மாரநாதா இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா
வாரும் நாதா இயேசு நாதா (2)
1. மன்னவன் உம்மைக் கண்டு
மறுரூபம் ஆகணுமே
விண்ணவர் கூட்டத்தோடு-நான்
எந்நாளும் பாடணுமே
2. குடிவெறி களியாட்டம்
அடியோடு அகற்றிவிட்டேன்
சண்டைகள் பொறாமைகள்-நான்
என்றோ வெறுத்துவிட்டேன்
3. பெருமை பாரட்டுகள்
ஒருநாளும் வேண்டாம் ஐயா
சிற்றின்பம் பணமயக்கம்
சிறிதளவு வேண்டாம் ஐயா
4. நியமித்த ஓட்டத்திலே
நித்தம் நான் ஓடிடுவேன்
நித்திய கிரீடம்தனை நிச்சயமாய்
பெற்றுக்கொள்வேன்
5. ஆவியில் நிரம்பிவிடுவேன்
அயராது ஜெபித்திடுவேன்
அப்பாவின் சுவிசேஷம்
எப்போதும் முழங்கிடுவேன்
6. உம் முகம் பார்க்கணுமே
உம் அருகில் இருக்கணுமே
உம்பாதம் அமரணுமே
உம் குரல் கேட்கணுமே!!
Maaranathaa Yesu Lyrics in English
Maaranaathaa Yesu naathaa seekkiram vaarum aiyaa vaarum naathaa Yesu naathaa (2) 1. Mannavan ummaik kanndu maraுroopam aakanumae vinnnavar koottaththodu-naan ennaalum paadanumae 2. Kutiveri kaliyaattam atiyodu akattivittaேn sanntaikal poraamaikal-naan ento veraுththuvittaேn 3. Perumai paarattukal orunaalum vaenndaam aiyaa sittinpam panamayakkam sirithalavu vaenndaam aiyaa 4. Niyamiththa ottaththilae niththam naan odiduvaen niththiya kireedamthanai nichchayamaay pettaுkkolvaen 5. Aaviyil nirampividuvaen ayaraathu jepiththiduvaen appaavin Suvisesham eppothum mulangiduvaen 6. Um mukam paarkkanumae um arukil irukkanumae umpaatham amaranumae um kural kaetkanumae!!
PowerPoint Presentation Slides for the song Maaranathaa Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maaranathaa Yesu – மாரநாதா இயேசு நாதா PPT
Maaranathaa Yesu PPT

