Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 109:31 in Tamil

Home Bible Psalm Psalm 109 Psalm 109:31

சங்கீதம் 109:31
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.

Tamil Indian Revised Version
தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார்.

Tamil Easy Reading Version
ஏனெனில் கர்த்தர் திக்கற்றோருக்கு சார்பாக இருக்கிறார். அவர்களை மரணத்திற்கென்று குற்றம்சாட்ட முயல்வோரிடமிருந்து தேவன் அவர்களைக் காப்பாற்றுகிறார்.

Thiru Viviliam
⁽ஏனெனில், வறியோரின் வலப்பக்கம்␢ அவர் நிற்கின்றார்;␢ தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து␢ அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார்.⁾

Psalm 109:30Psalm 109

King James Version (KJV)
For he shall stand at the right hand of the poor, to save him from those that condemn his soul.

American Standard Version (ASV)
For he will stand at the right hand of the needy, To save him from them that judge his soul. Psalm 110 A Psalm of David.

Bible in Basic English (BBE)
For he is ever at the right hand of the poor, to take him out of the hands of those who go after his soul.

Darby English Bible (DBY)
For he standeth at the right hand of the needy, to save him from those that judge his soul.

World English Bible (WEB)
For he will stand at the right hand of the needy, To save him from those who judge his soul.

Young’s Literal Translation (YLT)
For He standeth at the right hand of the needy, To save from those judging his soul.

சங்கீதம் Psalm 109:31
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.
For he shall stand at the right hand of the poor, to save him from those that condemn his soul.

כִּֽיkee
יַ֭עֲמֹדyaʿămōdYA-uh-mode
לִימִ֣יןlîmînlee-MEEN
אֶבְי֑וֹןʾebyônev-YONE
לְ֝הוֹשִׁ֗יעַlĕhôšîaʿLEH-hoh-SHEE-ah
מִשֹּׁפְטֵ֥יmiššōpĕṭêmee-shoh-feh-TAY
נַפְשֽׁוֹ׃napšônahf-SHOH

Cross Reference

சங்கீதம் 16:8
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.

சங்கீதம் 121:5
கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.

சங்கீதம் 73:23
ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.

சங்கீதம் 110:5
உம்முடைய வலது பாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:30
நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:10
உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானானென்று உங்களுக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.

ஏசாயா 54:17
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.

பிரசங்கி 5:8
ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.

நீதிமொழிகள் 22:22
ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.

சங்கீதம் 140:12
சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.

சங்கீதம் 109:16
அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.

சங்கீதம் 72:12
கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.

சங்கீதம் 72:4
ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.

சங்கீதம் 68:5
தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.

சங்கீதம் 10:14
அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே.

யாத்திராகமம் 22:22
விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;


Tags ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்
Psalm 109:31 in Tamil Concordance Psalm 109:31 in Tamil Interlinear Psalm 109:31 in Tamil Image