Full Screen ?
 

Deva Enai Marakathae - தேவா எனைமறக்காதே

பல்லவி

தேவா எனைமறக்காதே,-இந்தச்
சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே.

அனுபல்லவி

நேயா உனையன்றி நீசனுக்கார் கதி?
தூயா கிருபைகூர், நான் மகாதோஷி. – தேவா

சரணங்கள்

1. வானுலகோர்தொழும் நாதா!-இந்த
மானிடர்கரையேற வந்தசகாயா!
காலைமாலைகள்தோறும் கரைந்து உருகுகின்ற
கர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா? – தேவா

2. பாவியின் மேலிரங்கையா!-பொல்லாப்
பாதகனைக்கைவிடாதே நலமெய்யா!
தாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத்
தாங்கியாதரித்துந்தன் தயைபுரி ஐயா! – தேவா

3. என்மீறுதல் நினையாதே, எந்தன்
இளமையின் பாவத்தை மனதில்வையாதே.
உன்பாதஞ்சேர்ந்தேன், உவந்தேனுனையடைந்தேன்,
நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன். – தேவா

4. நெருக்கப்படுகிறேன் தேவா,-என்னை
உருக்கமாய்ப் பாராய், கிறிஸ்தேசுநாதா!
இரக்கம் வைத்தென்றனின் குறைதனை நீக்கு,
என்னை ஆட்கொண்டவா, இயேசு சர்வேசா! – தேவா

5. சரணம், சரணம் சருவேசா!-இந்தத்
தருணம், தருணம் உன்றன் கருணை கூர் நேசா!
மரணவேளையிலும் நடுத்தீர்வை தினத்திலும்
மாபாதகன் எனை ரட்சியாய் நாதா! – தேவா

Deva Enai Marakathae – தேவா எனைமறக்காதே Lyrics in English

Pallavi

Thaevaa enaimarakkaathae,-inthach
Siriyan padunthuyaril thooranirkaathae.

Anupallavi

Naeyaa unaiyanti neesanukkaar kathi?
Thooyaa kirupaikoor, naan makaathoshi. – thaevaa

Saranangal

1. Vaanulakortholum naathaa!-intha
Maanidarkaraiyaera vanthasakaayaa!
Kaalaimaalaikalthoraுm karainthu urukukinta
Karmasanndaalanaik kannnnokka laakaathaa? – thaevaa

2. Paaviyin maelirangaiyaa!-pollaap
Paathakanaikkaividaathae nalameyyaa!
Thaarannithannil thavikkumivvaelaiyaith
Thaangiyaathariththunthan thayaipuri aiyaa! – thaevaa

3. Enmeeraுthal ninaiyaathae, enthan
Ilamaiyin paavaththai manathilvaiyaathae.
Unpaathanjaernthaen, uvanthaenunaiyatainthaen,
Ninpaathanthaanae nilaiyaakakkanntaen. – thaevaa

4. Nerukkappadukiraேn thaevaa,-ennai
Urukkamaayp paaraay, kiristhaesunaathaa!
Irakkam vaiththentanin kuraithanai neekku,
Ennai aatkonndavaa, Yesu sarvaesaa! – thaevaa

5. Saranam, saranam saruvaesaa!-inthath
Tharunam, tharunam untan karunnai koor naesaa!
Maranavaelaiyilum naduththeervai thinaththilum
Maapaathakan enai ratchiyaay naathaa! – thaevaa

PowerPoint Presentation Slides for the song Deva Enai Marakathae – தேவா எனைமறக்காதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Enai Marakathae – தேவா எனைமறக்காதே PPT
Deva Enai Marakathae PPT

தேவா சரணம் தருணம் பல்லவி எனைமறக்காதேஇந்தச் சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே அனுபல்லவி நேயா உனையன்றி நீசனுக்கார் கதி தூயா கிருபைகூர் மகாதோஷி சரணங்கள் வானுலகோர்தொழும் நாதாஇந்த தமிழ்