Tamil Image